பொங்கல் பரிசு அப்டேட்.. வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு அரசின் புதிய அறிவுறுத்தல்!

பொங்கல் பரிசு அப்டேட்.. வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு அரசின் புதிய அறிவுறுத்தல்!

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 அளிக்கும் திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்காக புதிய அறிவுறுத்தலை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பரிசு:

தமிழகத்தில் 2023ம் ஆண்டு பொங்கல் பரிசு குறித்த பல்வேறு அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத்தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தொகையானது நேரடியாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் வங்கி இணைப்பு

இதன்காரணமாக, ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்ணை தமிழகத்தில் 14,84,582 ரேஷன் அட்டைதாரர்கள் இணைக்காமல் உள்ளதாகவும், இவர்களின் விவரங்களை சேகரிக்கவும் அரசு முன்னதாக அறிவுறுத்தியிருந்தது. ஆனால் தற்போது, வங்கி கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க மட்டும் அதிகாரிகள் அறிவுறுத்தினால் போதும் என்றும், விவரங்களை சேகரிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கி கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments