Daily TN Study Materials & Question Papers,Educational News

தேசிய விருது பெற்ற தென்காசி அரசு பள்ளி ஆசிரியை சொல்லித்தரும் பாடம் இதுதான்..!

தேசிய விருது பெற்ற தென்காசி அரசு பள்ளி ஆசிரியை சொல்லித்தரும் பாடம் இதுதான்..!

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மாலதி இந்த ஆண்டுக்கான தேசிய விருது பெற தேர்வு பெற்றுள்ளார்.

நம்மில் பலருக்கு chemistry subject நாளே ஈகுவேஷன்ஸ், ஃபார்முலா, பீரியாடிக் டேபிள் அப்படினு எல்லாத்தையும் மனப்பாடம் பண்றதுக்குள்ள போதும் போதும் என்று ஆகிவிடும். ஆனால் இந்த கஷ்டமான கெமிஸ்ட்ரி பாடங்களையே mobile quiz games, puppet show, வில்லுப்பாட்டு மாதிரி சொல்லிக் கொடுத்தால் எவ்வளவு ஈசியா புரியும்.

இப்படி தன்னோட மாணவர்களுக்கு எளிமையான முறையில் வாழ்வியலோடு இணைந்து அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் தான் வி.கே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் மாலதி டீச்சர். இவருக்கு தான் இந்தாண்டு குடியரசுத் தலைவரோட தேசிய நல்லாசிரியர் விருது கிடைச்சுருக்கு.

மாலதி டீச்சர் தேசிய நல்லாசிரியர் விருது மட்டுமல்லாமல் தமிழக அரசு ராதாகிருஷ்ணன் விருது, 26 மணி நேரம் தொடர்ந்து ஆன்லைன் கிளாஸ் எடுத்து வேர்ல்ட் ரெக்கார்டு என பல விருதுகள் வாங்கி இருக்காங்க. அதுமட்டுமில்லாமல் தன்னோட பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் தன்னோட முயற்சியால world record வாங்க வச்சிருக்காங்க.

14 ஆண்டுகள் அனுபவத்துல திருப்பூர் தென்காசி இன்னும் பல இடத்தில பணியாற்றி இருக்கிறாங்க. இப்போ வீரகேரளம்புத்தூர்ல இருக்குற அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ஆக பணியாற்றி வருகிறார்கள்
மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கணும்னா நம்மளை நம்மளே அப்டேட் பண்ணிக்கணும் அப்படின்னு physcology, app development, robotics ண்ணு பல விஷயங்களை படிச்சு தன்னை தானே அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. Puppet, ரோபோடிக்ஸ்ன்னு மாலதி டீச்சர் கிளாஸ்ல குழந்தைங்க அவ்வளவு ஆர்வத்தோட வேதியல் பாடத்தை கத்துக்கிட்டு இருக்காங்க.

Share:

இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு: 54,676 இடங்கள் காலி..!!!

இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு: 54,676 இடங்கள் காலி..!!!

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 2.19 லட்சம் இடங்களுக்கு, பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், 1.60 லட்சம் இடங்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

இந்த கவுன்சிலிங், ஜூலை 22ல் துவங்கியது. மூன்று சுற்று கவுன்சிலிங் நேற்றுடன் முடிந்தது.

இதில், அரசு பள்ளி மாணவர் பிரிவில், 11,058 பேர்; மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவுகளில், 95,046 பேர் என, மொத்தம், ஒரு லட்சத்து, 6,104 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து, 60,780 இடங்களில், 54,676 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலியிடங்களுக்கு, 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, நேற்று மாலையுடன் முடிந்தது.

இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட, 12,533 பேர் அதிகமாக ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், பெரும்பாலான மாணவர்கள், கணினி அறிவியல், ஐ.டி., ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், இ.சி.இ., போன்ற படிப்புகளை தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவை, குறைந்த மாணவர்களே தேர்வு செய்துள்ளனர்.

மொத்தம், 12 கல்லுாரிகளில், 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 68 கல்லுாரிகளில், 95 சதவீதத்துக்கு அதிகமான இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 11 கல்லுாரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இவ்வாறு கூறினர்.


Share:

தமிழகத்தில் நாளை முதல் B.Ed படிப்பிற்கான விண்ணப்பங்கள் – கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

நாளை முதல் B.Ed படிப்பிற்கான விண்ணப்பங்கள் – கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட் படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் நாளை முதல் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட் சேர்க்கை:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) சேர்க்கைக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி ஆகிய நாளை முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை செலுத்துவதற்கு செப்டம்பர் 11ஆம் தேதி இறுதி நாள் ஆகும். விண்ணப்பங்களில் மாணவர்கள் தங்கள் விருப்ப வரிசையின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளுக்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை முடித்தவர்களும், இளநிலையில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை படித்தவர்களும் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எஸ் சி, எஸ் டி பிரிவினர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எட் படிப்பிற்கான விண்ணப்பத்திற்கு பொது பிரிவினர் ரூ.500 மற்றும், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ 250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணைய முகவரியில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்ய முடியும்.


Share:

TNPSC குரூப் 1,குரூப் 4 தேர்வுகளுக்கு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம்..!!

TNPSC குரூப் 1,குரூப் 4 தேர்வுகளுக்கு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம்..!!


பல்வேறு தேர்வுகளுக்கு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் வெளியிட்டது. குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. 32 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு 2023 நவம்பரிலும் எழுத்து தேர்வு 2024 ஜூலையிலும் நடத்தப்படும். குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் 2023-ல் வெளியிடப்பட்டு பிப்ரவரியில் 2024-ல் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


Share:

காலாண்டு தேர்வு அட்டவணை: கடைசி நேர ட்விஸ்ட்... தமிழக அரசு பிறப்பித்த விடுமுறை மாற்ற உத்தரவு!

காலாண்டு தேர்வு அட்டவணை: கடைசி நேர ட்விஸ்ட்... தமிழக அரசு பிறப்பித்த விடுமுறை மாற்ற உத்தரவு!

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விடுமுறை மாற்றத்தால் தனியார் பள்ளிகளின் தேர்வு கால அட்டவணையிலும் மாற்றம் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகத்தில் காலாண்டு தேர்விற்கு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் பக்காவாக முடிவடைந்துவிட்டன. 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 முதல் 27 வரை தேர்வுகள் நடக்கின்றன.

காலாண்டு தேர்வும், விடுமுறையும்

அதன்பிறகு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தொடர்பாக சர்ச்சை நீடித்து வந்தது. அதாவது, பஞ்சாங்க முறைப்படி செப்டம்பர் 18 அன்று விநாயகர் சதுர்த்தி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை

இதைக் குறிப்பிட்டு நடப்பு 2023ஆம் ஆண்டிற்கான காலாண்டர் அச்சிடப்பட்டது. ஆனால் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று தமிழக அரசின் விடுமுறை கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை திருத்த வேண்டும் என்று இந்து அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்து வந்தது.
தமிழக அரசு அறிவிப்பு

ஆனால் அரசு தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. ஒருகட்டத்தில் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையை செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சில தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேர்வு தேதியை மாற்ற வாய்ப்பு

அரசு தரப்பில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதியில் இருந்து தான் காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. இதனால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் சில தனியார் பள்ளிகளில் 18ஆம் தேதி காலாண்டு தேர்வு வைத்துள்ளன. குறிப்பாக தொடக்க பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணையில் பார்க்கலாம்.

இதன் காரணமாக சிக்கல் எழுந்துள்ளது. தற்போது அன்றைய தினம் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் சம்பந்தப்பட்ட தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிகிறது.

Share:

தமிழ்நாட்டின் மாநில கல்விக்கொள்கை தயார் – குழுவின் தலைவர் அறிவிப்பு!

தமிழ்நாட்டின் மாநில கல்விக்கொள்கை தயார் – குழுவின் தலைவர் அறிவிப்பு!!


தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக துவங்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மாநில கல்விக்கொள்கை தயார் நிலையில் உள்ளதாக குழுவின் தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாநில கல்விக்கொள்கை

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழகத்திலேயே பிரத்யேக கல்வி கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 17 பேர் கொண்ட குழுக்கள் கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகின்றனர். அதாவது, தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி 3 முதல் 5 ஆம் வயது வரை உள்ள குழந்தைகளை பிளே ஸ்கூலில் மட்டுமே சேர்க்கும் படியும், ஒன்றாம் வகுப்பில் இருந்து இருந்துதான் பள்ளி மாணவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுக்கும்படியான அடிப்படைக் கல்வியை துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் இந்த புதிய கல்விக் கொள்கையின்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களின் திறன் வளர்ப்பு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் ஆகியவற்றிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கான கல்விக் கொள்கை தயார் செய்யப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய கல்விக் கொள்கையை செப்டம்பர் மாத இறுதிக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது

Share:

School Morning Prayer Activities 31-08-2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

விளக்கம்:

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

பழமொழி :

Blessings are not valued till they are gone

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள் உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை
நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்

– அன்னை தெரசா

பொது அறிவு :

1. நீல மலைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: நீலகிரி

2. தமிழ்நாட்டின் முக்கடல் சங்கமிக்கும் இடம் எது?

விடை: கன்னியாகுமரி

English words & meanings :

 Fahrenheit - a scale of temperature

வெப்பத்தை அளக்கும் கருவி, வெப்பமானி
டேனியல் காபிரியல் ஃபாரன்ஹீட் எனும் டச்சு நாட்டின் விஞ்ஞானி பெயரால் அழைக்கப் படுகிறது.

Fake - false one. பொய்யான

ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
ஆகஸ்ட்31
மரியா மாண்ட்டிசோரி  அவர்களின் பிறந்தநாள் 
மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். 
இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார்.பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

நீதிக்கதை

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக்கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.
நீதி :
ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

31.08. 2023

*ஒத்திகை ஓவர்: விண்ணில் பாய தயாராகிறது ஆதித்யா எல்-1 இஸ்ரோ அதிரடி. சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பாக ஆதித்யா- எல் இயங்கும். இந்தியாவிற்கே இது ஒரு புது முயற்சி ஆகும்.

*உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் 12 வருடங்களாக பூமிக்கடியில் 11 அறைகளுடன் இரண்டு மாடி வீட்டை கட்டியுள்ளார்.

*தண்டவாள சீரமைப்பு பணியால் அரக்கோணம் - சென்னை ரயில்கள் ரத்து.

*2030 ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்- ஆய்வில் தகவல்.

*உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு.

*யூ. எஸ். ஓபனில் மோசமான தோல்வியை சந்தித்தார் - வீனஸ் வில்லியம்ஸ்.

Today's Headlines

*Rehearsal over: Aditya L-1 ISRO is in action getting ready to fly.  Aditya-L will operate as an observatory to study the Sun.  This is a new initiative for India.

 *In Uttar Pradesh, a man spent 12 years building a two-storey house with 11 rooms underground.

 *Arakkonam-Chennai trains were canceled due to track maintenance work.

 *Air pollution in Chennai to increase by 27 percent by 2030- study informs.

 * World Cup chess tournament silver medalist

 Pragnananda received a grand welcome at the Chennai airport.

 *U.  S.  Worst loss in Open - Venus Williams.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

பள்ளி மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண்: தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் யோசனை..!!

பள்ளி மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண்: தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் யோசனை..!!

தமிழகத்தில் மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதுடன், ஊக்கத் தொகை அல்லது உயர் கல்வியில் முன்னுரிமை வழங்கலாம் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர் எஸ்.சிவகுமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: நாளிதழ் வாசிப்பை பள்ளிபருவத்திலிருந்தே மாணவர்களுக்கு பழக்கி விட்டால், அவர்களுக்கு அது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பெரும் பயன்தரும்.

கேரளாவைப் போல.. கேரள மாநிலத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளிதழ் வாசிப்புக்கு 10 மதிப்பெண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அம்மாநில கல்வித் துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார்.

இதேபோல, இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி, தினந்தோறும் நாளிதழை வாசித்து, அதற்கு ஜூன் முதல் மார்ச் வரை மாதந்தோறும் 10 மதிப்பெண்களுக்கு ‘முதல்வர் நாளிதழ் வாசிப்பு திறனறித் தேர்வு’ என்ற பெயரில் தேர்வு வைத்து, மொத்தம் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உதவித் தொகையோ அல்லது உயர்கல்வியில் முன்னுரிமையோ வழங்கலாம்.

எஸ்.சிவகுமார்

பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் தேவையான நாளிதழ்களை வாங்கினால்தான் அனைத்து மாணவர்களும் படிக்க முடியும். நாளிதழ்களை வாங்க உள்ளூரில் உள்ள சேவை சங்கங்கள், தன்னார்வலர்களின் உதவியை நாடலாம்.



பொது அறிவு மேம்படும்: தற்காலத்தில் அனைத்து வேலைவாய்ப்புகளுமே போட்டித் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுவதால், பொது அறிவு என்பது மிகவும் அவசியமானது. நாளிதழ்களை வாசிப்பதால், பொது அறிவு மேம்படுவதுடன், மாணவர்கள் ஒழுக்க நெறிகளுடன் வளரும் சூழலும் ஏற்படும்

பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ள வாசிப்பு இயக்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இது அமையும். பள்ளிக் கல்வித்துறை இதற்கான திட்டமிடுதல்களை மேற்கொண்டு, நாளிதழ் வாசிப்பை அன்றாட வழக்கமாக இளம் வயதிலேயே பழக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Share:

இன்று இரவு 8.37 மணிக்கு நீல நிறத்தில் காட்சியளிக்க இருக்கும் சூப்பர் மூன் – பார்க்க தவறவிடாதீர்கள்!

இன்று இரவு 8.37 மணிக்கு நீல நிறத்தில் காட்சியளிக்க இருக்கும் சூப்பர் மூன் – பார்க்க தவறவிடாதீர்கள்!

வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக இன்று இரவு 8.37 மணியளவில் நிலா நீல நிறத்தில் காட்சியளிக்க இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் மூன்:

பௌர்ணமி நிலவை விட வழக்கத்திற்கும் அதிகமாக நிலா இன்று கூடுதல் வெளிச்சத்துடன் காணப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், சூப்பர் மூன் எனப்படும் அதிவெளிச்சமான நிலவினை இன்று இரவு 8.37 மணி அளவில் பொதுமக்கள் வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தென்படும்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே இரண்டு பௌர்ணமிகள் இருக்கும் நிலையில் பூமிக்கு மிக அருகில் மூன்று லட்சத்து 57 ஆயிரத்து 444 கிலோமீட்டர் தூரத்தில் வந்து நிலவு நீல நிறத்தில் பிரகாசிக்க இருக்கிறது. அதாவது, வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக அல்லது சூரியனிடமிருந்து வரும் சிவப்பு ஒளியை தடுக்கும் வகையில் ஏதேனும் கதிர் குறுக்கே வருவதால்தான் சந்திரன் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.!

மக்களே.. இன்று 8:37 மணிக்கு நீல நிறத்தில் காட்சியளிக்க இருக்கும் ப்ளூ மூனை பார்க்க மறந்து விடாதீர்கள். பின்னர், பல ஆண்டுகளுக்குப் பிறகே இந்த சூப்பர் மூனை மீண்டும் பார்வையிட முடியும்

Share:

தமிழக பள்ளி மாணவர்களே லீவுக்கு ரெடியா???…, தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை வருது!!

தமிழக பள்ளி மாணவர்களே லீவுக்கு ரெடியா???…, தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை வருது!!


தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் அனைத்தும் 2 வாரங்கள் தாமதமாகவே திறக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு தேர்வை எதிர்நோக்கி உள்ளது. இந்த காலாண்டு தேர்வுகளானது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செப்டம்பர் மாத 2வது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதியுடனும், 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும் காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், காலாண்டு விடுமுறை அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதாவது, 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலும் (10 நாட்கள்), 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலும் (5 நாட்கள்) விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories