TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் 3373 காலிப்பணியிடங்கள் – சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்!

TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் 3373 காலிப்பணியிடங்கள் – சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்!

தமிழகத்தில் TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் காலியாகவுள்ள 3373 தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியது.

சான்றிதழ் சரிபார்ப்பு:

தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த 2022 ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீடு, தரவரிசை பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் தற்காலிக விண்ணப்பதாரர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. தற்போது 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று துவங்கியுள்ளது.

தேர்வர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். இந்த கலந்தாய்வு செப். 11ம் தேதி வரை நடைபெறும் என TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 1079 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான மூல சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு செப். 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை வரை நடைபெறும் என்று TNPSC செயலாளர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments