Daily TN Study Materials & Question Papers,Educational News

CLAT 2024 Exam: சட்டம் படிக்க ஆசையா?- டிச.3-ல் கிளாட் தேசிய நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி?

CLAT 2024 Exam: சட்டம் படிக்க ஆசையா?- டிச.3-ல் கிளாட் தேசிய நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி?


நாடு முழுவதும் தேசியக் கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு நவம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of National Law Universities) சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர ‘கிளாட்’ (Common Law Admission Test- CLAT) எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் எல்எல்எம் படிப்புகளுக்காக (5-year integrated Ll.B. மற்றும் Ll.M. programmes) இந்த நுழைவுத் தேர்வு நடக்கிறது.

டிசம்பர் 3ஆம் தேதி தேர்வு

அதேபோல தேசிய சட்டப் பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்த நிலையில், 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இதற்காக கிளாட் தேர்வு, டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

கிளாட் நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், நவம்பர் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காகத் தேர்வர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிப்பது அவசியம். மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் மதியம் 2 முதல் 4 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும். கடந்த ஆண்டு 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது.

தேர்வு ஆஃப்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.4 ஆயிரம் கட்ட வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.3,500 செலுத்த வேண்டியது முக்கியம். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பெற ரூ.500 கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.
ஜூலை 1ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வர்கள் நவம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் முன்பதிவு செய்து, லாகின் செய்யும்போது மாதிரி வினாத் தாள்களைப் பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

கூடுதல் தகவல்களுக்குhttps://consortiumofnlus.ac.in/ என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

Share:

தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, அக்டோபர் 2023 ! விண்ணப்பத்து விட்டீர்களா? மாணவர்களே!


அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6

11th std தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, அக்டோபர் 2023 செய்திக்குறிப்பு

பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.

2023-2024-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (CBSE / ICSE / உட்பட) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள். 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 05.09.2023 முதல் 20.09.2023 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம்/ முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய

கடைசி நாள். 20.09.2023.

நாள்: 04.09.2023

Share:

School Shaala sidhi login password மறந்து விட்டீர்களா?..

School Shaala sidhi login password மறந்து விட்டீர்களா?..

 3 வழிகளில் RESET PASSWORD செய்யும் வழிமுறைகள் :


Shaala sidhi password reset செய்வது எப்படி?

 Note : Please input valid Mobile No./Email Id / Both which were given at the time of creation of user . 

METHOD - 1 

Step 1 : Click Forgot password below the login page 

Step 2 : Enter your UDISE code 

Step 3 : Enter OTP sent to the mobile number used at the registration time 

METHOD - 2 

Step 1 : Click Forgot password below the login page 

Step 2 : Select Get PIN OTP in the top 

Step 3 : Enter your UDISE code 

Step 4 : Enter the mobile number or E - mail id used at the registration time 

METHOD - 3 

Step 1 : Click Forgot password below the login page 

Step 2 : Select Forgot PIN OTP in the top 

Step 3 : Enter your UDISE code 

Step 4 : System will send a request to NUEPA when you click on Send button


Share:

முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு....!!!

முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு....!!!

முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் ( Alumni ) - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

SPD Proceedings - Click here

Share:

TVSM நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு..!!

TVSM நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு..!!



TVSM நிறுவனத்தில் Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தளம்: https://tvsmsampark.darwinbox.in/

TVSM நிறுவனத்தில் Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

தகுதி:

TVSM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் BE / BTech / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 7 ஆண்டு வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

TVSM பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TVSM-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

TVSM பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

TVSM பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு TVSM 2023: இங்கே பதிவிறக்கவும்

விண்ணப்பிக்க: உடனே விண்ணப்பிக்க

அதிகாரப்பூர்வ தளம்: https://tvsmsampark.darwinbox








Share:

NET EXAM - சான்றிதழ் ஆன்லைனில் வெளியீடு..!!

NET EXAM - சான்றிதழ் ஆன்லைனில் வெளியீடு..!!

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கடந்த ஜூன் பருவத்துக்கான நெட் தேர்வு ஜூன் 13 முதல் 22-ம் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 4.62 லட்சம் பேர் எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகளை என்டிஏ ஜூலை 24-ம் தேதி வெளியிட்டது. தேர்வு எழுதியவர்களில் 37,241 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் நெட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம் என்று துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்


Share:

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை 5-ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு..!!

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை 5-ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு..!!

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

912 Temporary Posts Pay Continuous Order - Download here


Share:

10th Maths - Quarterly Important Questions 2023 ( 2,5 ,8 Marks )

10th Maths - Quarterly Important Questions 2023 ( 2,5 ,8 Marks )

10th Maths - Quarterly Important Questions 2023 ( 2,5 ,8 Marks )


இந்த 10th Maths - Quarterly Important Questions 2023 ( 2,5 ,8 Marks )
டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 


Share:

TNPSC தேர்வு: விண்ணப்ப கால அவகாசம் குறித்த முக்கிய அறிவிப்பு!

TNPSC தேர்வு: விண்ணப்ப கால அவகாசம் குறித்த முக்கிய அறிவிப்பு!

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வெவ்வேறு பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அவ்வகையில், பல்வேறு துணைச் சேவைகளில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் (தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் மற்றும் பொது துணை சேவை) பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம், ஜூலை மாதம் 25-ம் தேதி என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்

Share:

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேணுமா? இதோ வந்தது அறிவிப்பு..6 ஆயிரம் பணியிடம்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்???

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேணுமா? இதோ வந்தது அறிவிப்பு..6 ஆயிரம் பணியிடம்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்???


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 6160 பயிற்சி (apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அப்ரெண்டிஸ் (பயிற்சி பணி) பணிக்கு ஆட்கள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு.. தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெளிவாக காணலாம்.

மொத்த பயிற்சி பணியிடங்கள்: மொத்தம் 6,160 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 648 தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி பிரிவினர் 123 பேரும் எஸ்.டி பிரிவினர் 6 பேரும் ஒபிசி பிரிவில் 174 பேரும் EWS பிரிவில் 281 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் தேர்வு நடத்தப்படும். தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்களும் 28 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் உண்டா? இந்த பயிற்சி பணியிடங்களை பொறுத்தவரை மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். பிற சலுகைகள் எதுவும் வழங்க முடியாது. ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். பயிற்சி காலத்தை எந்த வித பிரச்சினைகளும் இன்றி முடித்தவர்களுக்கு ஜூனியர் அஸ்சோசியேட்ஸ் பணியிடங்களை நிரப்பும் போது வெயிட்டேஜ் மற்றும் தளர்வுகள் வழங்கப்படும். இது பற்றிய விவரம் அவ்வப்போது வெளியிடப்படும்.

தேர்வு கட்டணம்: தேர்வு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வுகளை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, கோவை, ஈரோடு,மதுரை, நாகர்கோவில், சேலம் , தஞ்சாவூர், திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெறும். ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வினாக்கள் இடம் பெற்று இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 21.09.2023 ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். https://ibpsonline.ibps.in/sbiaaug23/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories