Daily TN Study Materials & Question Papers,Educational News

TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்!

TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்!



முதலில் TNSED App - individual login செய்யவும்


2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.

3) Apply leave என்பதை கிளிக் செய்யவும்

4) திரையில் "Enter leave balance" என்ற option வரும்

5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும்

6) பிறகு "compensatory leave" என்ற option வரும்.அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff),எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும்

7)  EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.

8) மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

  1. 2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்
  2. 5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்
  3. 10 முதல் 15  வருடங்களுக்கு 270 நாட்கள்
  4. 15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்
  5. 20 வருடங்களுக்கு மேல்  540 நாட்கள்

ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.
உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 9 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதி 180 நாட்கள் அவர் எடுத்த மருத்துவ விடுப்பு 30 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.

180-30=150 என்று பதிவு செய்ய வேண்டும்.ஆசிரியரின் பணிகாலத்திற்கேற்ப இது மாறுபடும்.

9) அடுத்து RL மதச்சார்பு விடுப்பு எப்படி பதிவு செய்வது?மொத்தம்3 மதச்சார்பு விடுப்புகள் நீங்கள்  எடுத்த விடுப்பு நாட்கள் 2 எனில் 3-2=1 என்று குறித்துக்கொள்ளவும்.

10) இறுதியாக "submit" கொடுத்தால் நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும்,பிறகு நாம் விடுமுறைக்கு பதிவு செய்து கொள்ளலாம்!

குறிப்பு :


தற்போதுவரை இந்த வசதி அப்டேட் செய்யப்படவில்லை. அப்டேட் ஆனவுடன் பதிவு செய்யவும்.

Share:

அரசுப் பள்ளிகளுக்கான NSS நிதியை வங்கியில் செலுத்த திட்டம்!

அரசுப் பள்ளிகளுக்கான NSS நிதியை வங்கியில் செலுத்த திட்டம்!



அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டத்துக்கு (என்எஸ்எஸ்) மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டு முதல்என்எஸ்எஸ் நிதியை பள்ளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதற்கு மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. இதற் காக அரசுப் பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதன்படி, என்எஸ்எஸ் திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு ஜன.20-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.


மேலும், இதுசார்ந்து மறு உத்தரவு வரும் வரை என்எஸ்எஸ் வங்கிக் கணக்குகளை எந்தக்காரணம் கொண்டும் முடிக்கக் கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளுக்கு என்எஸ்எஸ் நிதி தாமதமின்றி துரிதமாக சென்று சேரவும், தவறுகள் நடைபெறுவதை தவிர்க்கவும் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

12th Internal Mark Code List 2022-2023 - All subjects

12th Internal Mark Code List 2022-2023 - All subjects

12th Internal Mark Code List 2022-2023 - All subjects

இந்த 12th Internal Mark Code List 2022-2023 - All subjects டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

11th Internal Mark Code List 2022-2023 - All subjects

11th Internal Mark Code List 2022-2023 - All subjects

11th Internal Mark Code List 2022-2023 - All subjects

இந்த 11th Internal Mark Code List 2022-2023 - All subjects டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ்!

பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ்!


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக திருவாரூரில் பசுமை பள்ளித் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை. பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் தற்போது பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா காலத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய, மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் படிப்படியாக மற்ற பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பசுமை பள்ளி திட்டம் முதற்கட்டமாக 500 பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளது. மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மட்டுமின்றி நடுநிலைப் பள்ளிகளிலும் பசுமை பள்ளி திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

Share:

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது: மத்திய அரசு!

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது: மத்திய அரசு!

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்களை இனி இயக்க முடியாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

மேற்கண்ட அலுவலகங்களில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும், மேலும், அவற்றிற்குரிய பதிவுகளும் புதுப்பிக்கப்படாது என மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


இந்த புதிய விதி 2023 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

Share:

12th first Revision Question Paper 2023 - Answer key

12th first Revision Question Paper 2023 - Answer key


12th 1st Revision Question Paper 2023 - Answer key

Tamil

12th Tamil first Revision important Question 2023  - Download Here

12th Tamil first Revision original Question paper 2023  - Download Here ( Tenkasi)

12th Tamil first Revision Question paper 2023  - Download Here ( Private Question)

12th Tamil First Revision Original Question with Answer 2023 - Dindigul District - Download Here

English 

12th English First revision 2023 - Original Question paper - Tenkasi PDF Download here

Physics 

12th Physics First revision 2023 - Original Question paper - (Private Question )  English Medium PDF Download here

12th Physics First revision 2023 - Original Question paper - (Private Question ) Tamil Medium PDF Download here

  • 12th Biology One Mark - Free Online Test - Click Here

Chemistry 

12th Chemistry First revision 2023 - Original Question paper - (Private Question )  English Medium PDF Download here

12th Chemistry First revision 2023 - Original Question paper - (Private Question ) Tamil Medium PDF Download here

Biology 

12th Biology First revision 2023 - Original Question paper - (Private Question )  English Medium PDF Download here

12th Biology First revision 2023 - Original Question paper - (Private Question ) Tamil Medium PDF Download here

Maths 

12th Maths First revision 2023 - Original Question paper - (Tenkasi Question )  English Medium PDF Download here

12th Maths First revision 2023 - Original Question paper - (Private Question ) Tamil Medium PDF Download here

Share:

6th to 12th இலக்கண குறிப்பு அறிதல்

6th to 12th இலக்கண குறிப்பு அறிதல்

பண்புத்தொகை

1. கடுந்திறல் – பண்புத்தொகை

2. நல்லாறு – பண்புத்தொகை

3. கூர்ம்படை – பண்புத்தொகை

4. முதுமரம் – பண்புத்தொகை

5. தண்பதம் – பண்புத்தொகை

6. நல்லகம் – பண்புத்தொகை

7. அருந்துயர் – பண்புத்தொகை

8. நெடுந்தேர் – பண்புத்தொகை

9. பெருங்களிறு – பண்புத்தொகை

10. நன்மான் – பண்புத்தொகை

11. பசுங்கால – பண்புத்தொகை

12. கருங்காக்கை – பண்புத்தொகை

13. பச்சூன் – பண்புத்தொகை

14. பைந்நிணம் – பண்புத்தொகை

15. வெஞ்சினம் – பண்புத்தொகை

16.எண்பொருள் – பண்புத்தொகை

17. நுண்பொருள் – பண்புத்தொகை

18. பெருந்தேர் – பண்புத்தொகை

19. நல்லுரை – பண்புத்தொகை

20. நெடுந்தகை – பண்புத்தொகை

21. தண்குடை – பண்புத்தொகை

22. செங்கோல் – பண்புத்தொகை

23. செங்கதிரோன் – பண்புத்தொகை

24. திண்டிறல் – பண்புத்தொகை

25. தெண்டிரை – பண்புத்தொகை

26. பெருந்தவம் – பண்புத்தொகை

27. ஆருயிர் – பண்புத்தொகை

28. நன்னூல் – பண்புத்தொகை

29. கருமுகில் – பண்புத்தொகை

30. வெஞ்சுடர் – பண்புத்தொகை

பண்புத்தொகை

31. பேரிடி – பண்புத்தொகை

32. பேரிஞ்சி – பண்புத்தொகை

33. முதுமுரசம் – பண்புத்தொகை

34. சேவடி – பண்புத்தொகை

35. நற்றாய் – பண்புத்தொகை

36. பெருந்தெய்வம் – பண்புத்தொகை

37. பெருந்தடந்தோள் – பண்புத்தொகை

38. முச்சங்கம் – பண்புத்தொகை

39. வெந்தயிர் – பண்புத்தொகை

40. செந்நெல் – பண்புத்தொகை

41. செழும்பொன் – பண்புத்தொகை

42. பெரும்பூதம் – பண்புத்தொகை

43. கருஞ்சிகரம் – பண்புத்தொகை

44. செந்தமிழ் – பண்புத்தொகை

45. வெருங்கை – பண்புத்தொகை

46. கருங்கல் – பண்புத்தொகை

47. தீநெறி – பண்புத்தொகை

48. கடும்பகை – பண்புத்தொகை

49. முக்குடை – பண்புத்தொகை

வினைத்தொகை

50. திருந்துமொழி – வினைத்தொகை

51. பொருந்துமொழி – வினைத்தொகை

52. திரைகவுள் – வினைத்தொகை

53. உயர்சினை – வினைத்தொகை

54. ஒழுகுநீர் – வினைத்தொகை

55. புனைகலம் – வினைத்தொகை

56. உருள்தேர் – வினைத்தொகை

57. ஈர்வளை – வினைத்தொகை

58. படுகாலை – வினைத்தொகை

59. துஞ்சு மார்பம் – வினைத்தொகை

60. நிறைமதி – வினைத்தொகை

61. திருந்தடி – வினைத்தொகை

62. மொய்கழல் – வினைத்தொகை

63. அலைகடல் – வினைத்தொகை

64. வீங்குநீர் – வினைத்தொகை

65. களிநடம் – வினைத்தொகை

66. விரிநகர் – வினைத்தொகை

67. அகல்முகில் – வினைத்தொகை

வினைத்தொகை

68. படர் முகில் – வினைத்தொகை

69. கிளர்திறம் – வினைத்தொகை

70. பொழிகரி – வினைத்தொகை

71. பொழிமறை – வினைத்தொகை

72. செய்குன்று – வினைத்தொகை

73. ஆடரங்கு – வினைத்தொகை

74. தாழ்பிறப்பு – வினைத்தொகை

75. உறை வேங்கடம் – வினைத்தொகை

76. துஞ்சு முகில் – வினைத்தொகை

77. வளர் கூடல் – வினைத்தொகை

78. இரைதேர் குயில் – வினைத்தொகை

79. சுழி வெள்ளம் – வினைத்தொகை

80. சுடரொளி – வினைத்தொகை

81. உயர்எண்ணம் – வினைத்தொகை

82. உயர் மரம் – வினைத்தொகை

83. முதிர்மரம் – வினைத்தொகை

84. தொடுவானம் – வினைத்தொகை

85. பொங்கு சாமரை – வினைத்தொகை

Share:

பள்ளிகளுக்கு (18.01.2023) புதன்கிழமையும் விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!

பள்ளிகளுக்கு (18.01.2023) புதன்கிழமையும் விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சனிக்கிழமை தொடங்கி (ஜனவரி 15) செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சனிக்கிழமை போகிப் பண்டிகையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பெரும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கலும், நாளை (ஜனவரி 17) காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.


பொங்கல் விடுமுறை முடிந்து புதன்கிழமை ( ஜனவரி 18) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போகிப் பண்டிகையும், பெரும் பொங்கலும் இந்த முறை வார இறுதி விடுமுறை நாட்களில் வந்துவிட்டதால் மாட்டு பொங்கல், காணும் பொங்கலுடன் சேர்த்து வார நாட்களில் இரண்டு தினங்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.


இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு புதன்கிழமையும் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இகுந்தன. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணித்தவர்கள் மீண்டும் அவர்கள் வசிக்கும் நகரங்களுக்கு திரும்ப வசதியாக இந்த விடுமுறையை அளிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறையா என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது , " புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை" என தெரிவி்த்துள்ளார்.

அமைச்சரின் இந்த விளக்கத்தை வைத்து பார்க்கும்போது, நாளை செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் விடுமுமுறை முடிந்து புதன்கிழமை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிகிறது

Share:

10th Tamil Public exam Important Questions 2022-2023

10th Tamil Public exam Important Questions 2022-2023

10th Tamil Public exam Important Questions 2022-2023

இந்த 10th Tamil Public exam Important Questions 2022-2023 டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

Definition List

header ads

Unordered List

Support