TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 VAO தேர்வு குறித்த புதிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!

TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 VAO தேர்வு குறித்த புதிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்..



தமிழகத்தில் TNPSC குரூப்2 மற்றும் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தேர்வாணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அறிவிப்பு வெளியாகி 75 நாட்களுக்குள் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group4,2,2A:

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதற்கான போட்டித்தேர்வுகளையும் நடத்தி தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு போட்டித் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தாண்டு 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி, மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் TNPSC தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் நடப்பாண்டு முதல் அனைத்து வித அரசு போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ் மொழி அடங்கிய பாடத்திட்டம் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தமிழ் மொழித்தேர்வில் 40% மதிப்பெண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 40% பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யப்படும் எனவே தமிழ் மொழித்தேர்வு தகுதித்தேர்வாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.TNPSC நிரந்தர கணக்கு மூலமாக தான் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


நிரந்தர கணக்குடன் அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுகள் அறிவிப்பு குறித்து தேர்வர்கள் அதிகம் எதிர்பார்த்து வந்த நிலையில் குரூப் 2 மற்றும் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தேர்வாணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் தேர்வு நடத்தும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 9.30 முதல் 12.30 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...