நாளை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஐந்து மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!


நாளை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஐந்து மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வேலை நாளாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரர் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்களின் சிறப்பை போற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்திலும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...