ஆசிரியர்களே இல்லாத அரசுப் பள்ளி - திடீர் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஆசிரியர்களே இல்லாத அரசுப் பள்ளி - திடீர் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் பேரூராட்சி 1வது வார்டு காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதனின் சொந்த ஊரான ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் ஒரு மாதம் முன்பும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 6 ந் தேதி நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கூண்டோடு பணியிட மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதால் கடந்த ஒரு மாதமாக ஆசிரியர்களே இல்லாமல் சில மாற்றுப் பணி ஆசிரியர்கள், சில தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகள் நடந்து வருகிறது.

இது குறித்து கடந்த 6 ந் தேதியே நக்கீரன் இணையத்தில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை கல்வித்துறை செயலாளர் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி இப்படி அனைத்து ஆசிரியர்களும் கூண்டோடு செல்ல என்ன காரணம் என்பதை அறிக்கை பெற்று அனுப்புமாறு கேட்டிருந்தார். சில நாட்களில் அந்த அறிக்கையும் அனுப்பி வைத்துள்ளனர்

அதன் பிறகு அடுத்தடுத்த ஒன்றியம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்ட அளவில் வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள் பணிமாறுதலில் வரும் போது இந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர். 

ஆனால் தற்போது வரை இந்தப் பள்ளிகளுக்கு எந்த ஆசிரியரும் வரவில்லை. இந்த செய்தி பற்றி அறிந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பல நிழ்ச்சிகளில் பங்கேற்றவர் கடைசியாக பேராவூரணியில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி வடக்கு  மற்றும் காசிம்புதுப்பேட்டை பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரிடம் சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார்

பேராவூரணி - அறந்தாங்கி சாலையில் உள்ள ஆயிங்குடி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு திடீரென தனியாகச் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் நேராக வகுப்பறைகளுக்குள் சென்று மாணவர்களை படிக்கச் சொல்லியும், எழுதச் சொல்லியும் பார்த்துவிட்டு கட்டங்களை ஆய்வு செய்த பிறகு அங்கிருந்த ஆசிரியர்களிடம் சில விபரங்களை கேட்டறிந்தார். 

அப்போது அங்கு பணியிட மாறுதல் பெற்று இன்னும் புதிய பள்ளிக்குச் செல்லாமல் மாற்றுப்பணியில் உள்ள ஒரு ஆசிரியை, மேலும் ஒரு மாற்றுப் பணி ஆசிரியர், இடைநிலை மற்றும் மழலையர் வகுப்புகளுக்கான தலா ஒரு ஆசிரியைகள், கணினி இயக்குநர் என 5 பேர் பணியில் இருந்தனர். அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டு அறந்தாங்கி புறப்பட்டார்.

மாலை நேரமானதால் காசிம்புதுப்பேட்டை செல்வதற்குள் பள்ளி விடப்பட்டுவிடும் அதனால் மற்றொரு நாளில் ஆய்வு செய்வோம். அறந்தாங்கி நகரில் உள்ள ஒரு பள்ளிக்குச் செல்லலாம் என்று கூற அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளனர். 

கூடவே கல்வித்துறை அதிகாரிகளும் சென்ற போது அங்கே பல வகுப்பறைகளிலும் பெஞ்ச், டெஸ்க் இல்லாமல் மாணவிகள் தரையில் அமர்ந்திருப்பதைப் பார்ந்து அமைச்சரின் முகம் மாறியது, அடுத்தடுத்து மேலும் சில வகுப்பறைகளும் அப்படியே காணப்பட்டது. மேலும் சில வகுப்பறைகளில் சாக்பீஸ், டஸ்டர் வைக்க பயன்படுத்தும் ஒரே டெஸ்க்கும் துருபிடித்து காணப்பட்டது

அதில் சாய்ந்தால் துரு உடைகளில் ஒட்டிக் கொள்ளுமோ என்று எச்சரிக்கையாகவே தள்ளியே நின்ற அமைச்சர் தலைக்கு மேலே மின்விசிறியே இல்லாத மின்விசிறி பொருத்தும் குழாய் மற்றும் கப் பெருமாள் கோயில் ஆசிர்வாதத்திற்கு பயன்படுத்தும் மணி போல தொங்கிக் கொண்டிருந்தது.

ஜன்னல் இரும்பு கதவுகளுக்கு எப்போதோ பெயிண்ட் அடித்து துருபிடித்து காணப்பட்டது. ஒரு பெரு நகரத்தில் இப்படி ஒரு பள்ளியா என்று அதிகாரிகளையும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தவர் எதையுமே சொல்லாமல் இருண்ட முகத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.

அமைச்சரின் திடீர் ஆய்வால் திடுக்கிட்ட பள்ளி நிரவாகமும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளியைப் பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் சென்றிருப்பது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. என்ன ஓலை வரப் போகிறது என்று. அமைச்சரின் திடீர் ஆய்வு பற்றி அறிந்த பெற்றோர்கள் அமைச்சரின் சரியான நடவடிக்கை இது. 

முன்பே தகவல் சொல்லி இருந்தால் பள்ளியை அலங்கரித்து வைத்திருப்பார்கள் ஆனால் சொல்லாமல் வந்ததால் உண்மை நிலையை காணமுடிந்தது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு அமைச்சர் திடீர் ஆய்வுகள் செய்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர்.

Share:

8th First Mid Term Question Paper 2024

8th First Mid Term Question Paper 2024

8th First mid term question paper 2024,8th Std 1st mid term question paper 2024,8th Standard 1st mid term question paper 2024,8th mid term question paper 2024,8th standard question paper with answer, 8th 1st mid term question paper 2024 ,8th standard first mid-term question paper, 8th standard first term question paper, 8th standard social science first term question paper, 8Th first mid term test in tamil

8th First Mid-Term Question Paper 2024

Tamil

8th Tamil - First Mid term Question Paper 2024 - Download Here

English

8th English - First Mid term Question Paper 2024 - Download Here

Maths

8th Maths - First Mid term Question Paper 2024 - Download Here

science

8th Science - First Mid term Question Paper 2024 - Download Here

Social science

8th Social science - First Mid term Question Paper 2024 - Download Here

6th First Mid Term Question Paper 2024

6th First Mid Term Question Paper 2024

6th Fist mid term question paper 2024,6th Std 1st mid term question paper 2024,6th Standard 1st mid term question paper 2024,6th mid term question paper 2024,6th standard question paper with answer, 6th 1st mid term question paper 2024 ,6th standard first mid-term question paper, 6th standard first term question paper, 6th standard social science first term question paper, 6Th first mid term test in tamil

6ஆம் வகுப்பு முதல் இடைபருவ தேர்வுக்கான வினாக்களின் -2024-2025,6Th First Mid Term Question Paper2024-2025

6th First Mid-Term Question Paper 2024

Tamil

6th Tamil - First Mid term Question Paper 2024 - Download Here

6th Tamil - First Mid term Question Paper 2024 - Download Here

6th Tamil - First Mid term Question Paper 2024 -Download Here

6th Tamil - First Mid term Question Paper 2024 - Download Here

6th Tamil - First Mid term Question Paper 2024 Download Here

6th Tamil - First Mid term Question Paper 2024 - Download Here

English

6th English - First Mid term Question Paper 2024 - Download Here

6th Maths - First Mid term Question Paper 2024 - Download Here

Science

6th Science - First Mid term Question Paper 2024 - Download Here

6th Social science - First Mid term Question Paper 2024 - Download Here

7th First Mid Term Question Paper 2024

7th First Mid Term Question Paper 2024

7th First mid term question paper 2024,7th Std 1st mid term question paper 2024,7th Standard 1st mid term question paper 2024,7th mid term question paper 2024,7th standard question paper with answer, 7th 1st mid term question paper 2024 ,7th standard first mid-term question paper, 7th standard first term question paper, 7th standard social science first term question paper, 7Th first mid term test in tamil 7ஆம் வகுப்பு முதல் இடைபருவ தேர்வுக்கான வினாக்களின் -2024-2025,7Th First Mid Term Question Paper2024-2025

7th First Mid-Term Question Paper 2024

Tamil

7th Tamil - First Mid term Question Paper 2024 - Download Here

7th English - First Mid term Question Paper 2024 - Download Here

7th Maths - First Mid term Question Paper 2024 - Download Here

7th Science - First Mid term Question Paper 2024 - Download Here

7th Social science - First Mid term Question Paper 2024 - Download Here

11th & 12th First Mid term Test Timetable 2024

11th & 12th First Mid term Test Timetable 2024

Time table 

Share:

கற்பித்தல் மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது!

கற்பித்தல் மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி, தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “நாங்கள் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினோம். எங்கள் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த லேப்டாப்கள் திருடப்பட்டன. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்களை ஓய்வு பெற அனுமதிக்கவி்ல்லை. எங்களை ஓய்வு பெற அனுமதித்து, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுக்களில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: “ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இத்திட்டங்களை செயல்படுத்துவதில் நீதிமன்றம் குறுக்கே வராது. அதே நேரத்தில் பெரும்பாலான பள்ளிகள் பாதுகாப்பான நிலையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.தலைமை ஆசிரியர்களுக்கு சில நிர்வாகப் பொறுப்புகள் இருந்தாலும், அவர்களின் முதன்மை கடமை மாணவர்களுக்கு கற்பிப்பது தான். மடிக்கணினி திருட்டு வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை சாதாரண மனிதர்களை போல கல்வித்துறை நடத்துவதை ஏற்க முடியாது. இது கண்டிக்கத்தக்கது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை கற்பிக்கும் பணி மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்த பிற பணிகளில் பயன்படுத்தக்கூடாது. மனுதாரர்களை ஓய்வு பெற அனுமதித்து, அவர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

Share:

15 ஆசிரியர்களுடன் லீவு போட்டு வெளியே போன எச்.எம்.. கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

15 ஆசிரியர்களுடன் லீவு போட்டு வெளியே போன எச்.எம்.. கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

கள்ளக்குறிச்சி: அரசு பள்ளியில் ஆய்வு செய்ய வந்தபோது 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளியில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளியில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; ''கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் 11.07.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட நேரடிப் பள்ளிப் பார்வையின் போது நாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

விசாரணை மேற்கொண்டதில், பட்டதாரி ஆசிரியர்கள் சி.பெரியசாமி மற்றும் திருபா பொன்முடி ஆகிய இருவரும் பணிமாறுதல் பெற்று புதிய பணியிடத்தில் சேருவதற்கு உடன் சென்றது தெரிய வருகிறது. மேலும், மாணவர்கள் வகுப்பறையில் இல்லாமல் வெளியில் திரிந்து ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டனர். பள்ளியின் மீதும் மாணவர்களின் மீதும் அக்கரை இல்லாமல் செயல்பட்டதற்கும், மேலும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் நாகலூர், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொ.வெங்கடேசன் என்பவர் தற்காலிகமாக பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

1) 11.07.2024 தேதி உயர் அலுவலருக்குத் தகவல் தெரிவிக்காமல் மாறுதல் பெற்ற ஆசிரியர்களைப் புதிய பணியிடத்தில் பணியேற்க செய்யும் பொருட்டு உடன் சென்றது.

2) 15 க்கும் மேற்பட்ட (50%) ஆசிரியர்களுக்கு விடுப்பு அளித்து பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணியேற்கும் பொருட்டு உடன் அழைத்து சென்று பள்ளி சுமூகமாக நடைபெறுவதற்கு குந்தகம் விளைவித்தது.

3) தாங்கள் பொறுப்பில்லாமல் செயல்பட்டதால் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு கற்றல் கற்பித்தல் பணி நடைபெறாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

4) அனைத்து மாணவர்களும் பள்ளியில் உள்ளபோது மாணவர்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் செயல்பட்டது.

5) அரசு பணியின் மீது பற்று இல்லாமல் செயல்பட்டது.

6). தன் பொறுப்புகளையும் கடமைகளையும் மறந்து பள்ளிப்பணிக்கு குந்தகம் விளைவித்தது.

மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் நாகலூர், அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொ.வெங்கடேசன் என்பவர் 11.07.2024 பிற்பகல் முதல் தற்காலிகமாக பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

மேலும், புதிய பணியிடத்தை சென்னை-06, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது'' இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Share:

நீட் மறுதேர்வு இல்லை: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!

நீட் மறுதேர்வு இல்லை: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!

நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வியாழக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவான விவகாரத்தில், தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் மனு அளித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிபிஐ மற்றும் நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேசிய தேர்வு முகமை கடந்த வாரம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், இன்று காலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த வழக்கை எதிர்நோக்கி காத்துள்ளதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், சிபிஐ தரப்பிலும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்த வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் நிரூபித்தால் மட்டுமே தேர்வை ரத்து செய்ய முடியும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வாதத்தை முன்வைத்தர் மனுதாரர தரப்பு வழக்கறிஞர், நீட் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வலியுறுத்தவில்லை, நீட் தேர்வில் தேர்வான 1.08 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு முறைகேடு குறித்து சென்னை ஐஐடி சமர்பித்த அறிக்கை ஒருதலைபட்சமானது என்று மனுதாரரின் வாதத்துக்கு மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support