Daily TN Study Materials & Question Papers,Educational News

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் பணிப்பதிவேடு விவரங்களை பதிவேற்ற கூடுதல் அவகாசம் - வரும் 21ம் தேதி மீண்டும் முகாம் நடத்த உத்தரவு!

ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணிப்பதிவேடு தகவல்களை 01.07.2023-க்குள் சரிபார்த்துக்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.


ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணிப்பதிவேடு தகவல்களை 01.07.2023-க்குள் சரிபார்த்துக்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.
 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடு ( SR ) ஈட்டிய விடுப்பு , மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப் பட்டுள்ளதை உறுதி செய்தல் -அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள். 

தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களது பணிப்பதிவேடுகளில் ஈட்டிய விடுப்பு , மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திட வழங்கப்படுகின்றன.
Share:

கண்களால் கணினி இயக்கம்; ஆச்சர்யப்படுத்தும் பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள்!

கண்களால் கணினி இயக்கம்; ஆச்சர்யப்படுத்தும் பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள்!



லண்டன் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர், இந்த இரு மாணவர்களுக்கும் உதவி வருகிறார். கண்களால் மொபைல்போனை இயக்கும் செயலி மற்றும் பொருள்களை வாங்கும் திட்டப்பணிக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். January 17, 2023 by அ.ஜேம்ஸ் ப்ரடொலின் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்கை முன் மாதிரியாகக் கொண்டு, கண்களால் கம்ப்யூட்டரை இயக்கும் செயலியை உருவாக்கியுள்ளார்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் சி. கிஷோர் மற்றும் க.சிவமாரிமுத்து.

ஆசிரியை சுமித்ராவுடன் மாணவர்கள் இம்மாணவர்கள், ஒரு மாத காலம் தீவிரமாக முயற்சி செய்து, தாங்களாகவே பைத்தான் குறியீட்டு முறையை கற்றுக் கொண்டுள்ளனர். பள்ளியின் கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் பைத்தான் குறியீட்டு முறை மூலம், மாற்றுத்திறனாளிகள் எளிதாகக் கண்களால் கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பயன்படுத்தும் வகையில், சொந்தமாக செயலியை உருவாக்கியுள்ளார்கள். மாணவர்களின் இந்த படைப்பானது, தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், 2022 நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற ஓப்பன் ஹவுஸ்-2022 அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று, சிறந்த படைப்பாளருக்கான விருதை மாணவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. இதனையடுத்து, லண்டன் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர், இந்த இரு மாணவர்களுக்கும் உதவி வருகிறார். கண்களால் மொபைல்போனை இயக்கும் செயலி மற்றும் பொருள்களை வாங்க, இணையதள குக்கீஸ் பயன்படுத்தும் செயலி உருவாக்கும் திட்டப்பணிக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.

பெற்றோருடன் மாணவர்கள் மாணவர்கள் சி. கிஷோர் மற்றும் க.சிவமாரிமுத்து இருவரும் கூறுகையில், ``திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு புதிய கற்றல் முறை (Digital Learning Management System) ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். பழைய கம்ப்யூட்டரை கொண்டே கண்களால் கம்ப்யூட்டரை இயக்கும் செயலியை உருவாக்கியுள்ளோம். புதிகாக உயர் ரக கம்ப்யூட்டர் வாங்க உதவியை எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு கிடைத்தால், எதிர்காலத்தில் செயலியின் பாதுகாப்பு அம்சமாக தனி ஒரு நபர் மட்டுமே கண்களை கொண்டு கம்ப்யூட்டரை இயக்கும் வகையில் செயலியை மாற்ற முடியும். ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள கண்களின் தரவுகளை கொண்டு பணம் எடுக்கும் இயந்திரங்களில் பாதுகாப்பு அம்சத்தை உயர்த்தும் செயலியையும் உருவாக்கும் எண்ணம் உள்ளது’’ என்றனர். மேலும் இதே பள்ளியின் மாணவர்கள் கே. லக்ஷ்மி காந்தன் மற்றும் எஸ். வரதராஜன் இருவரும், குரல் மூலம் எந்த மொழியிலும் எவ்வித பேச்சு உச்சரிப்பில் பேசினாலும் கம்ப்யூட்டர் செயல்படும் வகையில் `ஜார்விஸ்’ என்ற செயலியை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Free coaching class for Competitive Examinations - District Employment and Career Guidance Centre!

Free coaching class for Competitive Examinations - District Employment and Career Guidance Centre!


Honble Minister for Youth Welfare and Sports Development inaugurated the free coaching class for Competitive Examinations organised by the District Employment and Career Guidance Centre at Presidency College

Share:

தை அம்மாவாசை 2023: வருகிறது தை அமாவாசை: என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்?

வருகிறது தை அமாவாசை: என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்? Thai Amavasai 2023: Thai Amavasai is Coming: When to Offer Tarpan?


Thai Amavasai Tharpanam: தை அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படும்.

2023ம் ஆண்டு பிறந்துள்ள தை மாதத்தில் அடுத்தடுத்து பல முக்கியமான நாட்கள் பிறந்து வருகிறது. தை என்றாலே சிறப்பு மிக்க மாதமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 17-ந் தேதிதான் சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது. இந்த நிலையில், நாளை மறுநாள் அதாவது வரும் 21-ந் தேதி தை அமாவாசை(Thai Amavasai) தினமாகும். தை அமாவாசை தினமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.


தை அமாவாசை:


நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாட்களில் ஒன்றாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கருதப்படுகிறது. சிறப்பு மிகுந்த இந்த நாட்களில் நாளை மறுநாள் வரும் தை அமாவாசை தினத்தில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படும்.


தை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு திதி எனப்படும் தர்ப்பணம் அளிப்பதற்கு காலை 6.17 மணி முதல் அன்று நள்ளிரவு அதாவது 22-ந் தேதி அதிகாலை 2.22 மணி வரை உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில்தான் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும். நாம் இந்த தை அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடையவதாக நம்பப்படுகிறது.

தர்ப்பணம்:

இந்த தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளித்தால் மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தை அமாவாசை தினத்தில் ஏழை, எளிவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் வரும் தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல, ஏழை,எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானம் செய்வது மிகவும் நல்லது ஆகும். தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் நீராடி காலை முதல் தர்ப்பணம் அளிப்பார்கள். இதனால், நாளை மறுதினம் தர்ப்பணம் அளிக்கும் இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தை அமாவாசை தினத்தில் நமது மூதாதையர்களை நினைவுபடுத்தும் விதமாக தாத்தா, கொள்ளுதாத்தா, எள்ளுதாத்தா, பாட்டன், பூட்டன் என நமது தலைமுறையினரையும் நினைவில் கொள்ள வேண்டும். தங்களது சக்திக்கு ஏற்ப தர்ப்பணம் செய்வது நல்லது ஆகும்

Share:

TNPSC - கணக்கு அலுவலர் நேர்முக தேர்வு - அறிவிப்பு!

TNPSC - கணக்கு அலுவலர் நேர்முக தேர்வு அறிவிப்பு!



கருவூலத் துறை கணக்கு அலுவலர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணியில் அடங்கிய, கணக்கு அலுவலர் நிலை - -3 பணியில், 23 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு அக்டோபரில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தேர்ச்சி பெற்ற வர்களின் விபரங்கள் டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜன. 25ம்தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என,டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
Share:

TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்!

TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்!



முதலில் TNSED App - individual login செய்யவும்


2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.

3) Apply leave என்பதை கிளிக் செய்யவும்

4) திரையில் "Enter leave balance" என்ற option வரும்

5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும்

6) பிறகு "compensatory leave" என்ற option வரும்.அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff),எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும்

7)  EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.

8) மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

  1. 2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்
  2. 5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்
  3. 10 முதல் 15  வருடங்களுக்கு 270 நாட்கள்
  4. 15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்
  5. 20 வருடங்களுக்கு மேல்  540 நாட்கள்

ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.
உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 9 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதி 180 நாட்கள் அவர் எடுத்த மருத்துவ விடுப்பு 30 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.

180-30=150 என்று பதிவு செய்ய வேண்டும்.ஆசிரியரின் பணிகாலத்திற்கேற்ப இது மாறுபடும்.

9) அடுத்து RL மதச்சார்பு விடுப்பு எப்படி பதிவு செய்வது?மொத்தம்3 மதச்சார்பு விடுப்புகள் நீங்கள்  எடுத்த விடுப்பு நாட்கள் 2 எனில் 3-2=1 என்று குறித்துக்கொள்ளவும்.

10) இறுதியாக "submit" கொடுத்தால் நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும்,பிறகு நாம் விடுமுறைக்கு பதிவு செய்து கொள்ளலாம்!

குறிப்பு :


தற்போதுவரை இந்த வசதி அப்டேட் செய்யப்படவில்லை. அப்டேட் ஆனவுடன் பதிவு செய்யவும்.

Share:

அரசுப் பள்ளிகளுக்கான NSS நிதியை வங்கியில் செலுத்த திட்டம்!

அரசுப் பள்ளிகளுக்கான NSS நிதியை வங்கியில் செலுத்த திட்டம்!



அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டத்துக்கு (என்எஸ்எஸ்) மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டு முதல்என்எஸ்எஸ் நிதியை பள்ளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதற்கு மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. இதற் காக அரசுப் பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதன்படி, என்எஸ்எஸ் திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு ஜன.20-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.


மேலும், இதுசார்ந்து மறு உத்தரவு வரும் வரை என்எஸ்எஸ் வங்கிக் கணக்குகளை எந்தக்காரணம் கொண்டும் முடிக்கக் கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளுக்கு என்எஸ்எஸ் நிதி தாமதமின்றி துரிதமாக சென்று சேரவும், தவறுகள் நடைபெறுவதை தவிர்க்கவும் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

12th Internal Mark Code List 2022-2023 - All subjects

12th Internal Mark Code List 2022-2023 - All subjects

12th Internal Mark Code List 2022-2023 - All subjects

இந்த 12th Internal Mark Code List 2022-2023 - All subjects டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

11th Internal Mark Code List 2022-2023 - All subjects

11th Internal Mark Code List 2022-2023 - All subjects

11th Internal Mark Code List 2022-2023 - All subjects

இந்த 11th Internal Mark Code List 2022-2023 - All subjects டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ்!

பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ்!


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக திருவாரூரில் பசுமை பள்ளித் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை. பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் தற்போது பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா காலத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய, மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் படிப்படியாக மற்ற பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பசுமை பள்ளி திட்டம் முதற்கட்டமாக 500 பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளது. மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மட்டுமின்றி நடுநிலைப் பள்ளிகளிலும் பசுமை பள்ளி திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

Share:

Definition List

header ads

Unordered List

Support