தமிழக மாணவர்களுக்கு ஷாக்.. சனிக்கிழமையும் பள்ளிகள் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

சென்னையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு மழையின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நாள்:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் மழை தீவிரமடைந்து இரவு பகலாக கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் சென்னை நகரம் பெரும் பாதிப்புக்கு ஆளானது.

மேலும் மாணவர்களின் நலன் கருதியும் சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் இயங்கி வரும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை (டிச.03) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று பள்ளிகள் திங்கள் கிழமை பாட வேளையின் படி செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments