மகளிர் உரிமை தொகை ஏன் கிடைக்கவில்லை? உதவி மையங்கள் மூலம் அறிய ஏற்பாடு.!!!

மகளிர் உரிமை தொகை ஏன் கிடைக்கவில்லை? உதவி மையங்கள் மூலம் அறிய ஏற்பாடு.!!!

ஏழை-எளியோரின் நலன் கருதி கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100 நம்பரும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வாயிலாக மேல்முறையீட்டு மனுவை பதிவேற்றம் செய்ய வேண்டும்

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள், விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டதற்கான காரணங் களை அறியும் வகையில் ஊட்டி கலெக்டர் அலுவ லகம், ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஊட்டி, குந்தா, குன்னுார், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு உதவிமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேக அலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

எனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான விவரங்களை அறியலாம்.

மேலும் ஏழை-எளியோரின் நலன் கருதி கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100 நம்பரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்களையும் வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ளலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிகப்பட்டவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வாயிலாக மேல்முறையீட்டு மனுவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற்றவர்கள் டெபிட் கார்டு மட்டுமின்றி ரூபே கார்டு மூலமாகவும் பணம் எடுக்கலாம்.

வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட வங்கியில் கடனுதவி பெற்றிருந்தாலும், அரசு வரவு செய்த உரிமைத்தொகையில் பணம் எடுக்கக்கூடாது.

பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து எக்காரணம் கொண்டும் பணம் திரும்ப எடுத்துக்கொள்ளப்படாது என நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்து உள்ளார்.Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...