அரைநாள் மட்டுமே பள்ளி இயங்கும் – மாநில அரசு புதிய உத்தரவு!

அரைநாள் மட்டுமே பள்ளி இயங்கும் – மாநில அரசு புதிய உத்தரவு!

தெலங்கானா மாநிலத்தில் நாளை TS TET தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் பிற்பகல் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது

பள்ளி விடுமுறை

தெலுங்கானா மாநிலத்தில் TS TET தேர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் தேர்வுக்கு 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் இன்று இரண்டு தாள்களாக தேர்வு நடைபெற இருக்கிறது. அதாவது, TS TET முதல் தாள் காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 வரையிலும், இரண்டாம் தாள் மதியம் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெற இருக்கிறது.

தமிழக அரசு பள்ளிகளுக்கு ரூ.126.45 கோடி நிதி ஒதுக்கீடு – சுற்றறிக்கை வெளியீடு!

மேலும், TS TET தேர்வு நாளை நடைபெற இருக்கும் நிலையில் டெட் தேர்வுக்கான தேர்வு மையங்களாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது, தேர்வு மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் டெட் தேர்வுக்கான வேலைப்பாடுகள் இன்று நடைபெறும் என்பதால் இன்று பிற்பகல் முதல் அரை நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், நாளையும் தேர்வு மையமாக உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments