TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் | தெரிஞ்சுக்கலாமா?

TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் | தெரிஞ்சுக்கலாமா?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group 2 & Group 2A தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் பல்வேறு பதவிகளுக்கென்று மொத்தமாக 5831 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்,வயது வரம்பு, ஊதியம், விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் ஆகிய அனைத்து தகவல்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்த TNPSC Group 2 & Group 2A தேர்வுகளுக்கு காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை விரைவாக ஆன்லைன் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பிப்ரவரி 23 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Prelims தேர்வு வரும் மே 21 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் :  Tamil Nadu Public Service Commission (TNPSC)

பணியின் பெயர் :TNPSC Group 2 & Group 2A

பணியிடங்கள் : 5831 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.03.2022

விண்ணப்பிக்கும் முறை  : Online

TNPSC Group 2 & 2A EXAM காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் TNPSC Group 2 & Group 2A தேர்வுகள் மூலம் பல்வேறு பதவிகளுக்கென்று மொத்தமாக 5831 காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

TNPSC Group 2 & 2A EXAM கல்வித் தகுதிகள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group 2 & Group 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma / BA / BSc / BCom / BOL / BBA / BLitt / BBM / BGL / MCom / MA போன்ற ஏதேனும் ஒரு Bachelor’s degree அல்லது Technical qualification அல்லது Master’s degree களில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேவையான அல்லது குறிப்பிட்டுள்ள டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

TNPSC Group 2 & 2A EXAM வயது விவரங்கள்:

  • TNPSC Group 2 & Group 2A தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள படி பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் மாறுபட்டுள்ள வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அவை,
  • Sub-Registrar Grade- II பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Probation Officer in the Prison Department பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Probation Officer in the Social Defence Department பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 26 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • இவை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • TNPSC Group 2 & Group 2A பதவிகளுக்கான வயது தளர்வுகள் குறித்த முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறியலாம்.

TNPSC Group 2 & 2A EXAM ஊதிய விவரங்கள்:

Industrial Co-operative Officer (Industries and Commerce Department) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-19 ன் படி குறைந்தபட்சம் ரூ.7,200/- முதல் அதிகபட்சம் ரூ.1,17,600/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.


Grade-II Sub Registrar, Assistant Inspector of Labour (Labour Department), Probation Officer (Prison Department), Junior Employment Officer (Employment and Training Department) (Non- Differently Abled) மற்றும் Probation Officer (Social Defence Department) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-18ன் படி குறைந்தபட்சம் ரூ.36,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,600/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.


Grade-II Municipal Commissioner, Special Assistant (Vigilance and Anti-corruption Department), Assistant Section Officer Cum Programmer in TNPSC, (Finance Department in Secretariat) – Assistant Section Officer, (Tamil Nadu Legislative Assembly Secretariat) – Assistant Section Officer, Assistant Section Officer in TNPSC மற்றும் (Law Department in Secretariat)- Assistant Section Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-16 ன் படி குறைந்தபட்சம் ரூ.36,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,15,700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.


Assistant Inspector in Local Fund Audit Department, Audit Inspector (Audit Wing of Hindu Religious & Charitable Endowments Administration Department), Supervisor of Industrial Co-operatives, (Industries and Commerce Department), (Handlooms & Textiles Department) -Handloom Inspector, (Department of Registrar of Co-operative Societies)- Senior Inspector of Co-operative Societies, (Milk Production and Dairy Development Department) – Senior Inspectors மற்றும் Supervisor / Junior Superintendent (Tamil Nadu Agricultural Marketing / Agricultural Business Department) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-11 ன் படி குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.


Audit Assistant (Accounts Branch of Highways & Rural Works Department) மற்றும் Executive Officer, Grade-II in Town Panchayats Department பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-08 ன் படி குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Revenue Assistant (Revenue Department) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-10 ன் படி குறைந்தபட்சம் ரூ.20,600/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNPSC Group 2 & 2A EXAM தேர்வு செய்யப்படும் முறை:

TNPSC Group 2 (Interview Posts): 

Preliminary exam, main written exam, மற்றும் Interview / Personality Test மூலம் பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Group 2A (Non-Interview Posts): 

Written Test மூலம் பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Group 2 & 2A EXAM தேர்வு கட்டணம்:

TNPSC Group தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து கீழ்கண்டவாறு தேர்வு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. Preliminary Examination விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ரூ.125/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
  2. For Main Written Examination விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ரூ.100/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

TNPSC Group 2 & 2A EXAM விண்ணப்ப கட்டணம்:

TNPSC Group தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து கீழ்கண்டவாறு விண்ணப்ப கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- வசூலிக்கப்படும்.

TNPSC Group 2 & 2A EXAM விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group 2 & Group 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...