தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Kalvi TV :
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டில் ஆன்லைன் வழிக்கல்வி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து வீரியம் செலுத்தி வந்ததால் தமிழக அரசு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தது.
மேலும் மற்ற வகுப்பு மாணவர்களும் தற்போது அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை அடுத்து தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் மாணவர் சேர்க்கை போன்ற பணிகள் அனைத்தும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தற்போது பள்ளிகள் திறக்கும் எண்ணம் இல்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் நாளை முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளது. புதிய வீடியோக்கள் அடங்கிய பாட தொகுப்பை நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகளையும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.