புஷ்பா 2 படத்துடன் மோதும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புஷ்பா 2 படத்துடன் மோதும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!


நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழியிலும் கலக்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த ஆண்டு இவரின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, இதன்பிறகு ஜெயம்ரவியுடன் இணைந்து சைரன் படத்தில் நடித்தார். அந்த படத்தின் கதை மோசமாக இருந்ததால், படம் வந்த சுவடே தெரியாமல் தியேட்டரை விட்டு ஓடியது.


தற்போது கீர்த்தி சுரேஷ், தெறி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ. காளீஸ்வரன் இயக்க வருகிறார். இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் உலகம் முழுவதும் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது.


ரகு தாத்தா: கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள படம் ரகு தாத்தா. பெரும் வரவேற்பை பெற்ற 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் இப்படத்திற்கு கதை எழுதி உள்ளார். இதில், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.


வரவேற்பை பெற்ற டிரைலர்: இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியானது. அதில், பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் இந்தியில் சொல்லப்படும் வார்த்தையை புரிந்துகொண்டு பலரும் அதன்படி செயல்பட, கீர்த்தி சுரேஷ் மட்டும் தமிழ்ல சொல்லுங்க சார் என கேட்டிருந்தார். அதேபோல, இந்தி எக்ஸாம் எழுதுனாதான் எனக்கு புரமொஷன் கிடைக்குமா? அப்படினா எனக்கு புரமோஷனே வேணாம் என்ற வசனம் அந்த டிரைலரில் இடம் பெற்று இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.


ரிலீஸ் தேதி அறிவிப்பு: தற்போது நடிகை கீர்த்தி சுரேண் ரகு தாத்தா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். அதே நாளில் தான் அல்லு அர்ஜுன் நடிப்பில் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் புஸ்பா 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கு போட்டியாக ரகு தாத்தா திரைப்படம் களமிறங்க உள்ளது. இதில் எந்த படம் வசூலை அள்ளி பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Post a Comment

0 Comments