CCE GRADE XL SOFTWARE
CCE GRADE XL SOFTWARE
🛑 *TERM-1 CCE GRADE XL SOFTWARE*
🌹 *ஒரு முறை மாணவர் பெயர்,FA(A),FA(B)&SA மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்தால் போதும்.*
👉 *5 நிமிடங்களில் CCE மதிப்பெண் பதிவேடு தயார்*
👉 *பாட ஆசியர் மற்றும் வகுப்பாசிரியர் பதிவேடு அனைத்தும் A4 SHEET-ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்*
👉 *60 மாணவர்கள் வரை பதிவு செய்து கொள்ளலாம்.
EMIS & TNSED பற்றிய புதிய தகவல்கள்!!!
EMIS & TNSED பற்றிய புதிய தகவல்கள்!!!
EMIS தகவல்கள்:
1. TNSED attendance என்ற புதிய செயலி வருகையை பதிவு செய்வதற்காக மட்டும் வர உள்ளது. (This will be resolved attendance not marked issues)
2. App version - will be updated every 2nd and 4th week of saturday if necessary.
3. Leave application module - Edit வசதியுடன் வர இருக்கிறது.
Currently Available modules:
4. Health module : அனைத்து அரசு பள்ளிகளும் பதிவு செய்து முடிக்க வேண்டும். எந்த பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் screening செய்து முடித்துள்ளீர்களோ அந்த பள்ளிகளுக்கு மட்டுமே Medical Team oct -10 லிருந்து வர உள்ளனர்.
5.library module : அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் assign செய்யப்பட்டிருக்க வேண்டும்.
6. School stock: இன்று முதல் தங்கள் பள்ளிக்கு எந்த பொருள் வாங்கினாலும் / பெறப்பட்டாலும் உடனடியாக எமிஸில் அன்றே பதிவு செய்திட வேண்டும். பழைய stock பதிவிட வேண்டாம்.
7.Tech infra : தங்கள் பள்ளியில் உள்ள கணினி, லேப்டாப், புரஜெக்டர், etc., சார்ந்த தகவல்கள் இந்த ஆண்டிற்கு update செய்யப்பட வேண்டும். (கடந்த ஆண்டு பதிவு செய்ததை தற்போது புதுப்பிக்க வேண்டும்) .
8. SNA: SNA account details 29.9.22 க்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும்.
9. Events and tours:
பள்ளிகளில் கொண்டாடப்படும் முக்கிய தினங்கள், சிறப்பு நிகழ்வுகள், சுற்றுலா ஆகியவை சார்ந்த தகவல்கள் புகைப்படத்துடன் எமிஸில் அன்றே பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
10. Clubs: தங்கள் பள்ளியில் செயல்படுத்தப்படும் clubs( Scout, NSS, NCC, JRC, etc.,) தகவல்கள், அதற்கான incharge Teacher - assign செய்யப்பட வேண்டும்.
பிறகு club incharge Teacher மாணவர்களை tag செய்யப்பட வேண்டும்.
11. Sanctioned post : பள்ளியில் அரசு ஆணைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் பாட வாரியாக மற்றும் காலிப் பணியிடம் விபரங்கள் எமிஸில் பதிவு செய்யப்பட வேண்டும் .
12. Students Profile - ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கு ஆதார் எண் students profile- ல்
Update செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவல்கள் ஒவ்வொரு வருடமும் தொடர் நிகழ்வாக எடுத்துக்கொண்டு நினைவூட்ட லுக்கு இடமளிக்காமல் உடனுக்குடன் எமிஸில் பதிவு செய்திட தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
15.10.2022- அன்று CRC - கூட்டம் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் !!!
SMC கூட்டம் - 30.09.2022 - ஆசிரியர்கள் செய்யவேண்டியது என்ன? - Proceedings!!!
SMC கூட்டம் - 30.09.2022 - ஆசிரியர்கள் செய்யவேண்டியது என்ன? - Proceedings
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் - 30.09.2022
நடைபெறுவதற்கான வழிமுறைகள்
1. 30.9.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாநில திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடைய செயல்முறைகளின் படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3. அழைப்பிதழ் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
4. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்கள் வருகையை TNSED Parents ஆப்ல் வருகையை அன்றைய தினமே பதிவு செய்தல் வேண்டும்.
5. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி மேலாண்மை குழு தலைவர் தொலைபேசி எண் மூலம் (Username & Password) வருகை பதிவை update செய்தல் வேண்டும்.
6. மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டப் பொருட்களை அன்றைய தினம் தீர்மானமாக இயற்றப்பட வேண்டும்.
7. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அக்டோபர் 02.10.2022 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
8. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் ஏதாவது ஒன்றினை (பள்ளி செயல்திட்டம் சார்ந்து ) பள்ளி மேம்பாட்டு திட்ட TNSED parents app-ல் அன்றைய தினமே பதிவேற்றம் செய்திட வேண்டும்.
9. அனைத்து செயல்பாடுகளுக்குமான காணொளி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, அதைப் பின்பற்றி தலைமையாசிரியர்கள் பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை update செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
10. அனைத்து தலைமை ஆசிரியர்களும் TNSED_ Parents app-ல் உறுப்பினர்களுடைய பெயர் பதிவை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்களுடைய பெயர்கள் விடுபட்டு இருந்தால் SCHOOL EMIS ல் login செய்து SMC Reconstitution சென்று பெயர்களை பதிவேற்றம் செய்திட கொள்ளப்படுகிறார்கள்.
11. TNSED parents app i login ஆகவில்லை என்றால் பள்ளி udise நம்பர் உடன்
வட்டார வள மையத்திற்கு மதியம் 2 மணிக்குள் தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
12. ஒரே தொலைபேசி எண் இரண்டு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு (தலைவர், தலைமை ஆசிரியர்) update செய்யப்பட்டிருந்தால் username does not exist என்று வரும்.
13. மேற்கண்ட விவரங்களை உடன் சரி பார்த்திட அனைத்து அனைத்து அரசு வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
14. பள்ளி மேலாண்மை குழு கூட்ட நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
மேற்கண்ட வழிமுறைகள் அனைத்து வகை பள்ளிகளிலும் நடைபெறுவதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் மாவட்டம்.
தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை அட்டவனை - பள்ளி மீண்டும் திறப்பு எப்போது பார்க்கலாமா?
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்.13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காலாண்டுத் தோ்வு முடிவடைந்து அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து பின்வருமாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்படுகிறது. செப்.30-ஆம் தேதி காலாண்டுத் தோ்வு முடிந்தவுடன் அக்.1முதல் அக்.5 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
‘எண்ணும் எழுத்தும்’ முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடு செய்யும் விடுப்பு அளிக்குமாறு ஆசிரியா் சங்கங்களும், ஆசிரியா்களும் தொடா்ந்து கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அக். 6, 7, 8 ஆகிய மூன்று நாள்களும் ஈடு செய்யும் விடுப்பாக கருதப்படும் (மீதமுள்ள இரு நாள்கள் பின்பு ஈடு செய்யப்படும்).
6th - 12th வகுப்புகளுக்கு அக்.10:
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு அக். 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகளை கையாளும் ஆசிரியா்களுக்கு அக்.10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கும் மட்டும் அக்.13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளனா்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு!!!
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு!!!
![]() |
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு!!! |
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி கல்வித்தரத்தை உயர்த்த அறிவுரை வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை 50 முதல் 60 சதவீதம் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய வகுப்புகளில் அவர்கள் பாடம் நடத்துகின்றார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தொடக்க அனுமதி ஆணை பெறாத தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாததை உறுதி செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் 12 பள்ளிகளில்:
அரசின் விதிகளை பின்பற்றி பள்ளிகளுக்கு தொடர்ந்து அங்கீகாரத்தை புதுப்பித்து ஆணை அளிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மாதம் குறைந்தபட்சம் 12 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டார். போக்சோ தொடர்பான புகார்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி வருகின்றனர். அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள சிவகங்கை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தரவு:
செப்டம்பர் 16,17-ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் ஆலோசனை நடத்தபட்ட நிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படக்கூடிய தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாததை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதை தனியார் பள்ளிகளை பொறுத்த வரை அந்த கட்டண குழுவிற்கு அனுப்பி அந்த கட்டண குழுவானது நிர்ணயிக்கக்கூடிய தொகையை CEO மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ததன் பின்பாகவே பள்ளிகளில் தரவேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் அந்த பள்ளியினுடைய கட்டிட உறுதி தன்மை சரியாக செயல்படுகிறதா என்று ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு பள்ளிக்கும் 16 இலக்கமாக கொடுக்கப்பட்டிருக்ககூடிய EMIS என்ற எண் என்பது மாணவர்கள் எளிதாக மனதில் வைக்கக்கூடிய நிலையில் இல்லை என்றும் தற்போது தொலைப்பேசி எண் போலவே 10 இலக்கங்கள் ஆன எண்களாக மாற்றப்பட்டிருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள், இடைநிலை அதைப்போல தொடக்கக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கென தனிதனியாக கொடுக்கப்படிருக்ககூடிய அந்த அலுவலகங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருகிறது.
அதைப்போல மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ள மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க வேண்டும் என்றும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக வகுப்புகள் நடத்தி அவர்களுக்கு எந்த பாடம் புரியவில்லை என்பதை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. இவை அனைத்தையும் முழுமையாக பின்பற்றி மாணவர்களின் கல்வி தரத்தையும், தேர்ச்சி விதத்தையும் அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
தொடக்கக் கல்வி - கள அளவில் நிர்வாக மறுகட்டமைப்பு - ஒப்படைக்கப்பட வேண்டிய பணியிடங்களைக் கொண்டு புதிய பணியிடங்கள் உருவாக்கம் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் - 58 மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) பணியிடங்கள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை - டிஆர்பி தரப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என டிஆர்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு முடித்து வைக்கப்பட்டது. சீர் மரபினர் நலச்சங்க தலைவர் ஜெபமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான தகுதியானோர் பட்டியல் கடந்த ஆக. 28ல் வெளியானது. இதில், எம்பிசி, எம்பிசி (வன்னியர்) மற்றும் எம்பிசி - சீர்மரபினர் என தனித்தனியாக மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். ஏற்கனவே எம்பிசி பட்டியலில் இருந்து வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை கருத்தில் கொள்ளாமல் தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் பாடவாரியான கட்-ஆப் முறை கணக்கிடப்படவில்லை. எனவே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான பட்டியலை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதேபோல் மேலும் பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ‘‘சம்பந்தப்பட்ட நியமனங்களில் வன்னியர் உள்இடஒதுக்கீட்டின்படி 10.5 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தான் பொதுவான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில், எந்த விதிமீறலும் இல்லை’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுக்களை முடித்து வைத்தார்.