தங்கச்சி மாதிரி பார்த்தேன்”கொதித்தெழுந்த ஏ.டி.கே..காரணம்? அந்தப் போட்டியாளர்

 கொச்சைப்படுத்துறீங்க, "தங்கச்சி மாதிரி பார்த்தேன்”கொதித்தெழுந்த ஏ.டி.கே..காரணம்? அந்தப் போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்லவர் போல முகமூடி அணிந்தவர் யார் என்று பிக் பாஸ் ஜனனியிடம் கேள்வி கேட்டதற்கு ஜனனி கூறிய பதிலை கேட்டு ஏடிகே கண்கலங்கியபடி கதறி இருக்கிறார்.

நான் தங்கச்சி மாதிரி நினைத்த பொண்ணே இப்படி பேசி விட்டதே என்று ஏடிகே புலம்பி தள்ளி கொண்டிருக்கிறார்.

ஏடிகேக்கு கிடைத்த திடீர் தாக்குதல்

பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளும் விவாதங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் மேலும் நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு பிக் பாஸ் பிளான் போட்டு காயை நகர்த்தி இருக்கின்றனர். அதில் மாட்டியிருப்பவர் ஜனனி ஆனால் அவர் ஏடிகேவை கோர்த்து விட்டிருக்கிறார். எதிர்பாராத திடீர் தாக்குதலால் ஏடிகே சென்டிமென்ட் சீன் ஓடவிட்டு இருக்கிறார்.

கடைக்குட்டி ஜனனிபிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்பு ஜெயிக்கும் என்கிற கூட்டணியும், அக்கா தங்கை என்கிற கூட்டணியும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்கிற கூட்டணியும் ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆறாவது சீசனில் அண்ணன் தங்கை கூட்டணி ஒர்க் அவுட் ஆகுமா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியும். ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கியூட்டான சுட்டிக் குழந்தையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆறாவது சீசனில் அனைவரையும் விடவும் ஜனனிதான் வயது குறைந்தவர் என்பதால் எல்லோரிடமும் ஒரு குழந்தை போல சேட்டை செய்து கொண்டு துருதுருவென வலம் வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்லவர் போல முகமூடி அணிந்தவர் யார் என்று பிக் பாஸ் ஜனனியிடம் கேள்வி கேட்டதற்கு ஜனனி கூறிய பதிலை கேட்டு ஏடிகே கண்கலங்கியபடி கதறி இருக்கிறார்.

நான் தங்கச்சி மாதிரி நினைத்த பொண்ணே இப்படி பேசி விட்டதே என்று ஏடிகே புலம்பி தள்ளி கொண்டிருக்கிறார்.

ஜனனி சொன்ன பதில்

இலங்கை பெண் ஆன ஜனனி இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் நாளே அவருக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கிவிட்டனர். ஜனனிக்காக பல ஆர்மிகள் வலம் வந்து கொண்டிருக்கும்போது, இன்று பிக்பாஸ் ஜனனியிடம் இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு ஜனனி ஏடிகே பெயரை கூறி இருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஏடிகே இதனால் தான், இந்த வாரம் நான் வீட்டில் வெளியே சென்று விடுவேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கேனா? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

விரக்தியில் ஏடிகேவின் முடிவு

ஜனனி மற்றும் ஏடிகே இருவருக்கும் தொடர்ந்து வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் போது எஸ் கியூஸ் மீ நீங்க எப்படி என்னிடம் பேச கூடாது என்று சொல்லலாம் என்று மீண்டும் ஜனனி கேட்க ,அதற்கு ஏடிகே நான் மீண்டும் மீண்டும் வந்து உங்களிடம் தனியா கூப்பிட்டு அட்வைஸ் செய்கிறதுக்கு உங்க மேல ஒரு தனிப்பட்ட அன்பு இருக்கிறதனால் தான். இந்த பொண்ணை ஒரு தங்கச்சி மாதிரி நினைச்சேன் ஆனா அன்பை கொச்சை படுத்துட்டீங்க இந்த வீட்டில் யார் மீதும் வைக்காத பாசத்தை அந்த புள்ள மேல வைத்தேன் ஆனால் இப்படி பேசிட்டு, சீ போங்க என்கிட்ட யாரும் பேச வேண்டாம் என்று விரக்தியில் ஏடிகே பேசிய ப்ரோமோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

Follow this Link - உடனடி கல்விச் செய்தி

Loading...