அரையாண்டுத் தேர்வு விடைத்தாள் திருத்த பணி - விரைவாக முடிக்க உத்தரவு!!

அரையாண்டுத் தேர்வு விடைத்தாள் திருத்த பணி - விரைவாக முடிக்க உத்தரவு!




அரசு பள்ளிகளில், அரையாண்டு தேர்வு விடைத் தாள்களை, உடனுக்குடன் திருத்தி முடிக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இம்மாதம், 16ம் தேதி அரையாண்டு தேர்வு துவங்கியது; 23ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின், 24 முதல் ஜன., 1ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை. ஜன., 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், அரையாண்டு தேர்வு நடக்கும் போது, ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வு முடிந்ததும், அரசு பள்ளி மாணவர்களுக்கான விடைத்தாள்களை, உடனுக்குடன் மதிப்பீடு செய்து முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடைசியாக தேர்வு நடந்த இரண்டு பாடங்களை தவிர, மற்ற பாடங்களுக்கான விடைத்தாள்களை, 24ம் தேதிக்குள் திருத்தி முடிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, அவர்களின் மதிப்பெண்களை தெரிவித்து, மதிப்பெண் குறைந்த பாடங்களில், அவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறும் வகையில், பயிற்சியை துவங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...