நான் சீரியல்ல நடிச்சதே வீட்டிற்கு தெரியாது.. ஷாக் கொடுத்த நாயகி ஓபன் டாக்!

நான் சீரியல்ல நடிச்சதே வீட்டிற்கு தெரியாது.. ஷாக் கொடுத்த  நாயகி ஓபன் டாக்!விஜய் டிவியின் முன்னணி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை கோமதி பிரியா. இந்த சீரியலில் முத்து மற்றும் மீனா ஜோடி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. தான்தோன்றித்தனமாக நடந்துவந்த முத்துவை சிறப்பாக வழிநடத்தி அனைவரின் பாராட்டிற்கு உள்ளாக்கியுள்ளார் மீனா.


நடிகை கோமதி பிரியா, youtube வீடியோக்கள் மூலம் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஓவியா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் கோமதி பிரியாவிற்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.


சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வரும் சிறகடிக்க ஆசை தொடரின் முத்து மற்றும் மீனா கேரக்டர்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதில் மீனா கேரக்டர் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து வசீகரித்து வருகிறது. சீரியலில் எதிர்பாராத நிலையில் முத்துவை திருமணம் செய்யும் மீனா, தொடர்ந்து தன்னுடைய மாமியாரின் வெறுப்பிற்கு உள்ளாகி வருகிறார். முத்துவையும் தன்னுடைய மாமியார் வெறுத்து வரும் சூழலில் வேண்டாத மருமகளாக மீனா தொடர்ந்து காணப்படுகிறார்.முத்து -மீனா ஜோடி: தன்னுடைய மாமனார், மாமியார் மற்றும் வீட்டில் உள்ள அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து வீட்டு வேலைகள் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மீனா, தொடர்ந்து தன்னுடைய கணவரின் ஊக்குவிப்பால் பூக்கட்டும் பிசினசையும் மேற்கொண்டு வருகிறார். இதனால் தன்னுடைய மாமியாரின் வசைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார். மீனா கேரக்டரில் நடித்து வரும் கோமதி பிரியா, மதுரையை சேர்ந்தவர். யூடியூப் மூலம் ஏராளமான வீடியோக்களை இவர் வெளியிட்ட சூழலில் ஓவியா உள்ளிட்ட சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
கோமதி பிரியா வீடியோ:


இதையடுத்து தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் கோமதி பிரியா நடித்து வருகிறார். இந்நிலையில் கோமதி பிரியாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதில் தான் சீரியலில் நடித்தது குறித்து துவக்கத்தில் தன்னுடைய குடும்பத்தினருக்கு தெரியாது என்று கோமதி பிரியா தெரிவித்துள்ளார். துவக்கத்தில் அந்த சீரியலின் பிரமோவை பார்த்த தன்னுடைய குடும்பத்தினர், அந்த சீரியலின் நாயகி தன்னை போலவே இருப்பதாக தொடர்ந்து கூறியதை அடுத்து தான் அந்த சீரியலில் நடித்து வருவதாக தான் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஆச்சர்யப்பட்ட குடும்பத்தினர்:


இதை கேட்டு அனைவரும் நம்ப முடியாமல் தன்னை ஷாக்கிங்காக பார்த்ததாகவும் உனக்கு இதிலெல்லாம் ஆர்வம் கிடையாதே, நீ எப்படி என்று தன்னை கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது தன்னை சேர்ந்தவர்கள், தான் சீரியலில் நடிப்பது குறித்து தொடர்ந்து ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக வலம்வரும் கோமதி பிரியா, தொடர்ந்து யூடியூப் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...