Daily TN Study Materials & Question Papers,Educational News

UCIL ஆணையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Electrician காலிப்பணியிடங்கள்!


Uranium Corporation of India Limited 
Recruitment 2023 - Apply here for Electrician Posts - 40 Vacancies

Uranium Corporation of India Limited .லிருந்து காலியாக உள்ள Electrician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

Uranium Corporation of India Limited

பணியின் பெயர்: 

Electrician

மொத்த பணியிடங்கள்: 

40

தகுதி: 

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதியம்: 

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.7,000/- முதல் ரூ.9,500/- வரை ஊதியமாக(உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை: 

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Notification for Uranium Corporation of India Limited 2022: Download Here

Apply: Apply Now


Share:

SMC MEETING - 9.6.23 அன்று பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


SMC MEETING - 9.6.23 அன்று பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

இணைப்பு:
மாதிரி அழைப்பு கடிதம்
பள்ளி மேலாண்மை குழு கூட்ட நிகழ்வுகள்

SMC meeting proceedings June 2023 - Download here


Share:

TET - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு நாளை வெளியாகிறது!

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என தகவல்.



Share:

புதுச்சேரியில் சிபிஎஸ்இ-க்கு மாறும் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம்: முதல்வர் ரங்கசாமி!


புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் அமலாகும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி தந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருந்து அரசாணை பெறப்பட்டு விரைவில் அரசாணை புதுச்சேரியில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


புதுவை அரசு பள்ளிகளில் 1 முதல் 6ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலும், 11ம் வகுப்பிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகிறது. அடுத்தக் கல்வியாண்டில் 10, 12ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடபுத்தகம் வழங்க அரசு கொள்முதல் செய்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பாட வகுப்புகளை நடத்தும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.


அதேநேரத்தில் தமிழ் விருப்ப பாடமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் ஆசிரியர்களும், மாணவர்களும் தயாராகாத சூழ்நிலையில் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது கல்வியை பாதிக்கும் என்றும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக விரிவான செய்தி இந்து தமிழ் திசையில் வெளியானது.


இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழை கட்டாயமாக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள் சார்பில் கல்வித் துறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த சமூக அமைப்புகள் முடிவு எடுத்தனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் தேவை என்று வலியுறுத்தி மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்தனர். அதையடுத்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினர்.


அதேபோல அதிமுக மாநிலச் செயலர் அன்பழகனும் இதேக் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினார். துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித் துறைச்செயலர் ஜவகர் ஆகியோருடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசித்தார்.


அதையடுத்து முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் இருந்து அரசாணை பெறப்பட்டு விரைவில் அரசாணை வெளியிடப்படும்" என்று உறுதியளித்தார்

Share:

சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் 5 ஆண்டுக்கால சட்டப் படிப்புகளில் 2,004 இடங்கள் உள்ளன. இதேபோல், பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டுக்கால சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன.


நடப்பு கல்வியாண்டு (2023-24)மாணவர் சேர்க்கை இணையதளவிண்ணப்பப் பதிவு கடந்த மே 15-ம்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் http://tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும்படி பல்கலை. பதிவாளர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்

Share:

NCERT - பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கம்!

தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடமும் 10ம் வகுப்பு நூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாட நூலில் இருந்து மூலகங்கள் பற்றிய பாடத்தையும் என்சிஇஆர்டி நீக்கியுள்ளது.

Share:

நேரடி இரண்டாமாண்டு பி.இ. , / பி.டெக் . , பொறியியல் பட்டப்படிப்பு சேர்க்கை 2023-24!

தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டயப் படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 மாணாக்கர்கள் இணையதள மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . விண்ணப்பிக்கும் முறை : www.tnlea.com www.accet.co.in www.accetedu.in என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.



Share:

ஜூன் 13-ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தா்ஹாவில் சந்தனக்கூடுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவினை முன்னிட்டு வருகிற ஜூன் 13 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை ஈடுசெய்ய வருகிற ஜூன் 24 ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார்.


இங்கு ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற ஜூன் 19-ஆம் தேதி நிறைவடைகிறது.


ஜூன் 12- ஆம் தேதி இரவு 849-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்கி, மறுநாள் 13-ஆம் தேதி அதிகாலையில் தா்ஹாவை அடைகிறது.

Share:

இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE!


இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE!

VERSION 0.0.60
UPDATED ON 31-05-2023

Whats new?
Volunteer skills interest module added

👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk

Share:

1,105 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை!


தமிழகத்தில், 1,105 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல், புதிய கல்வி ஆண்டில் பள்ளிகளை நடத்துவதற்கான நிர்வாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், 46 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

இந்த பள்ளிகளில், 2.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு சமீபத்தில், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், 1,105 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, 670 மேல்நிலை பள்ளிகளிலும், 435 உயர்நிலை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளிகளின் நிர்வாக பணிகளை மேற்கொள்வதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.


பள்ளிகளை திறந்து, வரும் கல்வி ஆண்டுக்கான பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


எனவே, பள்ளிகளில் பணிகளை கவனிக்க, மூத்த முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பொறுப்பு தலைமை ஆசிரியர் பதவி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆனால், பொறுப்பு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுபவர் தனது வழக்கமான பாடம் கற்பிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.


அதனால், மாணவர்களுக்கான கல்வி திறன் பாதிக்கப்படும் என, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


எனவே, தலைமை ஆசிரியர்களை விரைவில் நியமித்து, நிர்வாக பணிகளை சீர்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Share:

Definition List

header ads

Unordered List

Support