நீண்ட கால விடுமுறை எடுக்கும் கல்லூரி மாணவிகளுக்கு மாத உதவித்தொகையை நிறுத்த உத்தரவு..!!

நீண்ட கால விடுமுறை எடுக்கும் கல்லூரி மாணவிகளுக்கு மாத உதவித்தொகையை நிறுத்த உத்தரவு..!!

தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர்.

திருப்பூர்:

அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் இதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர். இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும்.

இடைநின்றவர்கள், மாற்றுச்சான்றிதழ் பெற்றவர்கள் பட்டியலை தொகுத்து ஆண்டுக்கு இருமுறை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...