Daily TN Study Materials & Question Papers,Educational News

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அடுத்த மாதம் முதல் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அடுத்த மாதம் முதல் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் பைலட் முறையில் டிஜிட்டல் ரூபாயை குறிப்பிட்ட 9 வங்கிகளில் மட்டும் அடுத்த மாதம் முதல் அமல்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

டிஜிட்டல் ரூபாய்:

இந்திய ரிசர்வ் வங்கி சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சிக்கான பைலட் திட்டத்தை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக இந்திய ரிசர்வ் வங்கி பைலட் முறையில் டிஜிட்டல் ரூபாயை சில வங்கிகளில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, டிஜிட்டல் கரன்சிக்கான பைலட் திட்டத்தை செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, YES வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் HSBC ஆகிய 9 வங்கிகளை தேர்வு செய்துள்ளது.

இதில் பங்கேற்கும் வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் வாலட் மூலமாக பயனர்கள் eR உடன் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். மேலும், உராய்வு இல்லாத கிரெடிட்டுக்கான பப்ளிக் டெக் பிளாட்ஃபார்ம் (PTP), CBDC, UPI One World, RuPay On-The-Go மற்றும் Bharat Bill Payment System ஆகிய சேவைகளும் இந்த பைலட் திட்டத்தில் அடங்கும். இது நிதி இடைத்தரகர்கள் மூலமாக விநியோகிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support