தமிழகத்தில் Feb-19 (சனிக்கிழமை) பொது விடுமுறை – எந்தந்த பகுதிகளுக்கு தெரியுமா? முழு விபரம் இங்கே..

தமிழகத்தில் Feb-19 (சனிக்கிழமை) பொது விடுமுறை – எந்தந்த பகுதிகளுக்கு தெரியுமா? முழு விபரம் இங்கே..



தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த விடுமுறை பொருந்தும் இடங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருகிற 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அத்துடன் வருகிற 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.


மேலும் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 30ம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் உள்ள சூழலில் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் பொது கூட்டங்கள் நடைபெறும். அதனால் தேர்தல் நடத்துவதற்கான நடத்தை விதி முறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்கும் வகையில் பிப்ரவரி 19ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அத்துடன் தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் அதனை 5 கிலோ மீட்டர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருகிற பிப்ரவரி 17,18,19ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த விதிமுறையை மீறி செயல்படும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments