தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பொதுத்தேர்வு பாடத்திட்டம் அதிரடி?

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பொதுத்தேர்வு பாடத்திட்டம் அதிரடி?

மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே பொதுத் தேர்வில் வினாக்கள் இடம்பெறும் நடத்தி முடிக்கப்படாத பாடங்களில் இருந்து பொதுத் தேர்வு வினாக்கள் கேட்கப்படமாட்டாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். 

பொதுத்தேர்வு நடைபெறவில்லை:

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 

அதனால் மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 

இரண்டு திருப்புதல் தேர்வுகள்:

நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டது. ஏற்கனவே கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் கட்ட திருப்புதல் தேர்வு மற்றும் இன்று ஏப்ரல் 5 வரை இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது . 

மேலும் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ள நிலையில்.

அதனை தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதியும், 10ம் வகுப்புக்கு மே 10ம் தேதியும் ,11ம்  வகுப்பிற்கு மே 16ம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தபடுத்தும் வகையில் தேர்வுக்கு இன்னும் 30க்கும் குறைவான நாட்களே உள்ளதால் மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகரித்துள்ளது.

நடத்தப்படாத படங்களில் இருந்து பொதுத் தேர்வு வினாக்கள் இடம் பெறுமா ?

எனவே மீதம் உள்ள பாடங்களிலிருந்து பொதுத்தேர்வு வினாக்கள் கேட்கப்படுமா! என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இது தொடர்பாக இன்று அளித்த பேட்டி ஒன்றில் செய்தியாளர் 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கிறது இந்த படங்களில் இருந்து பொதுத் தேர்வு வினாக்கள் இடம் பெறுமா ? என்ற கேள்வியை எழுப்பினார், இதற்கு பதிலளித்த நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுக்கு நடத்தி முடிக்காத பாடங்களில் இருந்து பொதுத் தேர்வு வினாக்கள் இடம் பெறுவது தவறு எனவே அவர்களுக்கு நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து வினாக்கள் இடம் பெறாது என்றும் தெரிவித்திருந்தார்.

2 Comments

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...