12000க்கு செருப்பு வாங்குற அளவுக்கு பணக்காரி.! தனம் பற்றிய உண்மைகளை போட்டு உடைத்த நண்பர்கள்.!

 12000க்கு செருப்பு வாங்குற அளவுக்கு பணக்காரி.! தனம் பற்றிய உண்மைகளை போட்டு உடைத்த நண்பர்கள்.!


பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள தனலெட்சுமி பற்றிய உண்மைகளை அவரது நண்பர்கள் கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிக்பாஸில் தான் ஒரு ஏழை, அப்பா இல்லாதவர் என்று தனலெட்சுமி கூறிய அனைத்தும் பொய் என்றும், அவரது உண்மையான பெயர் தனலெட்சுமியே இல்லை என்றும் பல உண்மைகளை போட்டு உடைத்துள்ளனர் அவரது நண்பர்கள். மேலும் தனலெட்சுமி இரண்டு படங்களை அவரே தயாரித்து இருப்பதாகவும் அவர்கள் பல உண்மைகளை கூறியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தனலெட்சுமி. இவர் டிக்டாக் செய்து வந்ததன் மூலமாக மிகப்பிரபலமானார். இந்த முறை பிக்பாஸில் பொதுமக்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பதால் தனலெட்சுமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பித்த நாள் முதலே சண்டை சர்ச்சரவு என இருந்து வருகிறார் தனலெட்சுமி. இரண்டாவது வாரம் நடந்த பொம்மை டாஸ்க்கில் அவர் ஷெரினாவை பிடித்து கீழே தள்ளிவிட்டார் என்று அசீம் குற்றம்சாட்டினார். ஆனால் தன் மீது தவறில்லை என்றும், குறும்படம் வேண்டும் என்றும் கேட்டு அதை நிரூபித்தும் இருந்தார். இதனால் தனலெட்சுமியின் மீது சற்று மரியாதை கூடியது. தற்போது மீண்டும் மரியாதையை கெடுத்துக் கொள்ளும் விதமாக அனைத்து ஹவுஸ்மேட்ஸிடம் தேவையில்லாமல் சண்டை போட்டும் கத்தியும் வருகிறார். இன்று நடந்த பேக்டரி டாஸ்க்கில் கூட மணியிடம் சரியான சண்டை போட்டுள்ளார் தனலெட்சுமி. இந்த வாரம் நாமிஷேனில் தனலெட்சுமி இருக்கும் நிலையில் தனலெட்சுமி பற்றி அவரது நண்பர்கள் பேசும் காணொலி இணையத்தில் வைரலாகத் தொடங்கியது.
தனலெட்சுமி கதை சொல்லும் டாஸ்க்கில், தனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான் என கூறியிருந்தார். மேலும் தனக்கு துணி வாங்க கூட காசில்லை. கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டு துணிகளை வாங்கி வந்தேன் என்று கூறியிருந்தார். ஆனால் அது எதுவுமே உண்மை இல்லை அவர்கள் மறுத்துள்ளனர். தனலெட்சுமி என்பது அவரது உண்மையான பெயரே கிடையாது, அவர் பெயர் சுகி. இரண்டு படங்களை சொந்தமாக தயாரித்து இருக்கிறார். ஆனால் இரண்டு படங்களும் வெளிவரவில்லை. ஒரு படத்தின் புரோமஷனுக்காக விருது வழங்கும் விழாவை தனலெட்சுமி நடத்தியுள்ளார். அப்போது தொடங்கி பழக்கமானவர்கள் தான் தற்போது தனலெட்சுமி பற்றி பேட்டி கொடுத்து இருக்கும் அந்த நண்பர்கள். மேலும் அவரது தாய் துணிக்கடை நடத்தி வருவதாகவும், பைனான்ஸ் செய்து வருவதாகவும் தனலெட்சுமியின் நண்பர்கள் கூறினர்.


MLM நடத்தி பண மோசடியில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி இருக்கிறார். அவரது தாயார் தான் அவளின் இரண்டு படங்களை தயாரித்தார். மேலும் தனலட்சுமி 12,000 ரூபாய்க்கு செருப்பு மட்டும் வாங்குவார். அவர் மிகப்பெரிய வீட்டில் வசித்து வருகிறார். அவர் பிக்பாஸ்ஸில் அவரைப் பற்றி சொன்ன அனைத்தும் பொய் என்றும் தனலெட்சுமியின் நண்பர்கள் கூறினர். தனலெட்சுமியால் எங்கள் வாழ்க்கையே நாசமாக போய்விட்டது. அவள் நண்பன் இல்லை துரோகி என அவரைப்பற்றி கடுமையாக பேசியுள்ளனர். தனலெட்சுமியின் உண்மை முகத்தை அவரது நண்பர்களே பேசியிருக்கும் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...