Daily TN Study Materials & Question Papers,Educational News

நாளை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஐந்து மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!


நாளை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஐந்து மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வேலை நாளாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரர் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்களின் சிறப்பை போற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்திலும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Share:

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆக.10-ம் தேதி வரை நீட்டிப்பு...!!

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆக.10-ம் தேதி வரை நீட்டிப்பு...!!

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ) ஜூலை பருவ மாணவர் சேர்க்கைகான கடைசி தேதி ஆக.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இக்னோவின் முதுநிலை மண்டல பொறுப்பு இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்னோ பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான ஜூலை-2023 பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி வரும் ஆக. 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளை திறந்தநிலை வாயிலாக பயில விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தின் வழியாகவும், ஆன்லைன் மூலம் படிக்க விரும்புவோர் https://iop.ignouonline.ac.in என்ற வலைதளம் மூலமாகவும் சேர விண்ணப்பிக்கலாம்.

மேலும் பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கும் அளிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 044-26618040 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share:

யுபிஎஸ்சி தேர்வரா நீங்கள்? மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..!

யுபிஎஸ்சி தேர்வரா நீங்கள்? மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2023-24 பட்ஜெட் உரையின்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இது சமீப காலமாக  சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சியாகும்.

நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.

இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக. 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆக. 17 கடைசி தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Share:

CBSE - பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு வெளியீடு...!!!

 CBSE - பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு வெளியீடு...!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 2022-23-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடத்தப்பட்டது.

அதன்படி பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் 1,20,742 பேர் துணைத் தேர்வு எழுதினர். இதில் 57,331 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 75 மதிப்பெண்ணுக்கு மேல்402 பேரும், 60 முதல் 75 மதிப்பெண்ணுக்குள் 3,101 பேரும் பெற்றுள்ளனர். அதேபோல், பொதுத்தேர்வில் பெற்றதை கூடுதல் மதிப்பெண் பெற விரும்பி முன்னேற்றத் தேர்வை 60,419 மாணவர்கள் எழுதினர். அதில் 59 சதவீதம் பேர் கூடுதல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

மேலும், 35 சதவீதம் பேர் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்ணைவிட குறைவாகவும், 6 சதவீதம் மாணவர்கள் அதே மதிப்பெண்ணையும் பெற்றுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


Share:

IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு...!!!

IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு...!

✅ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் 7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகைத் திட்டம்.


✅ இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023 அன்று நடைபெறவிருக்கும்  மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


✅ தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு  மாதம் 7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023


📌 விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

https://nmcep.tndge.org


Share:

11th Chemistry-First Mid term 2023 | Important ,original, Model | Question paper

11th Chemistry-First Mid term 2023 | Important original Model | Question paper

Chemistry

11th Chemistry-First Mid term 2023 | Important original Model | Question paper - ( Mr.Manikandan ) - English Medium Download Here

11th Chemistry-First Mid term 2023 | Important original Model | Question paper - ( Mr.Manikandan ) - Tamil Medium Download Here

Share:

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர் மரபினர் பெண் குழந்தைகளுக்கான கல்வி மேம்பாடு ஊக்குவிப்புத் தொகை (MBC / DNC Girls Scholarship Format) விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும்... (PDF Format)...!!

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர் மரபினர் பெண் குழந்தைகளுக்கான கல்வி மேம்பாடு ஊக்குவிப்புத் தொகை (MBC / DNC Girls Scholarship Format) விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும்... (PDF Format)...!!


MBC / SC Girls Scholarship Consolidation Format - Download here

MBC/DNC Girls Scholarship - Individual Student Application Format - Download here

MBC/DNC Girls Scholarship - Covering Letter Format - Download here

MBC/DNC Girls Scholarship - Consolidation Format 1 - Download here

MBC/DNC Girls Scholarship - Consolidation Format 2 - Download here

MBC/DNC Girls Scholarship - Acquittance - Download here



Share:

துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தோள் கொடுக்கும் கல்வித் துறை..!!

துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தோள் கொடுக்கும் கல்வித் துறை..!!


அரசுப் பள்ளிகளில் பயின்று, பிளஸ் 2 , 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடத்தப்பட்டது.

இவ்வாறு தேர்வெழுதிய மாணவர்கள், உயர் கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக ஐடிஐ, பாலிடெக்னிக்கில் சேர்க்கை பெறவும், பிற உயர் கல்வி வாய்ப்புகளை பெறவும், தகுந்த வழிகாட்டுதல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இதற்கான சேர்க்கை முகாம் இம்மாதம் 25 முதல் 28-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்டக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியிருந்தது

மேலும் துணைத் தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மதிப்பெண் சான்றிதழ் பெற வரும் மாணவர்களை, சிறப்பு முகாம்களில் பங்கேற்கச் செய்வதுடன், அவர்களை உடனடியாக பள்ளித் தலைமையாசிரியர் அல்லது உதவித் தலைமையாசிரியர் அல்லது நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அழைத்து வந்து, ஐடிஐ, பாலிடெக்னிக் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

துணைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் இதற்கான முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களில் 20 மாணவர்கள் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக்கில் சேர்க்கை பெற்றிருப்பதாக மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 5 அரசு ஐடிஐக்கள், தலா ஒரு மகளிர் அரசு ஐடிஐ, அரசு பாலிடெக்னிக் உள்ளது. இவைகளில் எப்படியும் முதற்கட்டமாக 75 பேர் சேர்க்கை பெறுவர் என்று தெரிவித்த அவர், “பள்ளிக் கல்வியை முடித்து விட்டு அடுத்து என்ன செய்வது என இந்த மாணவர்கள் தடுமாற்றத்தில் இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதன் விளைவாகத் தான் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ-க்களில் இந்த மாணவர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம்.

இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டும். ரூ.2 ஆயிரம் கட்டணத்தில் டிப்ளமோ படிக்கும் வாய்ப்புள்ளது. அதே போன்று ஐ.டி.ஐ படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சேர்க்கை கட்டணமாக ரூ.200 மட்டுமே பெறுகிறது. இது தவிர மாணவர்களை ஊக்கப் படுத்த ரூ.1,600 உடனடியாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது

சைக்கிள், பாடப் புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தையும் அரசே இலவசமாக வழங்குகிறது. இதுபோக மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.750 உதவி தொகையும் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி உடனடி வேலை வாய்ப்பு தருவதாக பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்.

ஐ.டி.ஐ சேர வந்த மாணவர்களிடம் இது குறித்து பேசிய போது ஒரு மாணவர், “நான் திட்டக்குடியில் இருந்து வருகிறேன். இங்கு முகாமிட்டிருக்கும் ஐடிஐ நிறுவனம் சிதம்பரத்தில் உள்ளது. நான் திட்டக்குடியில் இருந்து சிதம்பரம் செல்ல இயலாது” என்றார்.

இது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் குறித்து சுபாஷினியிடம் கேட்டபோது, “உண்மை தான், இது தொடர்பாக பள்ளி நிர்வாகங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம். உதாரணமாக சிதம்பரத்தில் உள்ள ஐடிஐக்கான தேர்வு என்றால், அதன் சுற்றுப்புற பள்ளிகளில் துணைத் தேர்வெழுதிய மாணவர்களை மட்டும் வரச் சொல்லியிருக்கிறோம். அதே போன்று, நெய்வேலி ஐடிஐ சேர்க்கை நடை பெறும் போது, அதன் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களை வரச் சொல்லியிருக்கிறோம்” என்றார்

துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள், மற்ற மாணவர்களை விட எந்த விதத்திலும் திறமையில் குறைவானவர்கள் இல்லை. அவர்களை சரியாக வழிநடத்தினால் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கி, குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்பை பெற முடியும். திட்டமிட்டு தெளிவான பாதையை அமைத்தால் சிறந்த சிறு, குறுந்தொழில் முனைவோராக முடியும். அதற்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமையட்டும்.

Share:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் செய்முறை வகுப்பு: ஆக.10 முதல் விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்.....!!!!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் செய்முறை வகுப்பு: ஆக.10 முதல் விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்.....!!!!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஆக.10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023-24-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனிதேர்வர்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல்பாடத்தில் தோல்வியடைந்தவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயரை பதிவு செய்யலாம்.

தனி தேர்வர்கள் ஆக.10 முதல் 21-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாவட்டகல்வி அலுவலரால் ஒதுக்கப்படும் பள்ளிக்கு சென்று, செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். 80 சதவீத வருகை பதிவு உள்ள தனி தேர்வர்கள் மட்டுமே 2023-24-ம் கல்விஆண்டுக்கான 10-ம் வகுப்புபொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக.10 முதல் 21-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஆக.21-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்


Share:

First Midterm Test Time table & CEO Proceedings..!!

First Midterm Test Time table & CEO Proceedings..!!

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை முதல் இடைப்பருவத்தேர்வு கால அட்டவணை, வினாத்தாள் விநியோகம் செய்தல் மற்றும் மாற்றுப்பணி ஆணை வழங்குதல் - தொடர்பாக தர்மபுரி CEO Proceedings 

 First Midterm Test Time table - 

Download here


Share:

Definition List

header ads

Unordered List

Support