அட நம்ம விஜய் வீட்டில் எப்படி இருக்கிறார் பாருங்க.. இது உண்மையா??

அட நம்ம விஜய் வீட்டில் எப்படி இருக்கிறார் பாருங்க.. இது உண்மையா??



விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் அந்தப் படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அடுத்ததாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படம்தான் தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமாட இருக்கிறார். இந்தச் சூழலில் விஜய் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.




கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய்தான் இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவர். குறிப்பாக ரஜினியின் இடத்தை அவர் பிடிப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாக திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகத்தான் விஜய்க்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் சம்பளத்தை கொட்டி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.


ஏஸ்.ஏ.சி துணை: இப்படி விஜய்யின் கோட்டை பலமாக இப்போது இருந்தாலும் அதற்கான ஒவ்வொரு செங்கல்லையும் வைக்க ஆரம்பித்தவர் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, சிறந்த கதைகள் வைத்திருக்கும் இயக்குநர்களை விஜய் பக்கம் மடைமாற்றுவது என சந்திரசேகர் செய்த விஷயங்கள் ஏராளம். அவரது பக்கபலம் இருந்ததால்தான் எந்த வித சிக்கலும் இல்லாமல் சினிமாவில் விஜய்யால் நிலைக்க முடிந்தது என்று ஒருசிலர் கூறுவதுண்டு.



அசிங்கப்பட்ட விஜய்: நடிகராக உள்ளே நுழைந்து தற்போது அரசியல் ஆசையில் இருக்கும் விஜய்க்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட சோதனைகள் வந்தன. இவரது முதல் படமான நாளைய தீர்ப்பு வெளிவந்த பிறகு விஜய்யை உருவ கேலி செய்து ஒரு பத்திரிகை எழுதியது. இதுபோல் பல விமர்சனங்களையும், அசிங்கங்களையும் விஜய் சந்தித்திருக்கிறார். ஆனால் அவை எவற்றையுமே தடைக்கல்லாக பார்க்காமல் படிக்கல்லாக பார்த்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தார்.


தமிழக வெற்றிக் கழகம்: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். GOAT படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்குவார் என்றும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அநேகமாக ஜூன் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


ட்ரெண்டாகும் வீடியோ: விஜய்யின் வீடு நீலாங்கரையில் இருக்கிறது. மிகப்பெரிய கேட்டோடு அந்த வீடு இருக்கும் ரசிகர்கள் பலரும் அங்கு சென்று வருவது வழக்கம். ஆனால் விஜய் இதுவரை வீட்டில் இருந்து அவர்கள் பார்க்கவில்லை. இந்நிலையில் விஜய் வீடியோ ஒன்று சமூக வலைதளங்கலில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தனது வீட்டுக்குள் வைத்து தன்னுடைய செல்ல நாய் ஒன்றுக்கு உணவு கொடுக்கிறார் விஜய். அது பழைய வீடியோவாக இருந்தாலும் இப்போது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Post a Comment

0 Comments