NET EXAM - சான்றிதழ் ஆன்லைனில் வெளியீடு..!!

NET EXAM - சான்றிதழ் ஆன்லைனில் வெளியீடு..!!

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கடந்த ஜூன் பருவத்துக்கான நெட் தேர்வு ஜூன் 13 முதல் 22-ம் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 4.62 லட்சம் பேர் எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகளை என்டிஏ ஜூலை 24-ம் தேதி வெளியிட்டது. தேர்வு எழுதியவர்களில் 37,241 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் நெட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம் என்று துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்


Post a Comment

0 Comments