தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஷாக் – திருப்புதல் தேர்வு கேள்வித்தாள் லீக்? தீவிர விசாரணை..
தமிழகத்தில் 10ஆம் வகுப்புக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு 9 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள திருப்புதல் தேர்விற்கான வினாத்தாள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
அதிகாரிகள் விசாரணை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக கடந்த ஒன்றரை வருடங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. மேலும் நோய் தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி , கொரோனா தடுப்பூசி ஆகியவை கடைபிடிக்கப்பட்டு அதன் மூலம் கொரோனா 2ம் அலை படிப்படியாக குறைந்து வந்தது. அதனால் பள்ளி கல்லூரிகள் கடந்த வருடம் நவம்பர் மாதம் திறக்கப்பட்டன. இருப்பினும் கொரோனா 3வது அலை தொடங்க ஆரம்பித்தது. இதனால் ஜனவரி 2வது வாரத்தில் மீண்டும் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
- 10,12 Revision Exam time Table 1st and second - Download here
- 10th First Revision Exam Question papers and answer keys - Download here
- 12,10 first Revision Exam Question paper with answer key- Download here
இந்த வகையில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் நேரடி கற்றல் முறை பாதிக்கப்படுவதாக தனியார் பள்ளி சங்கம் சார்பில் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் அண்மையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் நீட்டிப்பது மற்றும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் பிப் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கு முன்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட கால அட்டவணை வெளியானது.
இந்த நிலையில் நாளை 10 ஆம் வகுப்புக்கு அறிவியில் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும், 12 ஆம் வகுப்பிற்கு கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும் நடைபெற உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் பள்ளி ஒன்றில் 10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் செல்போனில் புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியாகி வருகிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளத்தில் வினாத்தாள்கள் பரவி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை பகிரும் கல்வி ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளிக் கல்வித்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.