Daily TN Study Materials & Question Papers,Educational News

TNPSC - குரூப் 1 இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி வழக்கு..!

TNPSC - குரூப் 1 இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி வழக்கு..!


குரூப் 1 பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அதனை முறையாக பின்பற்றி பணியிடங்களை வகைப்படுத்தக் கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சுபிட்ச துர்கா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த மார்ச் 28-ம் தேதி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், சில பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அவை கிடைமட்ட (horizontal) ஒதுக்கீட்டில் இல்லாமல், செங்குத்து (vertical) ஒதுக்கீடாக செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் சிறப்பு ஒதுக்கீடுகள் கிடைமட்டமாகவே செய்யப்பட வேண்டும். செங்குத்தாக அல்ல என்பதை பலமுறை உறுதி செய்துள்ளது. இருப்பினும் இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை.

குரூப்-1 தகுதி பட்டியலிலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை. ஒதுக்கீடு தொடர்பான அனைத்து அரசு உத்தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு நீதிமன்றம் கடந்த 2016ல் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவும் முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால் இட ஒதுக்கீட்டு நடைமுறையின் முழு பயனும் கிடைப்பதில்லை.

கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியிடப்பட்ட குரூப் 1 அறிவிப்பில் பணியிடங்களில் செய்த இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து, இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி பணியிடங்களை வகைப்படுத்த உத்தரவிட வேண்டும். அதோடு, காலி பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவை எந்த ஆண்டில் இருந்து காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களையும் வெளியிட உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கினை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார். பின்னர் நீதிபதி, வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Share:

அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் - அமைச்சர் அன்பில் மகேஸ்..!

 அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் - அமைச்சர் அன்பில் மகேஸ்..!



சென்னையில் அரசுப் பள்ளிக் கூடத்தில் ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் தன்னம்பிக்கை உரை என்ற பெயரில் நிகழ்த்திய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி ஒன்றில் பிரபல ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழிவும், அதன் நிமித்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில் இன்று (செப்.6) காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.” என்றார்.

பின்னர் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “பள்ளி மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும். உணர்ச்சிப் பெருக்கில் சிக்கிவிடக் கூடாது. அறிவை செலுத்தி சிந்திக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும். ” என்று அறிவுரை கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “பள்ளிக்குள் யாரை சிறப்பு விருந்தினராக அனுமதிப்பது என்பதில் பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்தார். ஆன்மிக சொற்பொழிவாளரின் பிற்போக்கு சிந்தனைகளை கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கரையும் பாராட்டினார்.

முன்னதாக, தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

இதனை சமூகவலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

Share:

குறையில்லாத செல்வம் பெற விநாயகர் சதுர்த்தி அன்று தவறாமல் சொல்ல வேண்டிய மந்திரம்..!

 குறையில்லாத செல்வம் பெற விநாயகர் சதுர்த்தி அன்று தவறாமல் சொல்ல வேண்டிய மந்திரம்..!


மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரின் துயர் நீக்க கடவுளானவர் நம்மை கண்காணித்து உடன் இருக்கிறார். நாம் செய்யும் நல்லவை கெட்டவை இரண்டுமே அவரால் கண்காணிக்கப்படுகிறது. இருந்தும் எல்லா தவறுகளையும் மனிதன் செய்து கொண்டு தான் இருக்கிறான். இக்கலியுகத்தில் அவன் ஆடும் ஆட்டத்திற்கு பல குறைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்து கொண்டிருப்பான். இதிலிருந்து விடுபட்டு துயர் நீங்கி, குறைகள் இல்லாத செல்வம் பெற விநாயகர் சதுர்த்தி அன்று மறக்காமல் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.


ஒவ்வொரு யுகங்களிலும், ஒவ்வொரு விஷயங்கள் மூலமாக கடவுளை அடைய மனிதனுக்கு ஒரு வழி இருந்ததாம். திரேதா யுகத்தில் யாகம் செய்து கடவுளை மனிதன், மக்கள் அடைந்தனர். துவாபர யுகத்தில் ஆலய வழிபாடு மூலமாக கடவுளை மனிதன் எளிதாக அடைந்தான். அது போல இக்கலியுகத்தில் கடவுளை அடைவதற்கு மந்திரம் ஒன்றே சிறந்த வழி என்று ஆன்மீகம் கூறுகிறது.

உச்சரித்து வந்தால் அந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள், வாக்குவாதங்கள் நிகழாது என்று கூறப்படுகிறது. அடிக்கடி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை போடுபவர்கள் இந்த விஷயத்தை செய்து பாருங்கள். பத்தே நாளில் உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும். அந்த அளவிற்கு சக்திகள் மிகுந்த மந்திரங்களில் இந்த மந்திரத்தை விநாயகர் சதுர்த்தி அன்று உச்சரிப்பதால் வாழ்க்கையில் இருக்கக் கூடிய எல்லா துயர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி படிப்படியான குறை இல்லாத செல்வத்தை அடைய வழிவகுக்கும்.


விநாயகர் சதுர்த்தி அன்று முறைப்படி விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவருக்கு பிடித்த பலகாரங்கள் எல்லாம் தயார் செய்து படைத்து, பூஜை செய்யும் பொழுது கீழ் வரும் இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரியுங்கள். குடும்பத்தோடு அமர்ந்து மந்திரத்தை சொல்லிக் கொண்டே பூஜைகளை செய்யுங்கள். பூஜை செய்யும் போது ஒரு செம்பு பாத்திரத்தில் ஜலம் வைத்து கொள்ள மறக்க வேண்டாம். நீருக்கு மந்திர ஒலிகளை ஈர்க்கும் தன்மை உண்டு. தீர்த்த நீர் போல எல்லாருக்கும் நீரை கொஞ்சம் போல கடைசியாக பருக கொடுங்கள்.

விநாயகர் மந்திரம்:


கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்


இது போல குடும்பமாக மந்திரம் சொல்லி பூஜை செய்யும் போது, பூஜையின் நிறைவில் உங்களுக்கு மன நிம்மதியும், சாந்தமான, சந்தோஷமான சூழ்நிலையும் உருவாகி இருக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டைகள், குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து, ஒற்றுமையும், பொருளாதார ரீதியான முன்னேற்றமும், மன நிம்மதியும் கிடைக்க விநாயகர் சதுர்த்தி அன்று இந்த மந்திரத்தை சொல்ல மறக்காதீர்கள்.


Share:

சகல சௌபாக்கியம் பெருக சதுர்த்தி வழிபாடு..!

 சகல சௌபாக்கியம் பெருக சதுர்த்தி வழிபாடு..!



விநாயகப் பெருமானுக்கு உகந்த மாதமாக திகழக்கூடிய மாதம் ஆவணி மாதம். ஆவணி மாதத்தில் வரக்கூடிய சதுர்த்தி திதி அன்று தான் விநாயகப் பெருமான் அவதரித்தார். அந்த வகையில் சதுர்த்தி திதி என்பது நாளை மதியம் மூன்று மணிக்கு மேல் தொடங்கப் போகிறது. இருப்பினும் சனிக்கிழமை தான் விநாயகர் சதுர்த்தி. அதனால் நாளைய தினம் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வது என்பது சிறப்பு கூறியதாக திகழ்கிறது. சதுர்த்தி திதி ஆரம்பிக்கும் பொழுதே நாம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். இந்த பதிவில் சதுர்த்தி திதி ஆரம்பிக்கும் பொழுது எந்த முறையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.


சகல சௌபாக்கியம் பெருக சதுர்த்தி வழிபாடு இந்த வருடம் ஆவணி மாதத்தில் வரக்கூடிய சதுர்த்தி என்பது வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு மேல் ஆரம்பிக்கிறது, சனிக்கிழமை மதியம் 3 மணிக்குள் நிறைவடைகிறது. அதனால் விநாயகர் சதுர்த்தியை நாம் சனிக்கிழமை அன்று தான் கொண்டாடுகிறோம். இருப்பினும் சதுர்த்தி திதியானது வெள்ளிக்கிழமையே தொடங்கி விடுகிறது என்பதால் அன்றைய தினம் நாம் விநாயக பெருமானை வழிபட ஆரம்பித்து விட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் வெள்ளிக்கிழமை, மேலும் சுப முகூர்த்த நாளாகவும் இருப்பதால் இந்த நாளில் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது பல நன்மைகள் உண்டாகும். அந்த வழிபாட்டை பற்றி தான் பார்க்க போகிறோம்.


இந்த வழிபாட்டை மாலை 6 மணிக்கு செய்ய வேண்டும். சுத்தமான மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது அரகஜா, ஜவ்வாது, பச்சை கற்பூரம் இவற்றை சேர்த்து இதனுடன் பன்னீர் ஊற்றி மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போல் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த பிள்ளையாரை வெற்றிலை, மா இலை, வாழை இலை, எருக்கு இலை என்று ஏதாவது ஒரு இலையில் வைக்க வேண்டும். பிறகு இந்த பிள்ளையாருக்கு மூன்று பக்கங்களில் குங்குமத்தை வைத்து ஒரே ஒரு இனுக்காவது அருகம்புல்லை அவரின் தலையில் வைத்து விட வேண்டும். இப்படி வைத்த பிறகு அவருக்கு மலர்களை சூட்டி ஏதாவது ஒரு எளிமையான பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அடுத்ததாக ஒரு மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை கூறவேண்டும். அவ்வாறு கூறும் பொழுது விநாயகப் பெருமானுக்காக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் விநாயகப் பெருமான் மனம் மகிழ்ந்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்குவதோடு நாம் நலமுடனும் சிறப்பாகவும் வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது.


மந்திரம்


ஓம் கண நாதா போற்றி ஓம்


இந்த மந்திரத்தை முழு மனதுடன் விநாயகப் பெருமானை நினைத்தவாறு 108 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும்.


இந்த எளிமையான மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டை நாளைய தினம் சதுர்த்தி திதி ஆரம்பிக்கும்போது செய்து வைத்து வழிபாடு செய்ய விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை உறுதி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

Share:

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப் பட இருக்கிறது! மகிழ்ச்சி!!



ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப் பட இருக்கிறது. இதையொட்டி விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கோரியுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ)விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அது போன்று டெட் தேர்வை நடத்துவது கிடையாது. 2022-ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய டெட் தேர்வு கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது. 2024-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும்

என்று ஆசிரியர் தேர்வு வாரியம் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் அறி விப்பு செய்திருந்தது. ஆனால், 5 மாதங்கள் ஆகியும் தேர்வுக் கான அறிவிப்பு இன்னும் வெளி யிடப்படவில்லை.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு களில் பங்கேற்கும் தேர்வர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய் வது, தேர்வு முடிவுகளை வெளி யிடுவதற்கான பணிகளை மேற் கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வுக்கான அறி விப்பை வெகுவிரைவில் வெளி யிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இணையவழி தேர்வாக நடத்தப்பட்டு வந்த டெட் தேர்வு இந்த முறை ஓஎம்ஆர் ஷீட் வடிவி லான தேர்வாகவே இருக்கும். இதற்காகவே ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாள்களை ஸ்கேன் செய் யும் பணிகளுக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக டிஆர்பி வட்டாரங்கள் தெரிவித் தன. இந்த மாதம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில்

நவம்பர் மாதம் தேர்வு நடத்த  அதிக வாய்ப்புள்ளது.

Share:

RRB NTPC வேலைவாய்ப்பு 2024 – 11500+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!


RRB NTPC வேலைவாய்ப்பு 2024 – 11500+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

Railway Recruitment Board எனப்படும் RRB ஆனது NTPC வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Graduate, Undergraduate பணிக்கென காலியாக உள்ள 11558 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


காலிப்பணியிடங்கள்: Graduate, Undergraduate பதவிகளில் Station Master, Chief Commercial cum Ticket Supervisor மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 11558 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 33 மற்றும் 36 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



ஊதிய விவரம்: இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.35,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.



தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் Computer Based Test / Document Verification / Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.10.2024, 20.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



Download Notification PDF

Share:

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!




EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு  மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE - SSLC & +1 NR Preparation

Download here

Share:

+2 - பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 +2 - பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!



மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE - +2 NR Downloading Instructions

Download here

Share:

TNPSC - குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

TNPSC - குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு..!




டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கு ஜூலை 13ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.


தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தோ்வை 1.59 லட்சம் பேர் எழுதியதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்திருந்தது.

துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்பட குரூப்-1 பிரிவில் 90 காலியிடங்கள் உள்ளன.

குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.


குரூப்-1 முதன்மைத் தேர்வு டிச.10 முதல் டிச.13 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், குரூப்-1 முதல்நிலை தேர்வு நடந்த 50 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டது.

தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Certificateverification/04_2024_GR_I_PRLM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்

Share:

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் தேர்​வு கட்டாயம்".!

 சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் தேர்​வு கட்டாயம்".!




சிறுபான்மை மொழி மாணவர்களும், கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும்"

10, 11 மற்றும் 12ம்  வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவு

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories