TNPSC தேர்வு: விண்ணப்ப கால அவகாசம் குறித்த முக்கிய அறிவிப்பு!
TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வெவ்வேறு பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அவ்வகையில், பல்வேறு துணைச் சேவைகளில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் (தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் மற்றும் பொது துணை சேவை) பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம், ஜூலை மாதம் 25-ம் தேதி என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.