12th Economics Assignment Answer key - Unit 1 - 2021

12th Economics Assignment Answer key - Unit 1 - 2021

ஒப்படைப்பு

வகுப்பு 12 பாடம் : பொருளியல்

அலகு -1 பேரியல் பொருளாதாரம்

 பகுதி -அ

I. சரியான விடையை தெரிவு செய்க ?

1.சமத்துவம் பின்பற்றும் நாடு எது ?

அ ) இந்தியா   ஆ) சைனா

இ ) ரஸ்யா ஈ ) அமெரிக்கா

Answer: ஆ) சைனா இ ) ரஸ்யா

2. பொருளியல் படத்தின் கிளைகள் என்பவை

அ ) நுண்ணியல் மற்றும் பேரியல் ஆ) உற்பத்தி மற்றும் நுகர்வு

இ ) சொத்து மற்றும் நலம் ஈ ) தேவையும் மற்றும் அளிப்பும்

Answer: அ ) நுண்ணியல் மற்றும் பேரியல்

3. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஓட்ட மறலியை கண்டுபிடி

அ ) வருவாய் ஆ) சொத்துக்கள்

இ ) பண அளிப்பு ஈ ) வெளிநாட்டு செலாவணி இருப்பு

Answer: அ ) வருவாய்

4. திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் ஓட்ட மாதிரி எது ?

அ ) முத்திரை மாதிரி ஆ) நான்கு துறை மாதிரி

இ ) இத்துறை மாதிரி ஈ ) மேல் சொல்லப்பட்ட அனைத்தும்


Answer: ஆ) நான்கு துறை மாதிரி

5. இரு துறை மாதிரியில் உள்ள இரு

அ ) நிறுவனங்களும் அரசும்   ஆ) குடும்பங்களும் நிறுவனங்களும்

இ ) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் துறைகள் ஈ ) தனியார் மற்றும் பொதுத்துறை

Answer: ஆ) குடும்பங்களும் நிறுவனங்களும்

6. பேரியல் பொருளாதாரம் என்பது

அ ) தனிநபர் ஆ) நாடு

இ ) மொத்தங்கள் ஈ ) நிறுவனங்கள்

Answer: இ ) மொத்தங்கள்

7. பொதுவான விலையில் தொடர் உயர்வை குறிப்பிடுவது எது

அ ) தேசிய வருவாய் ஆ) வாணிபசூழல்

இ ) பணவீக்கம் ஈ ) மொத்த விளைக்குறியீடு

Answe: இ ) பணவீக்கம்

8. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது

அ ) வருவாய் கோட்பாடு ஆ) விலை கோட்பாடு

இ ) அங்காடி கோட்பாடு ஈ ) நுண்ணியல் கோட்பாடு

Answer: அ ) வருவாய் கோட்பாடு

9. எந்த பொருளாதார அமைப்பில் உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது

அ ) உலகமய அமைப்பு ஆ) முதலாளித்துவ அமைப்பு

இ ) சமத்துவ அமைப்பு ஈ ) கலப்பு பொருளாதார அமைப்பு

Answer: ஆ) முதலாளித்துவ அமைப்பு

10. பகிர்வில் சமத்துவத்தை கடைபிடிக்கின்ற பொருளாதார அமைப்பு எது ?

அ ) சமத்துவம் ஆ) முதலாளித்துவம்

இ ) கலப்பு பொருளாதாரம் ஈ ) உலகமயத்துவம்

Answer: அ ) சமத்துவம்  

பகுதி – ஆ

II.குறுவினா

1. பொருளாதார மாதிரியின் இலக்கணம் கூறுக ?

  • பேரியல் என்பது உண்மைகள் மற்றும் கோட்பாடுகளை ஒருங்கிணைப்பது பற்றியது ஆகும்

2. முதலாளித்துவம் என்றால் என்ன ?

  • முதலாளித்துவப் பொருளாதாரம் தடையில்லா மற்றும் அங்காடி பொருளாதாரம் என்றும் அழைக்கப்படுகிறது
  • அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும் சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்
  • முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி நடவைககைகள் தனியார் வசம் இருக்கும்
  • பொருள் மற்றும் பணிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாப நோக்கத்தை முதன்மையாக கொண்டிருப்பார்கள்

3. பேரியல் பொருளாதாரம் என்பதன் பொருள் யாது ?

  • ஒரு பொருளாதார அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை புரிந்துகொள்ளவும் அதற்க்கு தேவையான சரியான யுக்திகளை மாற்றம் மற்றும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது

4. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக ?

  • பணவீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பதாகும்

5. வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக

  • வளர்ந்த பொருளாதாரம்
  • வளராத பொருளாதாரம்
  • முன்னேறாத பொருளாதாரம்
  • வளரும் பொருளாதாரம்

பகுதி – இ

III. சிறுவினா

1.பொருளாதார அமைப்புகளின் வகைகளை குறிப்பிடுக

பொருளாதார அமைப்புகளின் பல்வேறு அடிப்படியில் வகைப்படுத்தலாம்

  • வளர்ச்சி நிலை : வளர்ந்த ,வளராத ,முன்னேறாத மற்றும் வளரும் பொருளாதர அமைப்புகள்
  • நடவடிக்கைகளின் முறை : முதலாளித்துவ ,சமத்துவ மற்றும் கலப்பு பொருளாதார அமைப்புகள்
  • நடவடிக்கைகள் அளவு : சிறிய மற்றும் பெரிய பொருளாதார அமைப்புகள்
  • செயல்படும் தன்மை : நிலையான மற்றும் இயங்கும் பொருளாதார அமைப்புகள்
  • செயற் பரப்பு தன்மை : மூடிய மற்றும் திறந்த வெளி பொருளாதார அமைப்புகள்

2.சமத்துவத்தின் குறைகளை கூறுக

  • சிகப்பு நாடா மற்றும் அதிகார வர்க்கம் :- அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகளே எடுப்பதிலும் ,அநேக அலுவலர்களின் அனுமதி பெற கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றோன்றுக்கு செல்ல எடுக்கும் கால அளவு அதிகமாகவுதலும் ஒரு சிகப்பு நாடா நிலைக்கு கொண்டு செல்லப்படும்
  • ஊக்கமில்லாமை : சமத்துவத்தின் மிகப்பெரிய குறை என்பது ,இந்த முறையில் நின்றமைக்கு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை எனவே உற்பத்தி திறனும் பாதிக்கப்படும்
  • தெரிவு செய்வதில் சுதந்திர குறைவு : பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வத்தில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது
  • அதிகார குவித்தல் : அரசே அணைத்து முடிவுகளையும் எடுக்கிறது .பொருளாதார தீர்மானங்களில் தனியார் எந்த முயர்ஸியும் எடுப்பது இல்லை

3.முதலாளித்துவத்தின் சிறப்பினை விளக்குக

  • 1.தனியார் சொத்துருரிமை மற்றும் பரம்பரை சட்டம் : -முதலாளித்துவத்தின் முக்கிய இயல்பு என்னவெனில் உழைப்பு மூலதனம்,இயந்திரம், சுரங்கள் போன்ற அணைத்து வளங்களும் தனிநபருக்கு சொந்தமாக இருக்கும்
  • 2.தேர்ந்தெருப்பதில் சுதந்திரம் : ஒவ்வொரு தனிநபருக்கு தங்களது வேலையை தேர்ந்தெடுப்பதிழும் ,உற்பத்தி செய்யும் பொருள்களை தேர்ந்தெடுப்பதிலும் மற்றும் வியாபார இடத்தை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பர்
  • 3.இலாப நோக்கம் :- முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் ,அணைத்து பொருளாதார நடவடிக்கைகளும் இலாபம் பெறுவதே உந்து விசையாக காணப்படும்
  • 4.போட்டியில் சுதந்திரம் அ ) பொருள்கள் சந்தை மற்றும் காரணிகள் சந்தை ஆகிய இரண்டிலும் முழு சுதந்திரம் உண்டு ஆ) அரசாங்கமோ வேறு எந்த அமைப்போ நிறுவனங்களில் வாங்குதல் மற்றும் விற்பதில் தலையிட முடியாது
  • 5. விலை இயங்கு முறை :- விலை இயங்கு முறையானது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இ தயமாகும்

4.இரு துறை சூழல் ஓட்ட மாதிரியினை விளக்குக

  • இல்லத்துறை : இல்லத்துறை தான் பொருள்கள் மற்றும் பணிகளை வாங்கும் ஒரே துறையாகும்,நிலம் ,உழைப்பு ,மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்தி காரணிகளை அளிக்கும் ஒரே துறையும் ஆகும்
  • இல்லத்துறையானது அதற்க்கு சொந்தமான உற்பத்தி காரணிகளை அளிப்பதன் மூலம் வருவாயை பெறுகிறது
  • நிறுவன துறை : நிறுவனதுறையானது பொருள் மற்றும் பணிகளை இல்லத்துரைக்கு விற்பனை செய்வதன் மூலம் வருவாயை ஈட்டுகிறது

5.பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை தருக

  • ஒரு பொருளாதார அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை புரிந்துகொள்ளவும் அதற்க்கு தேவையான சரியான யுக்திகளை மாற்றம் மற்றும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது
  • எதிர்கால பிரச்சனைகளை புரிந்துகொள்ளவும் ,தேவைகள் மற்றும் சவால்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைல்களை எடுப்பதற்கு பேரியல் பொருளாதாரம் பயன்படும்
  • நடப்பு பிரச்சனைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறியவும் உதவுகிறது
  • பொருளாதாரக் குறியீடுகளை பகுதியாவும் அவைகளை சாப்பிடவும் உதவுகிறது
  • பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும் சரியான கொள்கைகளை உருவாக்கவும் எதிர்காலத்தில் நடப்பவைகளை முன் கணிக்கவும் இது உதவுகிறது

பகுதி – ஈ

IV.பெரு வினா

1.முதலாளித்துவம்,சமத்துவம்,கலப்புதுவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக

2.பேரினப் பொருளியலில் பரப்பெல்லையை விவரி

  • தேசிய வருவாய் :- தேசிய வருவாயை கணக்கிடுதல் மற்றும் தெரிஸ்ய வருவாயில் துகளின் பங்கு போன்றவை பேரியல் பொருளாதார பகுத்தாய்வின் அடிப்படை அம்சங்களாகும்
  • பணவீக்கம் :- பண வீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகப்பிப்பதை குறிப்பதாகும்
  • வாணிப சுழற்சி : பொதுவாக எல்லா நாடுகளும் வாணிப ஏற்றத்தாழ்வு மற்றும் வாணிப சுழற்சியால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கின்றன, மொத்த பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வாணிபச் சுழற்சி மாற்றங்களை தெரிந்து சிக்கொள்ள முடிகிதரு
  • வறுமை மற்றும் வேலையின்மை : வளங்கள் நிறைந்த நாடுகளிலும் வறுமை மற்றும் வேலையினமி மிகப்பெரிய பிரச்னையாகி உள்ளது ,ஒரு ஒரு பொருளாதார முரண்பாடுகளில் ஒன்றாகும் ,இப்பிரச்சாக்கு தீர்வு காண வளங்களை ஒதுக்கீடு செய்யவும் ,சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது
  • பொருளாதர வளர்ச்சி : பேரியல் பகுத்தாய்வின் மூலம்தான் ஒரு பொருளாதார மற்றும் முன்னேற்றம் , அதை தீர்மானிக்கும் காரணிகள் போன்றவற்றை புரிந்துகொள்ள முடியும்
  • பொருளாதார கொள்கைகள் : பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கு பேரியல் பொருளாதாரம் உதவுகிறது

3.கலப்பு பொருளாதாரத்தின் நன்மை தீமைகளை விளக்குக

  • ஒருங்கிணைப்பு இல்லாமை :- கலப்புதுவதின் மிகப்பெரிய குறைபாடு பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஒருங்கிணைப்பு இல்லாததாகும்
  • திறமையின்மை : மந்தமான அதிகாரமுறை ,சிவப்பு நாடா முறை ,ஊக்கமின்மை ஆகியவற்றால் பொதுத்துறை நடவடிக்கைகளில் பெரும்பாலானவை திறனற்றவைகளாகவும் இருக்கின்றன
  • விரிவடையும் சமத்துவமின்மை :வளங்களின் உரிமை .பரம்பைச் சட்டங்கள் ,மக்களின் இலாப நோக்கம் ஆகியவை பணக்காரர் ஏழைகளுக்கு இடையே விரிவடையச் செய்கின்றன

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...