Daily TN Study Materials & Question Papers,Educational News

10th science Slow Leaners study material ( Tamil Medium )

10th science Slow Leaners study material ( Tamil Medium )

10th science Slow Leaners Minimum study material ( Tamil Medium ) - viluppuram CEO  

இந்த 10th science Slow Leaners study material ( Tamil Medium ) - viluppuram CEO  டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

10th science Slow Leaners study material ( English Medium ) - viluppuram CEO

10th science Slow Leaners study material ( English Medium )

10th science Slow Leaners study material ( English Medium ) - viluppuram CEO  

இந்த 10th science Slow Leaners study material ( English Medium ) - viluppuram CEO  டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு India Post office யில் வேலைவாய்ப்பு - உடனே முந்துங்கள்!

10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு India Post office யில் வேலைவாய்ப்பு  - உடனே முந்துங்கள்! 

இந்திய அஞ்சல் துறையில் 40,800+ GDS காலிப்பிபணியிடங்கள்

India Post Recruitment 2023 - Apply here for GDS Posts - 40,889 Vacancies - Last Date - 16.02.2023

India Post.லிருந்து காலியாக உள்ள GDS பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

India Post

பணியின் பெயர்: 

GDS

மொத்த பணியிடங்கள்: 

40,889

தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: 

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • BPM – ரூ.12,000/- முதல் ரூ.29,380/-
  • ABPM – ரூ.10,000/- முதல் ரூ.24,470/-

வயது வரம்பு: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


தேர்வு செயல்முறை: 

தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Merit list) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.02.2023 பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

16.02.2023

vacancy List Pdf Download here

Share:

11th tamil Important 6 marks - Public Exam 2023 ( விரிவானம்)

11th tamil Important 6 marks - Public Exam 2023 ( விரிவானம்)

6. பிம்பம்   
7. சிம்பொனி தமிழர் , ஆஸ்கர் நாயகன்  
8. நர்தகி  நடராஜன் ( செவ்வி ) 
9. வாடிவாசல் .

Share:

கண்ணம்மா போட்ட கண்டிஷன்.. மீண்டும் பாரதிக்கு கல்யாணம்.. சீரியலின் எதிர்பாராத கடைசி முடிவு!

 கண்ணம்மா போட்ட கண்டிஷன்.. மீண்டும் பாரதிக்கு கல்யாணம்.. சீரியலின் எதிர்பாராத கடைசி முடிவு!

பாரதிகண்ணம்மா சீரியலில் மீண்டும் கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

ஊர்க்காரர்கள் அனைவரும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமணத்தை சிறப்பாக செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.


கண்ணம்மா தன்னுடைய கல்யாண விஷயத்தில் கண்டிஷன் ஒன்றை போட்டு இருக்கிறார்.

கண்ணம்மாவின் ஆசையை நிறைவேற்ற பாரதி குடும்பத்தோடு சேர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்.

கல்யாண விஷயத்தில் எழில் எடுத்த முடிவு.. கதறி அழும் ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத முடிவுகல்யாண விஷயத்தில் எழில் எடுத்த முடிவு.. கதறி அழும் ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத முடிவு

ஊர்க்காரர்களின் அன்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் எல்லோரும் கண்ணம்மா வீட்டுக்கு திரும்பி வந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஊர் தலைவர் இப்போதுதான் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஊருக்கு கண்ணம்மா தன்னந்தனியா வரும்போது எங்களுக்கு ரொம்பவே டாக்டர் மேல கோபத்தில் இருந்தோம். ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று வருத்தத்தில் இருந்தோம் .ஆனால் இங்கே வந்து டாக்டர் எங்களுக்கு எவ்வளவு பெரிய உதவியும் செய்து இப்போது கண்ணம்மா மனதையும் மாற்றிவிட்டார் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். பின்பு தாமரை இந்த ஊரை விட்டு டாக்டர் போனாலும் மீண்டும் எந்த ஊருக்கு வைத்தியம் பார்க்க வர வேண்டும் .இங்கே ஒரு ஹாஸ்பிடல் நீங்க தனியா கட்டி வர வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார் .அதற்கு கண்ணம்மா தான் உதவ வேண்டும் என்று கூறுகிறார். பிறகு ஊர்க்காரர்கள் எப்போ சென்னைக்கு கிளம்ப போறீங்க என கேட்க, சீக்கிரம் போகணும் போய் கல்யாண வேலைகளை பார்க்கணும் என சௌந்தர்யா சொன்னதும் கணபதி ஏன் இந்த ஊரிலேயே கல்யாணத்தை வைக்கக் கூடாது என கேட்கிறார்.

கண்ணம்மாவின் கண்டிஷன்

கணபதியின் கேள்விக்கு பாரதியும் சம்மதம் சொல்ல, கண்ணம்மாவும் எனக்கும் எந்த மறுப்பும் இல்லை என்று கூறுகிறார். அடுத்து சௌந்தர்யா எனக்கு பரிபூரண சம்மதம் என்று கூறுகிறார் .ஆனால் கண்ணம்மா எனக்கு கல்யாணம் லட்சம் லட்சமா செலவு பண்ணி பிரமாண்டமா இருக்கணும்னு நான் ஆசைப்படலை. ஆனா மறக்க முடியாத விஷயமாக இருக்கணும். இத்தனை வருஷம் நான் பட்ட துன்பத்திற்கு ஆறுதலாக இருக்கணும் என கண்டிஷன் போடுகிறார்.


ஒரு ஐடியா சொல்லுங்க பாஸ்

கண்ணம்மாவின் கண்டிஷனை கேட்ட அனைவரும் கல்யாணத்தை எப்படி வித்தியாசமாக பண்ணுகிறது என யோசித்துக் கொண்டிருக்கின்றனர். பாரதியிடம் சௌந்தர்யா நீயே யோசித்து முடிவு எடு என்று சொல்ல, பாரதி கணபதியிடம் ஐடியா கேட்கிறார். பிறகு அகிலன், அஞ்சலி வர அவர்களிடமும் பாரதி ஐடியா கேட்கிறார் .அனைவரும் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே வரும் கண்ணம்மா இங்க வந்து என்ன யோசனை செஞ்சுட்டு இருக்கீங்க என கேட்கிறார். கல்யாணம் வித்யாசமா இருக்கணும்னு சொன்னா அதனால் தான் என்ன பண்ணனும்னு யோசிச்சிட்டு இருக்கோம் என பாரதி சொல்ல, நான் வேணும்னா க்ளூ கொடுக்கிறேன் என்று கண்ணம்மா கூறுகிறார்.

மாட்டிக்கொண்ட பாரதி

இந்த கல்யாணம் எப்படி நடக்கணும்னு என்கிட்ட தெளிவா ஐடியா இருக்கு என கண்ணம்மா சொல்ல, என்ன ஐடியா? என்று அனைவரும் ஆவலோடு கேட்க, அதை சொல்ல மாட்டேன் என கடைசியில் கண்ணம்மா ஷாக் கொடுக்கிறார். பிறகு இரவு நேரத்தில் கண்ணம்மா தூங்கியதும் பாரதி ரூமுக்குள் சென்று கண்ணம்மாவின் டைரியில் கண்டிப்பாக ஏதாவது எழுதி வைத்திருப்பார் என அதைத் தேட முயற்சி செய்கிறார், ஆனால் அப்போது கண்ணம்மாவிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Share:

மெயின் வில்லன் சிம்பு? தளபதி 67 ப்ரோமோவில் சிம்பு.. அப்போ அவரு தான் மெயின் வில்லனா?:

 தளபதி 67 ப்ரோமோவில் சிம்பு.. அப்போ அவரு தான் மெயின் வில்லனா?: எகிறும் எதிர்பார்ப்பு... உண்மை என்ன?

சென்னை: விஜய் நடிப்பில் பொங்கல் ரேஸில் களமிறங்கிய வாரிசு, உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது.

வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.

விக்ரம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு லோகேஷ் சினிமாட்டிக் கான்செப்ட்டில் உருவாகும் தளபதி 67 மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்

வாரிசு திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த விஜய் அடுத்து தளபதி 67 ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். எப்போதும் ஒரு படம் வெளியானதும் வெளிநாடு டூர் சென்று வந்த பிறகே அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பது விஜய்யின் வழக்கம். ஆனால், தளபதி 67 படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்ததோடு, படப்பிடிப்பிலும் உடனடியாக கலந்துகொண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஆனாலும் தற்போது வரை தளபதி 67 படம் பற்றிய அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

பிப்ரவரி முதல் வாரத்தில் அப்டேட்

லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. இதனால் இனிமேல் என் படங்களில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இருக்கும் என லோகேஷ் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் தளபதி 67 படமும் LCU கான்செப்ட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் இன்னும் தாறுமாறான எதிர்பார்ப்பில் உள்ளது தளபதி 67. இந்நிலையில் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் பிப்ரவரி 1 முதல் 3ம் தேதிக்குள் வெளியாகும் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் மோதும் பலமான கூட்டணி

இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோர் கமிட் ஆகியுள்ளார்களாம். சில தினங்களுக்கு முன்னர் தளபதி 67 ஷூட்டிங்கில் கலந்துகொண்டதை உறுதி செய்திருந்தார் மிஷ்கின். அதேபோல் இரு தினங்களுக்கு முன் தளபதி 67ல் நடிக்கும் அர்ஜுனின் கெட்டப்பும் வெளியாகி வைரலானது. இதனிடையே தளபதி 67 அப்டேட்டை விக்ரம் படத்துக்காக எடுக்கப்பட்ட டைட்டில் ப்ரோமோ மாதிரி வெளியிட லோகேஷ் முடிவு செய்துள்ளாராம்.

மெயின் வில்லன் சிம்பு?

சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் கெளதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் தவிர இன்னொரு மெயின் வில்லன் படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கேரக்டரில் நடிக்க முதலில் விஷாலுடன் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்திய செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி சிம்பு தான் மெயின் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. பத்து தல சூட்டிங் முடித்துவிட்ட சிம்பு, அவரது அடுத்தப் படம் குறித்து அறிவிக்காமல் சைலண்டாக இருக்கிறார். இதனால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தளபதி 67 ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது ஆதாரமற்ற தகவல் என்றும், சிம்பு தளபதி 67ல் நடிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் வாரிசு படத்தில் 'தீ தளபதி' என்ற பாடலை சிம்பு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்

 பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்

நவ கிரகங்களின் பார்வை பயணங்களால் மூன்று ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.

 பிப்ரவரி மாதத்தில் மூன்று ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும், சில ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தும். சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கும்ப ராசியிலும் 15ஆம் தேதிக்கு மேல் மீன ராசியில் உச்சம் பெற்றும் பயணம் செய்வார். புதன் மகர ராசியிலும் மாத இறுதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் மாதம் முழுவதும் ரிஷப ராசியில் பயணம் செய்வார். இந்த கிரகங்களின் பயணத்தால் துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.




துலாம்

துலாம் ராசியில் வீட்டில் கேது, மூன்றாம் வீட்டில் புதன் நான்காம் வீட்டில் சூரியன், ஐந்தாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் ராகு எட்டாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் வேலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. வேலைப்பளு அதிகரிக்கும். அறிவும் திறமையும் அதிகரிக்கும். வேலையில் புரமோசன், பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்துடன் சிறு பயணங்கள் செல்வீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். நிறைய சந்தோஷங்கள் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவீர்கள். உறவினர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டில் உள்ள சூரியன் இடப்பெயர்ச்சியாகி ஐந்தாம் வீட்டில் உள்ள சனி உடன் மாத பிற்பகுதியில் இணைகிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். எதிர்காலத்தைப் பற்றி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சளி தொந்தரவுகள் வரலாம். ஆறாம் விட்டில் குரு பகவானுடன் மாத பிற்பகுதியில் சுக்கிரன் இணையப்போகிறார். பணத்தை பத்திரப்படுத்துங்கள். யாரை நம்பியும் கையில் உள்ள பொருட்களை கொடுத்து விட்டு ஏமாந்து போக வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அற்புதங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. காரணம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் 12ஆம் வீட்டிர் கேது, ஏழாம் வீட்டில் செவ்வாய்,நான்காம் வீட்டில் சுக்கிரன் சனி, மூன்றாம் வீட்டில் சூரியன், 5ஆம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குழப்பமான மனநிலையில் யோசித்துக்கொண்டு இருப்பீர்கள். திருமண சுப காரியம் நடைபெறுவதில் தயக்கம் ஏற்படும். பொருள் வரவு அதிகரிக்கும். திருமணம் சுப காரியத்தடைகள் நீங்கும். ஐந்தில் குரு பலமான பார்வையைத் தருகிறது. சுப காரியங்களில் ஈடுபடலாம். குரு பார்வையால் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்வார். சுகமான மாதமாக அமைந்துள்ளது. பொருள் வரவு அதிகரிக்கும். திருமண குடும்ப வாழ்க்கையிலும் காதலும் அதிகரிக்கும். ஏழாம் வீட்டில் உள்ள செவ்வாய் பகவானால் குடும்பத்தில் கார சார விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாக கிடைப்பதால் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. கோபப்பட்டு பேசி சண்டை சச்சரவை ஏற்படுத்த வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நான்காம் வீட்டில் சூரியன் சனி உடன் இணையும் போது அதிர்ஷ்டகாலம் ஆரம்பமாகிறது. சுப ஸ்தானத்தில் சூரியன் இணைவதால் உங்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். அதிர்ஷ்டமான காலம் ஆரம்பமாகிறது. வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இந்த மாதத்தில் திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். களத்திர காரகன் சுக்கிரன் 4ஆம் வீட்டில் இருப்பதால் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறப்போகிறது. மாத பிற்பகுதியில் சுக்கிரன் உச்சமடைவதால் புத்திர பாக்கியம் கை கூடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர் வீட்டு சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். பிப்ரவரி மாதம் மன நிறைவு தரும் அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, பிப்ரவரி மாதம் உங்கள் ராசிக்குள் சுக்கிரன் செவ்வாய் பயணம் செய்கின்றனர். இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் பயணம் சூரியன், சனி, புதன் சஞ்சரிக்கின்றனர். மூன்றாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானமான 12வது வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதத்தில் உங்களுக்கு முகப்பொலிவு கூடும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். குரு சந்திர யோகம் கை கூடி வரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சாதகமாகவே உள்ளது. ராகு கேதுக்குள் கிரகங்கள் அடங்கியுள்ளன. சர்ப்ப தோஷம் கூடியுள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கை கூடி வரும். இலக்கை நோக்கி பயணம் செய்யப்போகிறீர்கள். ராசி நாதன் குரு நான்காம் வீட்டில் இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உயர்கல்வி யோகம் கிடைக்கும். சூரியன் மாத பிற்பகுதியில் சனி உடன் மூன்றாம் வீட்டில் இணைவதால் அதிர்ஷ்டம் கை வரப்போகிறது. வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பல விசயங்களை வெளிப்படுத்த வேண்டாம். தர்ம கர்மாதிபதி யோகம் வரப்போகிறது. பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் கை கூடி வரும். பெண்களின் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நோய்கள் விலகும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் உடல் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும் திடீர் ஜாக்பாட் மூலம் பண வரவு அதிகரிக்கப்போகிறது.


Share:

டிடியின் மறுமணம்! முதல்முறையாக ரகசியங்களை உடைத்த எதிர் நீச்சல் ரேணுகா..

 டிடியின் மறுமணம்! முதல்முறையாக ரகசியங்களை உடைத்த எதிர் நீச்சல் ரேணுகா.. 

இதுதான் நிஜ காரணமாம்!? டிடிக்கு தொழிலதிபரோடு திருமணம் என்ற தகவல்கள் வெளியாகி வருவதை தொடர்ந்து அவருடைய சகோதரியான பிரியதர்ஷினி முதல் முறையாக அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

: விஜய் டிவியின் செல்ல பிள்ளையாகவும் தொகுப்பாளராகவும் வலம் வரும் டிடி என்ற திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. டிடி தொழில் அதிபரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அதை குறித்து எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் டிடி யின் அக்கா முதல் முறையாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதுவரைக்கும் டிடி மறுமணத்தை பற்றி எந்த யோசனையும் இல்லாமல் தான் இருந்து வருகிறார் என்று கூறி இருக்கிறார். ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்பு டிடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி சின்னத்திரை 






ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்தான். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. ஆரம்பத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த டிடி தனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தந்து உதவும்படியும் அதில் தான் எப்படி கொண்டு செல்கிறேன் என்பதை பார்த்து பிறகு நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள் என்று விஜய் டிவியிடம் பேசியிருக்கிறார். முதல் நாள் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதை பார்த்து வியந்து போன விஜய் டிவி தொடர்ந்து அவருக்கே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. தற்போது அதிகமாக முக்கியமான நிகழ்ச்சி என்றாலே அதில் டிடி தான் தொகுத்து வழங்கி வருகிறார். உடல் நல பிரச்சனை டிடிக்கு சமீபத்தில் உடல்நல பிரச்சனை ஏற்பட்டு இருப்பது சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிந்தது. அதுவும் குறிப்பாக தன்னுடைய உடல் நலத்தை பற்றி பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கும் போதும் விரிவாக கூறியிருந்தார். தான் அதிகமாக நின்று கொண்டு தன்னால் பேச முடியாது என்பதை அவர் விளக்கி இருந்தார் ஆனாலும் விடாமுயற்சியோடு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னுடைய திறமையை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வரும் டிடி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை கொண்டு சென்றது அனைவரையும் பாராட்ட வைத்தது. திருமணம் குறித்த வதந்தி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் டிடியின் வாழ்க்கையில் திருமணத்தில் எதிர்பார்க்காத சோகம் நடைபெற்றது. அவர் சிறுவயது நண்பராக இருந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு அப்படியே மாறிவிட்டது. ஒரு சில மாதங்களுக்குள் இவருடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது அந்த திருமணத்திலிருந்து இவர் வெளியேறியும் விட்டார். ஆனாலும் தன்னுடைய வழக்கமான பணிகளில் கவனத்தை செலுத்தி வரும் டிடியை பற்றி சமூக வலைத்தளத்தில் அதிகமான வதந்திகள் பரம்பிக் கொண்டிருக்கிறது. விரைவில் டிடிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாகவும், அவருடைய வருங்கால கணவர் ஒரு தொழில் அதிபர் என்பது பற்றியும் சமூக வலைதளத்தில் அதிகமான கருத்துக்களும் புகைப்படங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. 



வதந்திகளுக்கு விளக்கம் இந்த நிலையில் டிடியில் சகோதரி

,எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி முதல்முறையாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசி இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அதில் டிடியை பற்றி பரவி வரும் செய்தியை பார்த்து நாங்களும் டிடியிடம் யார் அந்த தொழிலதிபர் என்று கேட்டோம். அதற்கு டிடி எனக்கே தெரியவில்லை என்று கூறிவிட்டாள், பொதுவாக இந்த மாதிரி வதந்திகள் வருவது அடிக்கடி நடப்பது தான். அதை நாங்கள் கண்டு கொள்வதே இல்லை. டிடி எப்போதும் அவளுடைய வாழ்க்கையில் வேலையில் தான் கவனமாக இருக்கிறார் .இப்போ வரைக்கும் டிடி இரண்டாவது திருமணத்தை பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை .நாங்கள் எதுவும் கேட்டாலும் அவள் சிரிப்பை மட்டும் தான் எப்போதும் போல எங்களுக்கு பதில் அளிப்பார். ஆனால் நாங்கள் அந்த வதந்திகளை கண்டு கொள்வதில்லை என்று கூறி இருக்கிறார். முற்றுப்புள்ளி  ஏற்கனவே டிடி, நடிகர் ஆர்கே சுரேஷ் மனைவியின் இரண்டாவது குழந்தையின் வளைகாப்பு ஃபங்ஷனுக்கு சென்றிருந்தார். அப்போது தனது சகோதரி ஆன பிரியதர்ஷினி யின் மகனோடு சென்றிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் கூட அந்த புகைப்படங்களையும் பலர் வெளியீட்டு இதுதான் டிடி திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரா? என்று வதந்திகளை பரப்பி வந்தனர். அதைக் குறித்தும் இப்படித்தான் தேவையில்லாத வதந்திகள் எல்லாம் பரவிக்கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் செவி சாய்த்தால் நம்முடைய நிம்மதி சந்தோஷம் எல்லாமே கெட்டுப் போய்விடும். அதனால் அடுத்தது என்ன நடக்க இருக்கிறதோ அது அப்படியே நடந்து போகட்டும் என்று கடந்து விட வேண்டியது தான் என்று பிரியதர்ஷினி அவருக்கே உரிய வழக்கமான சிரிப்போடு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

Share:

4th Std Kalvi TV video Link Collection

4th Std Kalvi TV video Link Collection

அனைவருக்கும் வணக்கம் நம்முடைய  வலைத்தளத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகவல்கள் நமது  வலைத்தளத்தில் தினமும் செய்திகளாக பதிவிடப்பட்டு வருகிறது. பல பயனுள்ள  தகவல்களை தெரிந்து கொள்ள www.padavelai.com என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்.நன்றி

CLICK HERE TO WATCH 4  STD KALVI TV - VIDEOS  -TAMIL

 CLICK HERE TO WATCH 4  STD KALVI TV - VIDEOS  -ENGLISH

 CLICK HERE TO WATCH 4  STD KALVI TV - VIDEOS  -MATHS 

 CLICK HERE TO WATCH 4 STD KALVI TV - VIDEOS  -SCIENCE

 CLICK HERE TO WATCH 4 STD KALVI TV - VIDEOS  - SOCIAL SCIENCE

Share:

3rd Std Kalvi TV video Link Collection

3rd Std Kalvi TV video Link Collection

அனைவருக்கும் வணக்கம் நம்முடைய  வலைத்தளத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகவல்கள் நமது  வலைத்தளத்தில் தினமும் செய்திகளாக பதிவிடப்பட்டு வருகிறது. பல பயனுள்ள  தகவல்களை தெரிந்து கொள்ள www.padavelai.com என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்.நன்றி


CLICK HERE TO WATCH 3RD STD KALVI TV - VIDEOS  -TAMIL

 CLICK HERE TO WATCH 3RD STD KALVI TV - VIDEOS  -ENGLISH

 CLICK HERE TO WATCH 3RD STD KALVI TV - VIDEOS  -MATHS 

 CLICK HERE TO WATCH 3RD STD KALVI TV - VIDEOS  -EVS

Share:

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories