TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஜாக்பாட் – குரூப் 2 & குரூப் 2 A இம்மாதம் அறிவிப்பு

TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஜாக்பாட் – குரூப் 2 & குரூப் 2 A இம்மாதம் அறிவிப்பு..

தமிழகத்தில் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் அடுத்த 75 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.



TNPSC G4,2A தேர்வுகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான அரசுத்துறைகளில் பணியாற்ற வேண்டும் என்றால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கு TNPSC சார்பில் குரூப் 1 முதல் குரூப் 4 வரை பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்க கூடிய கொரோனா பெருந்தொற்றால் அரசால் திட்டமிட்டபடி போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை.

அதனால் அரசு வேலைக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கானவர்கள் ஏமாற்றத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில், 2022ம் ஆண்டில் TNPSC குரூப் தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்ட அரசாங்கம் அதற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன் படி இந்த ஆண்டில் சுமார் 32 தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதனுடன் TNPSC போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், ‘தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும். இந்த அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். இந்த தேர்வுகள் அனைத்தும் இனி காலை 9.30 மணி முதல் 12.20 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்படும். இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 32 தேர்வுகள் மேற்கொள்ளப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...