Daily TN Study Materials & Question Papers,Educational News

12th std important 4 mark question- தமிழாக்கம் தருக

 12th std important 4 mark question- தமிழாக்கம் தருக


இயல்-1 (Iyal-1)

1. Learning is a treasure that will follow its owner everywhere.

கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

2. A new language is a new life.

புதிய மொழியைக் கற்கும் போது புதிதாய்ப் பிறக்கிறோம்.

3. If you want people to understand you, speak their language.

மக்கள் உன்னை புரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் மொழியில் உரையாடு.

4. Knowledge of languages is the doorway to wisdom.

மொழி அறிவு ஞானத்தின் வழி.

5. The limits of my language are the limits of my world.

மொழியறிவின் எல்லையே உனது உலக அறிவின் எல்லை.

கலைச்சொல் அறிதல்

12th Tamil இயல்-1 முதல் இயல்-9 வரை கலைச்சொல் தருக:-

1.Sabscription - உறுப்பினர் கட்டணம்.

2.Fiction -புனைவு.

3.Biography -வாழ்க்கை வரலாறு.

 4.Archive -ஆவணம்.

5.Manuscript - கையெழுத்துப் பிரதி .

6.Bibliography -நூல் நிரல்.

7.Lobby - ஓய்வறை.

8.Checkout - வெளியேறுதல்.

9.Tips - சிற்றீகை .

10.Mini meals - சிற்றுணவு.

11.Affidavit - ஆணை உறுதி ஆவணம்.

12.Allegation - சாட்டுரை.

13.Conviction - தண்டனை.

14. Jurisdiction - அதிகார எல்லை.

15.Plaintiff - வாதி.

16.Debit card - பற்று அட்டை

17.Demand draft - கேட்பு வரைவோலை.

18.Withdrawal slip - திரும்பப் பெறும் படிவம்.

19.Teller - விரைவுக் காசாளர்.

20.Mobile banking - அலைபேசி வழி வங்கி முறை.

21.Internet banking - இணைய வங்கு

22.Platfom - நடைமேடை.

23.Train track - இருப்புப் பாதை .

24.Railway signal - தொடர்வண்டி வழிக்குறி.

25.Ticket inspector - பயணச்சீட்டு ஆய்வாளர்.

26.Level crossing - இருப்புப் பாதையை

கடக்கும் இடம்.

27.Metro train - மாநகர தொடர்வண்டி.

28.Arrival - வருகை.

29.Departure - புறப்பாடு.

30.Conveyor belt - ஊர்திப் படை.

31.Take off - வானூர்தி கிளம்புதல்.

32.Passport - கடவுச்சீட்டு.

33.Visa - நுழைவு இசைவு.

34.Domestic flight - உள்நாட்டு வானூர்தி.

35.Artist - கவின் கலைஞர்.

36.Animation - இயங்குபடம் .

37.Newsreel - செய்திப்படம்.

38.Cinematography - ஒளிப்பதிவு.

39.Sound effect - ஒலி விளைவு.

40.Multiplex complex - ஒருங்கிணைந்த

திரையரங்க வளாகம்.

41.Stamp pad - மைப் பொதி .

42.Stapler - கம்பித் தைப்புக் கருவி.

43.Folder - மடிப்பு த்தாள்.

44.File - கோப்பு.

45.Rubber stamp - இழுவை முத்திரை.

 46.Eraser - அழிப்பான்.

12th Tamil இயல்-1 - உயிரினும் ஓம்பப்படும் - வினா விடை குறிப்புகள் அனைத்தும்.- Click Here


Share:

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் -உயர்நீதிமன்றம் கேள்வி

 பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்புக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி, கோவையை சேர்ந்த எஸ்.பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


அந்த மனுவில், 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24-ம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனி தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், அதனால் அவர்கள் ஒராண்டை இழக்க நேரிடும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனித்தேர்வர்களின் முடிவுகளை வெளியிடும் வரை, மேல் நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் தள்ளி வைக்க வேண்டும் எனவும், தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தனது சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்நிலை வகுப்புகளுக்கு வரும் 24ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தனித்தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து ஆகஸ்ட் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Share:

10, 11,12ஆம் வகுப்பு செப்டம்பர் பொதுதுணைத்தேர்வு

  10, 11,12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறிருப்பதாவது:

'மார்ச் 2020 இல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு (+1), பன்னிரண்டாம் வகுப்பு (+2) பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களிடமிருந்தும், மார்ச் பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுத தவறியவர்களிடம் இருந்து செப்டம்பர் மாதம் நடைபெறும் துணை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு மார்ச் பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்து தனித்தேர்வர்கள் செப்டம்பர் மாதம் நடைபெறும் பத்தாம் வகுப்பு துணை தேர்வினை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

அதேபோல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட வேதியில், புவியியல், கணக்குப் பதிவியல், தொழிற்கல்வி கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான பதினோராம் வகுப்பு பொது தேர்வு எழுத ஏற்கனவே விண்ணப்பத்திருந்த தனித்தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

11 மற்றும் 12 ஆம் ஆண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இயற்கையை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் விண்ணப்பம் செய்யலாம். தேர்வர்கள் தேர்வு கட்டணத்தை சேவை மையத்தில் பணமாக செலுத்த வேண்டும். தேர்வர்கள் பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தாங்கள் பயின்ற பள்ளிகள் மற்றும் தனித் தேர்வு மையங்கள், சேவை மையங்களுக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கரோனோ முன்னெச்சரிக்கை தொடர்பாக அரசால் வெளியிடப்பட்டுள்ள மன்னித்து வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பட்டு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் மற்றும் நெறிமுறையில் பின்னர் அறிவிக்கப்படும்.

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 11 ம் வகுப்பு பேர்வழிகளுக்கு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரையும்,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 29 ந் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

101 வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு அட்டவணை:

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு அட்டவணை:

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு அட்டவணை:


Share:

தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில்

 இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, வரும் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் மத்தியில் இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போதே இருந்தே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 1 முதல் 10ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. விடுமுறைக்கு பிறகும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தனியார்கள் ஆன் லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் தமிழக அரசு வகுப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இதனிடையே, ஆகஸ்ட் 17ம் தேதிக்கு பிறகு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார்கள் பள்ளி ஏற்கெனவே கட்டணங்களை வசூலித்து வருவதோடு, மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, வரும் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை மத்திய, மாநில அரசுகள் கல்வி கட்டணத்தை செலுத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறை இணையத்தளத்தில், வரும் 27 ம் தேதி முதல் செப்டம்பர் 25 ம் தேதி வரை பெற்றோர்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதன்படி குழந்தையின் வீட்டிலிருந்து தனியார் பள்ளி 1 கிலோ மீட்டர் தொலைவிலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது தமிழக அரசு.


Share:

பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், 1, 6, 9-ம் வகுப்புக்கான 2020-21-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான (2 முதல் 10-ம் வகுப்பு) மாணவர் சேர்க்கையும் வரும் 17-ம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும், மேல்நிலைப் பள்ளிகளில் +1 வகுப்பு மாணவர் சேர்க்கை வரும் 24-ம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.


மேலும், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த மாணவர் சேர்க்கை செய்யவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய சேர்க்கை செய்யும் நாளில் மாணவர்களுக்குரிய விலையில்லா பாடப் புத்தகங்கள், புத்தகப்பை, சீருடை மற்றும் இதர கல்வி சார்ந்த பொருட்களை வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடுக்கான சேர்க்கைக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனருக்கு அனுமதி வழங்கியும் அரசு உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய அரசின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் :


  • 5 மற்றும் 8-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் (டி.சி) வழங்க உரிய நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுத்து அதற்கான மாற்றுச் சான்றிதழ்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி, சமூக இடைவெளியை பின்பற்றி மாற்றுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
  • பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களுடைய ஊட்டுப் பள்ளிகளில் (பீடர் ஸ்கூல்) 5, 8-ம் வகுப்பு படித்த மாணவர்களின்
  •  பெற்றோர் 
  • செல்போன் எண்கள், 
  • வீட்டு முகவரியை பெற்று 6, 9-ம் வகுப்புகளில் குறிப்பிட்ட நாட்களில் சேர்க்கை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேலும் அதிக மாணவர்கள் இருந்தால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலையில் தலா 20 மாணவர்கள், பெற்றோரை அழைத்து மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும். 
  • அதற்கேற்ப கூடுதல் நாட்களையும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Share:

பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - மத்திய அரசு

 

சீனாவின் நகரில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் 210 அதிகமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இதனிடையே, தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்றும், கொரோனா தொற்று குறைந்ததும், பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டபின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என மத்திய உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Share:

அம்மா கவிதை

 

#என்னுயிர்_அன்னையே

**********************************************
கோயில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
நடமாடும் தெய்வம்
நீ என்னோடு இருக்கையிலே..!

பசி தூக்கம் தனை மறந்து
உயிர் நோகும் வலி மறந்து 
ஈரைந்து திங்கள்
இன்பமுடன் எனைச்
சுமந்து ஈன்றவளே..!

நான் செய்த
பெருந் தவத்தால்
எந்தன் அன்னையானவளே..!
என் மகளுக்கும் 
அன்னையாகி 
அரவணைத்துக் காப்பவளே..!

நிழலாக எனைத் தொடர்ந்து  
நித்தம் என்னை ஆள்பவளே..!
கலங்கரை விளக்கமென 
நல்வழிகாட்டி நிற்பவளே..!

எந்தன் தன்னம்பிக்கையின்
தாரக மந்திரம் நீதானம்மா..!
 நீயின்றி நானில்லையம்மா..! 
எத்தனை ஜென்மங்கள் 
எனக்கிருந்தாலும்
நீயே என் தாயாகி
என்னைக் காத்திடும் 
வரம் கொடுத்திடம்மா..!

அம்மா என்னும் 
அழகிய கவிதையே..!
என்றென்றும் என்னுயிர் நீயே..!

              I LOVE YOU AMMA

                        *ரேணுகா ஸ்டாலின்*
Share:

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு கட்டுரை

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்



விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 14, 1891

இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா

பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்

இறப்பு: டிசம்பர் 6, 1956

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.

உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்

பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.

சமூகப்பணிகள்

1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”

இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்


வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.

விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு


ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.

பெளத்த சமயம் மீது பற்று


தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.

அம்பேத்கரின் பொன்மொழிகள்


“ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”
“வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”

இறப்பு


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

Share:

காமராஜர் வாழ்க்கை வரலாறு

காமராஜர் வாழ்க்கை வரலாறு

முன்னுரை

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்கவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்து  பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.


பிறப்பு: ஜூலை 15, 1903
இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.
இறப்பு: அக்டோபர் 2, 1975
நாட்டுரிமை: இந்தியன்

இளமை​

காமராஜர் ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய பயின்றார்
1908 ஆம் ஆண்டில் ஏனாதி நாராயண வித்யா சாலையிலும் .
பின்னர் விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியிலும் பயின்றார் .
அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால் பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர்,
தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்

அரசியல்

இளமை காலம் முதலே சுதந்திர போராட்ட கருத்துக்கள் மூலம் ஈர்க்க பட்டார்
தனது 16 வது வயதிலேயே இந்தியன் நேஷனல் காங்கிரஸ் இல் தன்னை இணைத்து கொண்டார்.1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் நடந்த உப்பு சத்தியா கிரகத்தில் கலந்து கொண்டு வேதாரண்யம்   நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.
‘ஒத்துழையாமை இயக்கம்’
, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’,
 ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார்..மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்

காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார்.1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார்


தமிழக முதல்வராக காமராசர்,

           1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார்.கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.காமராஜர், தன்னுடைய அமைச்சரவையில்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.தன்னுடைய முதல் பணியாக  குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு,  மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார்.

கல்வித்திட்டம்

17000த்திற்கும் மேற்பட்ட புதிய  பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தினார்.இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

தொழில்துறை

தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்
நெய்வேலி நிலக்கரித் திட்டம்
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்
கல்பாக்கம் அணு மின்நிலையம்
ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை
கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
சேலம் இரும்பு உருக்கு ஆலை
பாரத மிகு மின் நிறுவனம்
இரயில் பெட்டித் தொழிற்சாலை
நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன
நீர்பாசனம்
மேட்டூர் கால்வாய்த்திட்டம்
பவானி திட்டம்
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்
மணிமுத்தாறு,
 அமராவதி,
வைகை சாத்தனூர்,
கிருஷ்ணகிரி,
ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார்

காங்கிரஸ் தலைவர்

           கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டத்தின்  படி அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்.கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டத்தின்  படி அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்.1963 அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்
1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார்.
1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார்

இறப்பு

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார்.அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது.
Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories