Daily TN Study Materials & Question Papers,Educational News

TNPSC Forest Apprentice தேர்வின் இறுதி முடிவுகள் – சற்றுமுன் வெளியீடு!

TNPSC Forest Apprentice தேர்வின் இறுதி முடிவுகள் – சற்றுமுன் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Forest Apprentice பணிக்கென நடைபெற்ற தேர்வுகளின் இறுதி முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Forest Apprentice இறுதி முடிவு:

தமிழக வனத்துறையில் 2022ம் ஆண்டு Forest Apprentice பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது TNPSC தேர்வாணையத்தால் 08.08.2022 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான விண்ணப்பங்கள் 06.09.2022 அன்று வரை பெறப்பட்டு எழுத்து தேர்வானது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03ம் தேதி தொடங்கப்பட்டு 13ம் தேதி வரை நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. பிறகு எழுத்து தேர்வு மூலம் 1:3 என்ற விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நேர்காணல் (Oral Test) ஆனது 29.12.2023 அன்று நடத்தப்பட்டது.

இந்நிலையில் இத்தேர்வின் இறுதி முடிவானது நேற்று (08.01.2024) வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற TNPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தேர்வு செய்யப்பட நபர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

வருமான வரித்துறையில் காத்திருக்கும் புதிய வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

வருமான வரித்துறையில் காத்திருக்கும் புதிய வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!



வருமான வரித்துறையில் (Income Tax Department) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Standing Counsel பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 25.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

வருமான வரித்துறையில் (Income Tax Department) காலியாக உள்ள Senior Standing Counsel பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Standing Counsel பணிக்கான தகுதி:

Senior Standing Counsel பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Direct Taxes துறையில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ள வழக்கறிஞராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Standing Counsel வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Senior Standing Counsel ஊதியம்:

இந்த வருமான வரித்துறை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Senior Standing Counsel தேர்வு முறை:

Senior Standing Counsel பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Senior Standing Counsel விண்ணப்பிக்கும் முறை:        

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 25.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Share:

மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் – தேசிய மருத்துவ கமிஷன் தகவல்!

மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் – தேசிய மருத்துவ கமிஷன் தகவல்!



முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்து தேசிய மருத்துவ கமிஷன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அனைத்தும் தேர்வுகளின் வாயிலாகவே நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை தேசிய மருத்துவ கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி முதுநிலை மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடத்தப்படும். கவுன்சிலிங் முன்பாகவே படிப்புக்கான கல்வி கட்டண விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட வேண்டும். கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தன்னிச்சையாக நடத்த முடியாது. மத்திய அல்லது மாநில கவுன்சிலிங் ஆணையம் மட்டுமே கவுன்சிலிங் நடத்தும்.

நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் பொதுவான மருத்துவ கவுன்சிலிங் மட்டுமே நடத்தப்படும். தேர்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தகுதி பட்டியலின்படி கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. பல விடைகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்யும் வாய்ப்பும் மருத்துவ பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான நடைமுறைகளிலும் புதிய மாற்றங்கள் செய்யப்படும். மேலும் மாவட்ட மருத்துவமனைகளில் 50 படுக்கை வசதியாக  சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. படிப்பை முடித்த பின் பதிவு செய்வதற்கான மாணவர்களுக்கு இருந்த சிக்கல்கள் அனைத்தும் நீக்கம் செய்யப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்கள் நியமனம் – அரசு முடிவு!

தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்கள் நியமனம் – அரசு முடிவு!

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் நாளை (ஜன. 9) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக பணியிடங்கள்

தமிழகத்தில்  ஊதிய உயர்வு (15வது ஊதிய திருத்த ஒப்பந்தம்), பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதியுதவி வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குதல் போன்ற 6  கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரி போக்குவரத்து துறை ஊழியர்கள் நாளை (ஜன. 9) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.
இந்நிலையில் அரசு சார்பில் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் சங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், மக்களுக்கு சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என போக்குவரத்து துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அரசு சார்பில் தற்காலிக ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



Share:

தமிழகத்தில் ஜன.10 முதல் பொங்கல் பரிசு – அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஜன.10 முதல் பொங்கல் பரிசு – அரசு முக்கிய அறிவிப்பு!



தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த பரிசுத்தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பொங்கல் பரிசு

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பணம் போன்றவை பொங்கல் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ,1000 ரொக்கமும் வழங்கப்பட இருக்கிறது.

அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், இந்த பொங்கல் பரிசுக்கான டோக்கன் நேற்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 10 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை ஜன.10ம் தேதி முதல் துவக்க வேண்டும். தொடர்ந்து 14ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஜன 12 ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

டான்செட், சீட்டா தேர்வுக்கு ஜன.10 முதல் விண்ணப்பம்..!!

டான்செட், சீட்டா தேர்வுக்கு ஜன.10 முதல் விண்ணப்பம்..!!

எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்)கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.

இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 9-ம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 10-ம்தேதியும் நடத்தப்பட உள்ளது

இதுகுறித்து அண்ணா பல்கலை. டான்செட் பிரிவு செயலர் தரன் வெளியிட்ட அறிவிப்பு: டான்செட், சீட்டா தேர்வுகள் தமிழகத்தின் 14 நகரங்களில் நடைபெற உள்ளன.

இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவுஜன. 10-ல் தொடங்கி பிப். 7 வரைமேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் tancet.annauniv.edu/tancet எனும் வலைதளம் வழியே விண்ணப்பப் படிவங்களை சமர்பிக்கலாம்.

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாணவர் சேர்க்கையின் போது சான்றிதழ்களை சமர்ப்பித்தால் போதுமானது. தேர்வு முடிவு மார்ச் இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். மேலும் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Share:

ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி - பள்ளிக் கல்வித்துறை முடிவு..!!

ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி - பள்ளிக் கல்வித்துறை முடிவு..!!

தமிழ்நாட்டில் 20,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கவும், ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கையடக்க கணினிகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

தமிழ்நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என 33 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவீன முறையில் கல்வி கற்பிக்க ‘ஸ்மார்ட் வகுப்பறைகளை’ அமைக்கவும், அத்துடன் இன்டர்நெட் வசதிகளை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழ்நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என 33 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவீன முறையில் கல்வி கற்பிக்க ‘ஸ்மார்ட் வகுப்பறைகளை’ அமைக்கவும், அத்துடன் இன்டர்நெட் வசதிகளை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் இயங்கி வருகின்றது. அது நடுநிலைப் பள்ளிகளில் இல்லை.இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், 6552 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகளை பொறுத்தவரை மாணவர்கள் கரும்பலகை இல்லாமல் அகன்ற திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும்.

இந்த பணிகள் அடுத்த கல்வி ஆண்டுக்குள் தொடங்கப்பட உள்ளன. இது தவிர, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் நவீன டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 853 இடைநிலை ஆசிரியர்கள், 18 ஆயிரத்து 496 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 53 ஆயிரத்து 349 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கையடக்க கணினி வழங்கப்படும். இந்த கல்வியாண்டு வழங்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. 

இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இணைய தள வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம் ரூ.1500 கட்டணத்தில் பள்ளிகளில் இணைய தள வசதிகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அடுத்தகட்டமாக கையடக்க கணினிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.81 கோடியே 12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


Share:

ஜன.22 பொது விடுமுறை அறிவிப்பு – அரசின் முடிவு என்ன?

ஜன.22 பொது விடுமுறை அறிவிப்பு – அரசின் முடிவு என்ன?



ஜனவரி 22ஆம் தேதி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற உள்ளதை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

விடுமுறை உத்தரவு:

2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களினால் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளைக் கடந்தும் 500 ஆண்டுகால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட உள்ளது. அன்றைய

 தினத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், கோயில்கள் மற்றும் ஊர்களில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும், தீபாவளி பண்டிகை போல் சிறப்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று சிறப்பு விருந்தினர்களாக சுமார் 7,000 க்கும் அதிகமானவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதை தவிர பல இலட்சக்கணக்கான மக்கள் ராமர் கோயிலில் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதே போல் விழா நடக்க உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இன்னும் விடுமுறை குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்த சில நாட்களில் உரிய ஆலோசனைகளை நடத்தி விடுமுறை அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

Share:

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!



தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட இருப்பதாக உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரிசி குடும்பத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 ரொக்கமும் வழங்கப்பட இருப்பதாக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் ஊழியர்கள் மற்றும் எந்த பொருளும் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த பொங்கல் பரிசு பெற முடியாது எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசு ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், இந்த பரிசு தொகுப்பினை வழங்குவதற்கென ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் கூடுதல் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகையை ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரையிலும் ரேஷன் கடைகளையும் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இந்த ரூ. 1000 ரொக்கத் தொகையை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

9 மற்றும் 10-ம் வகுப்பு பிசி, எம்பிசி மாணவிகளுக்கு உதவித்தொகை..!!

 9 மற்றும் 10-ம் வகுப்பு பிசி, எம்பிசி மாணவிகளுக்கு உதவித்தொகை..!!

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும்10 ஆகிய வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இதில் பயன்பெற, 9 மற்றும் 10-ம் வகுப்பில் பயிலும் மாணவிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தன் பெயரில் கணக்கு தொடங்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண், வங்கிக் கணக்கு, வருமானச் சான்று, சாதிச்சான்று நகல்களை தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தலைமையாசிரியர்கள் மாணவியரின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர்களை அணுக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories