Daily TN Study Materials & Question Papers,Educational News

2nd Std Kalvi TV Video Link Collection


அனைவருக்கும் வணக்கம் நம்முடைய  வலைத்தளத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகவல்கள் நமது  வலைத்தளத்தில் தினமும் செய்திகளாக பதிவிடப்பட்டு வருகிறது. பல பயனுள்ள  தகவல்களை தெரிந்து கொள்ள ww.padavelai.com என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்.நன்றி

 CLICK HERE TO WATCH 2ND STD KALVI TV - VIDEOS  -TAMIL

 CLICK HERE TO WATCH 2ND STD KALVI TV - VIDEOS  -ENGLISH

 CLICK HERE TO WATCH 2ND STD KALVI TV - VIDEOS  -MATHS 

 CLICK HERE TO WATCH 2ND STD KALVI TV - VIDEOS  -EVS


Share:

11th tamil Important 6 marks - Public Exam 2023 ( செய்யுள் )

11th Tamil Important 6 marks - Public Exam 2023 ( செய்யுள் )

1. நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

பாயிரம் :

நூலை உருவாக்கும் ஆசிரியரின் திறம் வாயும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். பாயிரம் 

(1) பொதுப்பாயிரம், 

(2)சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

(i) பொதுப்பாயிரம் :

எல்லா நூல்களின் முன்பிலும் பொதுவாக உரைக்கப்படுவது, பொதுப்பாயிரம் எனப்படும்.

நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை

மாணவரின் இயலபு கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது, பொதுப்பாயிரம் ஆகும்.

(ii) சிறப்புப்பாயிரம் :

தனிப்பட்ட பல நூல்களுக்கு மட்டும் சிறப்பாகக் குறிப்பிடப்படுவது, சிறப்புப்பாயிரம் எனப்படும்.

நூல் சிரியரின் பெயர்

நூல் பின்பற்றிய வழி

நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு;

நூலின் பெயர்; தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு;

நூலில் குறிப்பிடப்படும் கருத்து; 5நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்;

இவற்றுடன் நூல் இயற்றப்பட்ட காலம்; அரங்கேற்றப்பட்ட அவைக்களம்;

இயற்றப்பட்ட காரணம் ஆகியவற்றைச் சேர்த்துக் கூறுவதும் ஆகிய எல்லாச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது, சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும்

2. திருமலை முருகன் பள்ளு’ கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள்வழி இயற்கை வளங்களை விவரிக்க.

3. பாரதிதாசன் ஒரு ‘புரட்சிக்கவி’ என்பதை, உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.

4. நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக.

5. மதீனா நகரம் ஒரு வளமான நகரம்” என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து


Share:

11th tamil Important 6 marks - Public Exam 2023 ( உரைநடை )

11th tamil Important 6 marks - Public Exam 2023 ( உரைநடை )

1. ‘கல்லும் கதை சொல்லும்’ – என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக.

2. பௌத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்விமுறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.

3. சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக.

4. சுந்தர ராமசாமியின் ‘காற்றில் கலந்த பேரோசை’ என்னும் தலைப்பு, ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக..


Share:

11th tamil Important 4 marks - Public Exam ( செய்யுள் )

11th tamil Important 4 marks - Public Exam ( செய்யுள் )

1. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?

  • நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர்
  • பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிரப்பு, நூலின் பெயர், யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர், நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகியன, முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக, நன்னூல் குறிப்பிடுகிறது.

2. “சலச வாவியில் செங்கயல் பாயும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம் : 

திருமலை முருகன் பள்ளூவில், வடகரை நாட்டின் வளத்தைக் கூறும்போது, பெரியவன் கவிராயரால் கூறப்படுகிறது.

பொருள் :

 நீர் நிறைந்த தாமரைத் தடாகத்தில், செம்மையான கயல்மீன்கள் துள்ளிப்பாய்ந்து, விளையாடும் என்பது பொருளாகும்.

விளக்கம் : 

வடகரை நாடு நீர் நில வளம் மிக்கது. அங்குத் தாமரை நிறைந்த குளத்தில், கயல் மீன்கள் அக்கமின்றித் துள்ளிப் பாய்ந்து விளையாடும்; மீனைப் பிடித்துண்ண வந்து சங்கிலியில் அமர்ந்துள்ள உள்ளான் பறவை, வண்டுகளின் இசையில் மயங்கி, வாலை ஆட்டியபடி அமர்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வடகரை நாட்டின் நீர், நிலவளம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக.

  • காவடி’ என்பது, தமிழக பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று.பண்டைய காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடி சிந்து . 
  •  உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ்மக்கள், குலவதோறும் வீற்றிருக்கும் முருகனின் கோவிலை நோக்கி வழிபடச் செல்வர்.
  • அப்போது முருகப்பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருள்களைக் காவடிகளில் கொண்டு செல்வர். அப்படிச் செல்லும்போது வழிநடைக் களைப்புப் போக, முருகப் பெருமானின் புகழைச் சிந்துவகைப் பாடலாகப் பாடுவர்.

4. சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?

  • சேலத்து நாட்டில் பெற்ற சிலம்பு;
  • கோலத்து நாட்டாரிடம் பெற்ற முறுக்கிட்ட தண்டை;
  • பாண்டியனார் மகள் கொடுத்த பாடகம்;
  • குற்றாலர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்;
  • கண்டி தேசத்தில் பெற்ற காலாழி.

5. தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?

  • சாழல்’ என்பது, பெண்கள் விளையாட்டு. 
  • இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

எ – கா : “சுடுகாட்டைக் கோவிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?” என்பது பழிப்பது  வினா!

“எங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும், அவன் சினத்தால் உலகம் அனைத்தும் கல்பொடியாகி விடும்” என்பது, செயலை நியாயப்படுத்தும் விடை.

6. “உயர் தமிழை உயிரென்று போற்றுமின்கள்” – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக..

இடம் :

 பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி பாடல்.

பொருள் : 

உயர்ந்த தமிழை உங்களின் உயிராகப் போற்றுங்கள்.

விளக்கம் : 

கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுக் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட உதாரன், அங்குக் கூடியிருந்தோரிடம், சில சொற்கள் பேசினான். “யானறிந்த தமிழே என் மரணத்துக்குக் காரணம் என மக்கள் தமிழை இகழ்வார்களோ! மக்களே, மாசு இல்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்” என்று வேண்டினான்.

7. வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?

  • சிறு வாய்க்கால், நமக்கு உணவு நல்கும் வயலுக்கு உபயோகப்படுகிறது; 
  • அலை கடலை மலையாகவும்,
  •  மலையை அலைகடலாகவும் மாற்றிட நடக்கிறது; 
  • கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண் துகளாக்கிச் சிறு மணலாக்குகிறது. மேலும், தன் வலிமைக்குள் அடங்கிய புல், புழு அனைத்தையும் கொண்டுவந்து, காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு வழங்குகிறது.
  • மலையில் பொழிந்த மழையான பின், அருவியாய் இறங்கி,
  •  குகைமுகம் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, 
  • பொங்கி எழுந்து, சுனையாய்க் கிடந்து, 
  • ஊற்றாய்ப் பரந்து ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, 
  • வாய்க்கால் வழி ஓடித் தான் பட்ட களைக் கூறி, மேலும் இயன்றதைக் கொண்டுவருவதாக உறுதி கூறுகிறது.
  • நீக்கம் இல்லா அன்பும், ஊக்கமும் உறுதியும் கொண்டு அனுதினமும் அழைக்கிறது என்று, வாய்க்காலின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


Share:

11th tamil Important 4 marks - Public Exam 2023 ( உரைநடை )

11th tamil Important 4 marks - Public Exam 2023 ( உரைநடை )

1. ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.

  • எனக்கு உயிர்தந்தவள் தாய், தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய ஊட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளமான மொழியை கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழம் புரிந்தது.
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கு காணோம்” என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொருள் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.
( இது சொந்த நடையில் எழுதவேண்டிய விடை . நீங்கள் எந்த கையேட்டில் படித்திரிந்தாலும் அதுவும் சரியான விடையே . மாற்ற வேண்டாம் )

2. ‘மலை, மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது’ என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க

  • மனித சமூகத்தின் ஆதிநிலம் மலை.
  • சேயோன் மேய மை வரை உலகம் ; என்கிறது தொல்காப்பியம்.  .
  • திராவிடர்களைக் கமில் சுவலபில், ‘மலைநில மனிதர்கள்’ என்கிறார்.
  • இந்தியப் பழங்குடியினர் பெயர்கள், மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்து கொன்றன.
  • பழங்குடியினர், உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறு, ஓடைகல ஒட்டிக் குடியிருப்பை அமைத்துள்ளனர்.
  • அவை, பழங்குடியினரின் மலைசார்ந்த சமூக, சமயக் கூறுபாடு சார்ந்த புரிதலைத் தருகின்றன

3. ஆனந்தரங்கர், ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப் பகுதிவழி எடுத்துக்காட்டுக.

  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பில், அவர் காலப் புதுவை, தமிழகம், தென்னிந்திய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
  • பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ், நாணய அச்சடிப்பு உரிமை பெற்றது,
  •  லெபூர் தொனே, சென்னையைக் கைப்பற்றியது,
  • தேவனாம் பட்டணத்தைக் கைப்பற்றப் பிரெஞ்சு அரசு நடத்திய போர்,
  • புகழ்பெற்ற ஆம்பூர்ப் போர், 
  • தஞ்சைக் கோட்டை முற்றுகை,
  •  இராபர்ட் கிளைவ் படையெடுப்பு எனப்  வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டு உரைப்பதுபோல், நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இவற்றை நோக்க, ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியராகத் திகழ்வது புலப்படும்

4. ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?

ஃபிரெஸ்கோ ஓவியங்கள் : 

  •  ‘ஃபிரெஸ்கோ’ என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் ‘புதுமை’ என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சுமீது, அதன் ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.
  • ஃபிரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் முதலான இடங்களில் காணலாம்.

கற்றளிக் கோவில்கள் :

  • செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டுவது ‘கற்றளி’ எனப்படும். 
  • மகாபலிபுரம் கடற்கரைக்கோவில், காஞ்சி கைலாச நாதர்கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை, கற்றளிக் கோவில்களுக்குச் சான்றுகளாகும்

5. ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?

  • வாவின் பாணி, இரவல் பாணியோ, கற்று அறிந்ததோ அன்று! ‘பேச்சுக்கலை’ என்பது ஜீவா பெற்ற வரம்!
  • மக்கள் தரத்தை, அனுபவ அறிவை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளைத் தெளிவாக அறிந்த
  • ஒருவர், கூறவந்த செய்திகளைக் கலைநோக்கோடு அணுகி, கற்பனை கலந்த காலப்போக்கில்
  • வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுநடை, ஜீவாவின் பேச்சுநடை!
  • உழுது விதைத்தால் நல்ல அறுவடை காணமுடியும் என்பதை உணர்ந்தவர் ஜீவா!

6. ‘தாமஸிகம்’ என்றால் என்ன?.

  • நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி சீக்கிரம் வாடிவிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. 
  • தோட்டக்காரன் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும்.
  •  மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும் தான் அவற்றின் வேலை. 
  • இதனைத் ‘தாமஸிகம்’ அதாவது மெட்டீரியலிசம்  என்பர்.

Share:

11th tamil Important 2 marks - Public Exam 2023 ( உரைநடை )

11th tamil Important 2 marks - Public Exam 2023 ( உரைநடை )

1. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

  • எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால் எழுத்துமொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது.
  • எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது

2. தமிழ்நாட்டின் மாநில மரம் – சிறு குறிப்பு வரைக.

  •  தமிழ்நாட்டின் மாநில மரம் பனை.
  • இது, ஏழைகளின் கற்பக விருட்சம்.
  • சிறந்த காற்றுத் தடுப்பான்.
  • ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மையுடையது.

3. ‘கோட்டை’ என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

  • ‘தமிழ் -கோட்டை 
  • மலையாளம் - கோட்ட, கோடு, 
  • கன்னடா - கோட்டே, கோண்டே,
  • துளு -கோட்டே
  • தோடா -  க்வாட் எனத் திராவிட மொழிகளில் எடுத்தாளப்படுகிறது

4. உ.வே.சா. அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.

  • இக்கல்விமுறை, தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறையாகும்.
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம், உ.வே.சா. பாடம் பயின்றமுறை இம்முறையாகும்.

5. ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

  • கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும், நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும்,
  • மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்ததுபோலவும்
  • நீண்டநாள் தவமிருந்து புத்திரப் பாக்கியம் கிட்டினாற்போலவும்,
  • தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோஷப்பட்டார்கள் எனப் பதிவு செய்துள்ளார்.
  • இதனை ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

6. இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?

  • நாகரம் ,
  • வேசரம் ,
  •  திராவிடம் 

7. ‘நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமையை ஜீவானந்தம் வாழ்வுடன் ஒப்பிடுக.

  • வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப்பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.
  • எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு நெருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் உதிர்வதுபோல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுபடுத்த, இவ் வமை கூறப்பட்டுள்ளது.

8. நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?.

  • நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, இயற்கையே சிறந்து விளங்குகிறது.

  • பட்டணத்திலோ, மனித சமுதாயமே முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது.
Share:

11th tamil Important 2 marks - Public Exam 2023 ( செய்யுள் )

11th tamil Important 2 marks - Public Exam 2023 ( செய்யுள் ) 

1.இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.

  • “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”

2.பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

  • நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து, நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

3.ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின – தொடரின் பொருள் யாது?

  • மரங்கள் வெட்டப்பட்டன ,
  • மழை பெய்யவில்லை. 
  • மண்வளம் குன்றியது.
  •  வாழ்வதற்கான சூழல் இல்லாததால், ஆதரவற்றனவாய்க் குருவிகள், இருப்பிடம் தேடி அலைந்தன

4.வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்

மாடம் எங்கும் அகிற்புகை நாறும் – அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன

  • கா- சோலை 
  • முகில் - மேகம் 
  • தென்கரை நாட்டின் உயர்ந்து வளர்ந்த சோலைகளில், மேகக்கூட்டம் தங்கிச் செல்லும் என்பதாகும்.

5.காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது.

6.காவடிச்சிந்து என்பது யாது?

  • தமிழ்நாட்டில் பண்டைக்காலம்முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே, ‘காவடிச்சிந்து’ . 
  • முருக பெருமானை வழிபட பால், காவடி முதலானவற்றை கொண்டு  செல்வோர் வழியிடை பாடலாக பாடிச் செல்வர்.

7.தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

புகழ்: புதன் புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்.

பழி : பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

8.சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?

  • செயலின் வலிமை, 
  • தன் வலிமை, 
  • பகைவனின் வலிமை, 
  • துணையானவரின் வலிமை

9.மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?

  • மருந்து : செல்வம்
  • மருந்து மரமாக இருப்பவர் : பெருந்தகையாளர் 

10.மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.

  • மேருமலைபோல் மதீனா நகரின் மேல்மாடங்கள் உயர்ந்திருந்தன.
  • அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த பேரொலி, பெருங்கடல்போல் இருந்தது.

11.சாழல் – விளக்குக.

  • சாழல்’ என்பது, பெண்கள் விளையாட்டு. 
  • இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். 
  • இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

12.உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?

  • உழைப்பாளர்கள் தங்கள் தோள்வலிமையால் பாழ்நிலத்தைத் பண்படுத்திப் புதுநிலமாக்கினர்.
  • அழகு நகர்களையும் சிற்றூர்களையும் உருவாக்கினர்.
  • வரப்பெடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தையும் பெருக்கி, உழுது விளைபொருள்களை உற்பத்தி செய்தனர்.


Share:

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை பள்ளிகள் திறப்பு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் அரையாண்டு முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!


TN School Re-open Date 2023? பள்ளிகள் திறப்பு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! - Click Here 

பள்ளிகள் திறப்பு

2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.

பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே வழங்கிய நாட்காட்டியின்படி பள்ளிகளுக்கு 02012023 அன்று விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பார்வை 1ல் காணும் கடிதத்தில் எண்ணும் எழுத்தும் சார்பாக 1 முதல் 3ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சியை 02.01.2023 முதல் 04,02023 வரை நடத்திடுமாறு தெரிவிக்கப்பட்டது.

பார்வை 3ல் காணும் 03.12.2022 அன்று நடைபெற்ற எண்ணும் எழுத்தும் சார்பான ஆய்வு கூட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு பள்ளித் திறக்கும் நாள்.05.012023 எனவும் மற்ற வகுப்புகளுக்கு பள்ளி திறக்கும் நாள் 02.01.2023 என்பதையும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

எனவே 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 02.012023 முதல் 04.012023 வரை நடைபெறும் எண்ணும் எழுத்தும் சார்பான மூன்றாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி நடைபெறும் நாளில் எவ்வித மாற்றமும் இல்லாதால் அனைத்து ஆசிரியர்களும் மேற்கண்ட நாட்களில் பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share:

TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று தேர்வு முடிவுகள் வெளியீடா?

TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று தேர்வு முடிவுகள் வெளியீடா?

TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முடிவுகள்

தமிழக அரசுத்துறைகளில் உள்ள 4ம் நிலை பணியிடங்கள் மற்றும் VAO பணியிடங்களுக்கு TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் நிரப்பப்படுகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டபடி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது.


இந்த தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனால் இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


தற்போது இந்த வழக்கின் தீர்ப்புகள் வெளியான நிலையில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள்  Feb முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வின் முடிவுகள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதனால் தேர்வர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share:

10th Maths First Revision Question paper 2023 - Original Answer key

10th Maths First Revision Question paper 2023 - Original Answer key

Maths

10th Maths First Revision Question paper 2023 - Original Answer key -  English Download Here ( Nkl Private School )

10th Maths First Revision Question paper 2023 - Original Answer key - Tamil Medium Download here

Share:

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories