TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வுக்கு தயாராவது எப்படி!

TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வுக்கு தயாராவது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி அடுத்த மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து குரூப் 4 தேர்வு பற்றி விரிவாக பார்க்கலாம்.

குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் 4ம் நிலை பணியிடத்திற்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது. இதில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது என்பதால் இப்போட்டி தேர்வு ஏராளமான போட்டியாளர்களை கொண்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 30 வரை உள்ளவராக இருக்க வேண்டும். அத்துடன் அரசு அறிவித்தப்படி குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

தற்போது குரூப் 4 தேர்வின் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதில் ஒரே ஒரு தேர்வு மட்டுமே உள்ளது. இதில் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்தும் 75 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்தும், 25 வினாக்கள் திறனறி தேர்வு பகுதியில் இருந்தும் என மொத்தமாக 200 வினாக்கள் கேட்கப்படுகிறது.

Tnpsc Group 4 தமிழ் மொழிப்பாடம்

இதில் 100 வினாக்கள் கொள்குறி வகையில் 10ம் வகுப்பு தரத்தின் அடிப்படையில் இருந்து கேட்கப்படுகிறது. தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தாளாக இதில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த பகுதி மதிப்பீடு செய்யப்படும். இத்தேர்வுக்கு தயாராக 6 முதல் 10 வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்கள் படித்தாலே போதுமானது.

பொது அறிவு பகுதி

இதில் 75 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்தும், 25 வினாக்கள் திறனறி வினாக்களாகவும் மொத்தமாக 100 வினாக்கள் கேட்கப்படுகிறது. இப்பகுதிக்கு 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை படித்தால் மட்டும் போதுமானது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...