குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக மகளிர் உரிமை திட்ட தொகை 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது...
குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன
நாகர்கோவில் :
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு ஏராள மானோர் விண்ணப்பித்தனர்.
நாளை தொடக்க விழா
இந்த விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன. வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பப் பட்டன.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் தொடக்க விழா நாளை (15-ந் தேதி) நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கி றார்.
தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் அவர் திட்டத்தை தொடங்கி வைக்கி றார். குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோட்டில் தொடக்கவிழா நடக்கிறது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை திட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.