எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இன்று முதல் இரண்டாம் சுற்று கலந்தாய்வு..!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இன்று முதல் இரண்டாம் சுற்று கலந்தாய்வு..!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.21) தொடங்குகிறது.

முதல் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்பிபிஎஸ், 85 பிடிஎஸ் இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டில் 648 எம்பிபிஎஸ், 818 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன.

இந்நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக தோ்வுக் குழு வெளியிட்டது. அதன்படி, இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கு தகுதியானவா்கள், திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 22-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் 24-ஆம் தேதி காலை 10 முதல் 28-ஆம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தோ்வு செய்ய வேண்டும். ஆக. 29, 30-ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொடா்ந்து, வரும் 31-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். செப்.1 முதல் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செப்.4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்” என்று மருத்துவக் கல்வி தோ்வுக் குழு தெரிவித்துள்ளது


Post a Comment

0 Comments