தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் கோரிக்கை

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் கோரிக்கை..தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் முழுமையாக குறையாத நிலையில் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழபத்தில் பள்ளிகள் மூடல்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்தற்கு பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு. அரையாண்டு விடுமுறையும் அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கியதால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் தொற்றை கட்டுப்படுத்த அரசு நோய் தடுப்பு பணிகளால் தீவிரம் காட்ட தொடங்கியது.


அதன் விளைவாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் 1- 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் விரைவில் பாடங்களை விரைந்து நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் முழுமையாக குறையாத நிலையில் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


நடப்பு கல்வி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது அதனால் 1முதல் – 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது சந்தேகமே அதனால் நடப்பு கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தவும். அடுத்த கல்வியாண்டில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பெற்றோர்களை தொடர்ந்து பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 1 – 8 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post