தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள்

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு வரும் 9ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் கட்ட திருப்புதல் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.



10th,12th திருப்புதல் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி முதல் வாரத்திலிருந்து மூடப்பட்டது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டன. இந்த வகையில் மாணவர்களின் நேரடி கல்வி முறை பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்வர் அவர்கள் அண்மையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

எனவே 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 9ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்வுக்கான கால அட்டவணை சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த வகையில் மாணவர்களும் முதல் திருப்புதல் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

1. திருப்புதல் தேர்வு குறித்த தகவலை மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவித்து தயார்படுத்த வேண்டும். மேலும் விடைத்தாளில் பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம் பெறக்கூடாது. விடைத்தாளில் தேர்வு எண், வகுப்பு, தேதி, பாடம் மட்டும் இடம் பெற வேண்டும்

2. பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களில், அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள நிரந்தர பதிவு எண்ணை, தேர்வு எண்ணாக குறிப்பிட வேண்டும். 10ம் வகுப்பு மாணவர்கள், தேர்வு எண்ணாக, ‘எமிஸ்’ எண்ணின் கடைசி ஐந்து இலக்க எண்களோடு, வரிசை எண்ணையும் சேர்த்து, எட்டு இலக்க எண்களாக எழுத வேண்டும்


3. தேர்வு அறை ஒன்றுக்கு 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். ஒவ்வொரு தேர்வு நாளில், காலை 8:00 மணிக்குள், தங்களின் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில், வினாத்தாள்களை பெற்று, அவற்றை முறையான பாதுகாப்புடன், பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

4. விடைத்தாள் கட்டுகளை பள்ளியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்பட்டது. மதிப்பெண் பட்டியல், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும்.

Post a Comment

0 Comments