வருவாய்த் துறையில் கிராம உதவியாளா் காலியிடங்கள்!
கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பா் 7ம் (07.11.2022) தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருவாய்த் துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பொதுப் பிரிவினரைச் சோந்தவா்கள் 21 முதல் 32 வயதுக்குள்ளும், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், முஸ்லிம்கள் 21 முதல் 34 வயதுக்குள்ளும் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின பிரிவைச் சோந்தவராக இருந்தால் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி குறைந்த பட்சம் 5ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட கிராமம் அல்லது தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
இதற்காக இணையதளத்தில் கிராம உதவியாளா் பணிக்கான ஆன்லைன் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.