TNPSC குரூப் 2 & 2A | 5000+ காலிப்பணியிடங்கள், இன்று முதல் Online Apply ! விண்ணப்பிக்க மார்ச் 23 கடைசி நாள்!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்த இருக்கும் குரூப் 2 மற்றும் 2A போட்டித் தேர்வுகள் மே மாதம் 21ம் தேதி முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 23 வரை விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு
தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, TNPSC தேர்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை இன்று (பிப்.18) நண்பகல் 12:30 மணியளவில் வெளியிட இருப்பதாக TNPSC தலைவர் பாலச்சந்திரன் முன்னதாக அறிவித்திருந்தார்.
அந்த வகையில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை தற்போது வெளியிட்டு வரும் தலைவர் பாலச்சந்திரன், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்தபடி, TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான தேதிகளை வெளியிட தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. அதன் படி, பிப்ரவரி 23 முதல் மார்ச் 23ம் தேதி வரை TNPSC குரூப் 2, 2A தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை செலுத்தலாம். தொடர்ந்து மே மாதம் 21ம் தேதியன்று குரூப் 2, 2A போட்டித் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும்.
இதில் குரூப் 2 தேர்வு 3 கட்டமாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில் முதன்மை எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்படும். மேலும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும். ஏற்கனவே அறிவித்தபடி, TNPSC குரூப் தேர்வுகளை 2 வகையாக எழுதலாம். அந்த வகையில், தமிழில் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். இதில் தமிழ் பிரிவில் 100 கேள்விகள், பொது அறிவு 75 மற்றும் 25 ஆப்டிடியூட் என 200 கேள்விகள் கேட்கப்படும்.
அதே போல ஆங்கில மொழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், அறிவியல் 75 மற்றும் 25 ஆப்டிடியூட் என 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் 90 மதிப்பெண்களுக்கு கீழே எடுத்தவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட மாட்டார்கள். இப்போது 116 துறைகளில் காலியாக இருக்கும் 5,830 இடங்களுக்கு TNPSC குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுகளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான தேதிகள் 23.2.2022 இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
TNPSC Group 2, 2A - Official Notification 2022 and Apply Link Released
Name of Organization: Tamil Nadu Public Service Commission (TNPSC)
Name of Exam: TNPSC Group 2
Exam Level: State
Exam Mode: Offline
Job Location: Tamil Nadu
Job Type: State Govt. Jobs
Application Mode: Online
TNPSC Group 2 Application Form Start Date: 23 February 2022
TNPSC Group 2 Application Form Last Date: 23 March 2022
Date of Examination: 21.05.2022
Official Notification: Coming Soon
Official Site: Click Here https://www.tnpsc.gov.in/
Apply Link: Click Here https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==
New PSTM Certificate Format PDF: Click Here
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.