பப்பாளி ஃபேசியல் - Papaya facial

  வீட்டில் இருந்த படியே பேசியல் ...முகம் பளபளனு இருக்க பப்பாளி பேஸ்மாஸ்க்




ஒவ்வொரு பெண்களுக்கும் தன் அழகுல அதிக கவனம் இருக்கும் .முக்கியமாக முகத்தில் உள்ள அழகு மேலே தான் ஆர்வம் அதிகம் .செயற்கையாக கிடைக்கக்கூடிய அழகை விட இயற்கை பொருளை பயன்படுத்தி வரக்கூடிய அழகுக்கு தான் தனி மவுசு...இந்த பதிவுல நாம எப்படி வீட்டிலயே பேசியல் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்.முகம் ஜொலிக்க பப்பாளி பேசியல் ...தேவையான பொருட்கள் :

காய்ச்சாத பால்

பப்பாளி பழக்கூழ்



ஃபேசியல் செய்யும் முறை :

மசாஜ் செய்யும் போது முகத்தில் மேல் நோக்கி செய்ய வேண்டும். பாலைப் கழுத்திலிருந்து முகம் வரை தடவி, பின் பஞ்சைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். பப்பாளி கழுத்து மற்றும் முகம் முழுவதும் பூசி கழுத்திலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும் மீது விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்ந்தாற் போல் வைத்து செய்ய வேண்டும்.


மசாஜ் செய்யும்போது எந்த காரணத்தைக் கொண்டும் நடுவில் கையை எடுக்காமல் செய்யவேண்டும். அவ்வாறு எடுக்க நேரிட்டாலும் ஒரு கை முகத்திலேயே இருக்க வேண்டும். முகம் முழுவதும் நுனி விரல்களைக் கொண்டு மெதுவாக தட்டிவிட வேண்டும். மசாஜை கழுத்திலிருந்து ஆரம்பித்து விரல்களை மெதுவாக மேல்நோக்கி தாடைக்கு கொண்டு வரவேண்டும்.


தாடையின் நடுப்பகுதியிலிருந்து பக்கவாட்டில் செய்ய வேண்டும். தாடையிலிருந்து மேல்நோக்கி கன்னப்பகுதிகளில் செய்ய வேண்டும். உதட்டினைச் சுற்றியும், உதட்டின் ஓரங்களிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.முதல் மூன்று விரல்களைக்கொண்டு சிரிப்பு வரிகளின் மீது மசாஜ் செய்ய வேண்டும்.


பப்பாளி ஃபேசியல்

கன்னத்தில் முதல் மூன்று விரல்களைக் கொண்டு கிள்ளியும் மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் மேலும், மூக்கின் ஓரங்களிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். கண்களுக்கு நடுவில் குறுக்காக முதல் விரலைக்கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். புருவங்களையும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். புருவங்களை பிடித்தும் விட வேண்டும்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...