Daily TN Study Materials & Question Papers,Educational News

UG-NEET : இளநிலை நீட் தேர்வு பாடத்திட்டங்கள் வெளியீடு...!

UG-NEET : இளநிலை நீட் தேர்வு பாடத்திட்டங்கள் வெளியீடு...!


இளநிலை நீட் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்களைத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெறுகிறது. உயிரியல் பாடத்திலிருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.

இந்நிலையில், அதற்கான பாடத் திட்டங்கள் https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வுக் கூட்டம் - CEO Proceedings...!

பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வுக் கூட்டம் - CEO Proceedings...!



பள்ளிக் கல்வி - தருமபுரி மாவட்டம் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வுக் கூட்டம் நடைபெறுதல் - தகவல் தெரிவித்தல்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ( இணைப்பில் காணும் ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2023 - 2024 ஆம் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வுக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக கூட்டரங்கில் கீழ்க்கண்ட வாறு நடைபெறவுள்ளது.

BT TEACHER MEETING Reg - CEO Proceedings - Download here

Share:

குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகள்: இன்று அறிக்கை தாக்கல் செய்யTNPSC-க்கு உத்தரவு....!

குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகள்: இன்று அறிக்கை தாக்கல் செய்ய TNPSC-க்கு உத்தரவு....!

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகளை வெளியிடுவது தொடா்பான அறிக்கையை புதன்கிழமை (அக். 11) தோ்வாணையச் செயலா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கண்மணி , கீதா ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 2022, மாா்ச் 30-இல் குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, காலியாக உள்ள 7,301 இடங்களுக்கு ஜூலை 24-இல் எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத சுமாா் 22 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் போ் தோ்வெழுதினா்.

இந்த நிலையில், காலிப் பணியிட எண்ணிக்கை 10,117 ஆக உயா்த்தப்பட்டது. இந்தத் தோ்வு முடிவுகள் கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்க்கும் பணிகளும் நடைபெற்றன. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியலில், எங்களது பெயா்கள் இல்லை. இந்தத் தோ்வில் நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், விடைக் குறிப்புகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே, இந்தத் தோ்வுக்கான விடைக் குறிப்புகளை வழங்க வேண்டும். அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுக்கான இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டனவா? இல்லையெனில், உடனடியாக விடைக் குறிப்புகளை வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதை, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலா் அறிக்கையாக புதன்கிழமை (அக். 11) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

Share:

பள்ளி திறந்த முதல் நாளிலே ஆசிரியர்களை வச்சிசெஞ்ச கல்வித்துறை!


கல்வித்துறையில் 'எமிஸ்' பதிவேற்றங்கள் குறித்த அவசர உத்தரவுகளால் காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆசிரியர்கள் மன உளைச்சலில் தவித்தனர். விருது ஆசையில் இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் சி.இ.ஓ.,க்கள் கடுமை காட்டுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.


விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளில் காலாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், வழங்கப்பட்ட இலவச நோட்டு புத்தகங்கள், வருகை பதிவு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் பதிவு உட்பட பிற வழக்கமான எமிஸ் பதிவுகளை மதியம் 1:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டது.



இப்பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகள் குறித்த விவரங்களை 'எமிஸ் டீம்' கல்வித்துறை வாட்ஸ்ஆப் தளத்தில் வெளியிட்டது. இதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.


இதனால் முதல் நாளே கற்பித்தல் பணியை அப்படியே ஒதுக்கித் தள்ளிவைத்த ஆசிரியர்கள், அதிகாரிகள் கேட்கும் தகவல்களை பதிவேற்றம் செய்வதில் முனைப்பு காட்டினர்.


ஆசிரியர்கள் கூறியதாவது: கற்பித்தல் பணியை பாதிக்கும் 'எமிஸ்' பதிவேற்றம் எண்ணிக்கை குறைக்கப்படும் என அமைச்சர் மகேஷ் உறுதியளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பள்ளி திறந்த முதல் நாளிலே 'எமிஸ்' பதிவேற்றம் தொல்லை துவங்கி விட்டது.


எமிஸில் பதிவேற்றிய பின், குறிப்பாக மதிப்பெண் விவரப் பட்டியல் விபரங்களை டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களுக்கும் கூடுதலாக அனுப்ப வேண்டியுள்ளது.


அமைச்சர், செயலாளர் தலைமையில் நடக்கும் மண்டல ஆய்வுக் கூட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்ட முதல் மூன்று மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் பரிசு, விருது வழங்கப்படுகிறது. இந்த விருது தேர்வுக்கு 'எமிஸ்' பதிவேற்றம் தான் பிரதானமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.



விருதுக்காக சி.இ.ஓ.,க்கள் ஆசிரியர்களை விரட்டுகின்றனர். ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யும்போது 'எமிஸ்' தளமே முடங்கி விடுகிறது. அதோடு மல்லுக்கட்டுவதில் தினம் மனஉளைச்சலால் தவிக்கிறோம். மாணவர்களுக்கு பாடமும் நடத்த முடிவதில்லை. இப்பிரச்னைக்கு எப்போது தான் 'விடியல்' கிடைக்குமோ என்றனர்.

Share:

16.10.23 முதல் Teacher, Student Attendance தவிர வேறு எந்த ஆன்லைன், app பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் - டிட்டோஜாக் சார்பில் தீர்மானம்?


வருகிற 16.10.23 முதல் Teacher, student attendance தவிர வேறு எந்த ஆன்லைன், app பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் என டிட்டோஜாக் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

எண்ணும் , எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிடவேண்டும்

 ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு , மாணவர்களின் கல்வித்தரத்தினைப் பாதிக்கும் எண்ணும் , எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும். எண்ணும் , எழுத்தும் திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதைப் பெற்றோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். செல்போன் மூலம் தேர்வு நடத்துவதிலும் , செல்போன் மூலம் மாணவர் வளரறி மதிப்பீட்டுப் பணிகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றம் செய்வதிலும் , கிராமப்புறங்களில் NET WORK இல்லாத நிலையில் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருப்பதோடு , ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை உருவாக்கி கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ONLINE பதிவேற்றப்பணிகளில் இருந்தும் , EMIS , TNSED APP மூலம் நடைபெறும் பதிவேற்றப் பணிகளில் இருந்தும் 16.10.2023 முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்வது என டிட்டோஜேக் பேரமைப்பு ஒருமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.

 மாணவர் வருகை , ஆசிரியர் வருகைப் பதிவேற்றம் தவிர பிற எவ்வித விபரங்களையும் செல்போன் மூலம் பதிவேற்றும் பணிகளை 16.10.2023 முதல் ஆசிரியர் மேற்கொள்வதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்கிறார்கள் என்ற விபரத்தினை , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களுக்கும் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வி இயக்குநர் , மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் , மதிப்புமிகு . கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இயக்குநர் ஆகியோருக்கும் டிட்டேஜேக் பேரமைப்பின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

 Letter - Download here

Share:

நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பற்றிய கட்டுரை.!

குறிப்பு சட்டகம்:

  • முன்னுரை
  • பிறப்பு மற்றும் வாழ்க்கை முறையும்
  • இந்திய குடியரசு தலைவர் ஆன கதை
  • இவரது சாதனைகள்
  • முடிவுரை

முன்னுரை:

நான் விரும்பும் தலைவர்களில் அப்துல் கலாம் அவர்களுக்கு எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. ஏனெனில் இவர் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து உலகமெங்கும் இந்தியாவின் பெருமையை பேச செய்த அணுவிஞ்ஞானி ஆவார்.

பின்னாளில் இவர் இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்தவர். வறுமையான பின்புலத்தில் இருந்து தனது தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்றவற்றால் சாதித்து காட்டிய அப்துல்கலாம் அவர்களுடைய வரலாறு பலபேருக்கு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது.

பிறப்பு மற்றும் வாழ்க்கை முறையும்:

அப்துல் கலாம் அவர்கள் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி  ஜைனுலாப்தீன்கும் ஆயிஷாமாவிற்கும் மகனாக இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால பள்ளி படிப்பை இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் பயின்றார்.
இவரது குடும்பம் எளிமையான குடும்பம் என்பதால் அதன் வருமானத்தை சமாளிக்கும் வகையில் சிறு வயதிலேயே பகுதி நேரங்களில் செய்தி தாள்களை விநியோகிக்கும் வேலை பார்த்தார்.
இவருக்கு கல்வி கற்பித்த சிவசுப்ரமணியம் என்ற ஆசிரியரின் உதவியோடு இவர் மேல்நிலை கல்வியினை தொடர்ந்தார். 1955 இல் சென்னை எம்.ஜ.ரி கல்லூரியில் சேர்ந்து விண்வெளி பொறியியல் படிப்பு படித்தார்.

இவருக்கு விமானியாக வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது அதற்காக நடத்தப்பட்ட தேர்வில் இவர் 9 ஆவது இடத்தையும் பிடித்தார். ஆனாலும் இவருக்கு விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
1960 இல் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வானூர்தி அபிவிருத்தி அமைப்பில் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கினார். பின்னாளில் இஸ்ரோவில் இணைந்து பணியாற்ற துவங்கினார்.

குடியரசு தலைவரான கதை:

இவர் தொடர்ச்சியாக விண்வெளியில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஏவிய செயற்கை கோளான Slv 3-யினை ஏவுவதில் முக்கிய பங்காற்றினார்.
இதனை பாராட்டும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம பூசன்” 1981 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவ்வாறு இந்தியாவை தனது பணிகளால் பெருமையடைய செய்தார்.
அதை தொடர்ந்து 1963 தொடக்கம் முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாக பணியாற்றினார். பின்பு 1999 இல் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் பங்களித்தார்.

பின்னர் “அக்னி பிரித்வி ஆகாஷ்” எனப்படும் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். இவ்வாறு இவரது செய்த சாதனைகளையும், சேவையையும் கண்டு பலரும் வியந்தனர்.
பின்னர் இவர் 2002 ஆம் ஆண்டில் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவரானார். இவர் மக்களின் ஜனாதிபதி என அன்போடு அழைக்கப்பட்டார்.

இவரது சாதனைகள்:

இவர் இந்தியாவிற்கென தனியாக செயற்கை கோள்களை விண்ணில் ஏவிய பெருமைக்குரியவர் மற்றும் கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகளை உருவாக்கினார்.
இவர் மாணவர்களுக்கு கற்பிப்பதை விரும்பினார் இதனால் சென்னை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வருகை விரிவுரையாளராக பணியாற்றினார்.
இவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்று இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கனவை மக்கள் மனதில் பதிய வைத்தார். நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி உள்ளார்.
அறிவார்ந்த இளைஞர்கள் தமது அறிவு, நேரம், ஆற்றலை பயன்படுத்தி 2020-க்குள் இந்தியாவை அனைத்து துறையிலும் முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என இவர் விரும்பினார்.
இவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார் இவர் “அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள்” போன்ற நூல்களையும் எழுதினார்.

முடிவுரை:

இந்தியா வல்லரசாக வேண்டும் என்றும் “கஷ்டம் வரும் போது கண்களை மூடாதே அது உனை கொன்று விடும் கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடுவாய்” போன்ற நல்ல கருத்துக்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனதில் விதைத்த A.P.J அப்துல் கலாம் அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் சொற்பொழிவு ஆற்றி கொண்டிருக்கும் பொழுதே இறந்துவிட்டார்.
இவர் பல்வேறான விருதுகளை பெற்றிருந்தாலும் கூட மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மக்களுக்காகவே வாழ்ந்தவர். இவரது உந்துதல் இன்றைய இந்தியாவுக்கும் உலகத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பதில் எந்த ஒரு ஜயமும் இல்லை.

Share:

ஆசிரியர்கள் கைது - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம்!!


நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற போராடிவரும் ஆசிரியர் மீதான தமிழக அரசிள் கைது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம். 

சம வேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி கடந்த எட்டு நாட்களாக போராடி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை தமிழக அரசு ஏற்க மறுத்து சமவேலைக்கு சமஊதியம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய மூவர் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு சமவேலைக்கு சமஊதியம் என்ற கோட்பாட்டினை அமல்படுத்த மறுக்கும் செயல்பாடாக , தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கருதுகிறது.


 இத்தகைய குழு அமைக்கும் நடவடிக்கையினை கைவிட்டு போராடி வரும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமெனவும் , உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீதான கைது தமிழக அரசின் கைது நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க குமலும் வேண்டுகிறோம்.

 சமவேலைக்கு சம ஊதியம் வழங்கி உரிய ஆணைகளைப் பிறப்பிக்க தமிழக அரசை , தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Share:

3, 6, 9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS ) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் இணைப்பு பள்ளிகளின் விவரம்!



27047 பள்ளிகளுக்கு -3, 6மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் இணைப்பு பள்ளிகளின் விவரம்
It has been planned to conduct the State Educational Achievement Survey ( SEAS ) , 2023 for the sampled students of sampled schools of grades 3 , 6 and 9 in all districts on 3rd November , 2023. In this regard , the following personnel are to be involved responsibilities are also furnished .

State Educational Achievement Survey (SEAS), 2023- Identification of Personnel and Their Roles and Responsibilities- Sent Reg ...

இணைப்பு

SPD Proceedings - Click here

School Details - Click here

Students Details - Click here


Share:

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீண்டும் கைது!


ஊதிய முரண்பாட்டை சரிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து மாலை விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நேற்று இரவு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுடன் கல்வித் துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், உடன்பாடு ஏற்படவில்லை. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலிலும், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஆசிரியர் சங்கங்களின் சில கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, ‘இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 3 பேர்குழு அமைக்கப்படும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.2,500 உயர்த்தப்படும்’ என்பது உட்பட 5 அறிவிப்புகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.

அரசின் நிதிநிலை கருதி, போராட்டத்தை முடித்துக் கொண்டுஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்கமறுத்து போராட்டத்தை தொடர்வதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, அன்று இரவேஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு, டிபிஐ வளாகம்முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸார் நேற்று அதிகாலை5 மணி அளவில் எச்சரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வலியுறுத்தியும் கலைந்து செல்லாததால், ஆசிரியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனத்தில் ஏற்றினர்.

அவர்களை ஷெனாய் நகர், ஆயிரம்விளக்கு, புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர் என வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று, சமூகநல கூடங்களில் அடைத்தனர். அப்போது மயக்கமடைந்த சில ஆசிரியர்கள்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளுடன் இருப்பவர்கள் மட்டும் ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

சமூகநல கூடங்களில் இருந்தவாறே தங்களது போராட்டத்தை தொடர்வதாக ஆசிரியர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். இங்கிருந்து விடுவிக்கப்பட்டாலும், மீண்டும் ஒன்றுதிரண்டு தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

இதுபற்றி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘சம வேலைக்கு சமஊதியம் என்ற எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இதில் வெற்றி பெறாமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்’’ என்றார்.

இதற்கிடையே, காவல் துறையின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

3 சங்கங்கள் தற்காலிக வாபஸ்:

சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக நேற்று தெரிவித்தனர்.

முன்னதாக, சென்னையில் சமூகநல கூடங்களில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Share:

TET தகுதித்தேர்வு அரசாணை ரத்து, பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2000 சம்பள உயர்வு : 2 கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை முடிவு!


ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2000 சம்பள உயர்வு அளிக்க முடிவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் கல்வி வளாகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இரவு பகலாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

முடிவில் தமிழ்நாடு முதல்வரிடம் உங்கள் கோரிக்கை குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறி கல்வித்துறை அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று கூறி பிடிவாதமாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இந்த நிலையில், போராட்டத்தின் ஒரு கோரிக்கையான பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அவர்கள் மாதம் ரூ.10,000 ஊதியம் பெற்று வரக்கூடிய நிலையில், ரூ.2000 உயர்த்தி ரூ.12,000 ஆக வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு கோரிக்கையான 2013ல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையும் ரத்து செய்யப்பட உள்ளது. அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த 2 கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Definition List

header ads

Unordered List

Support