29.08.2023 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...!!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு , 29.08.2023 தேதி செவ்வாய்கிழமை அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை சென்னை மாவட்டத்திற்கு அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.
ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான 29.08.2023 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு , சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா , அவர்கள் அறிவித்துள்ளார் . இவ்வறிவிக்கை www.chennai.tn.nic.in என்ற இணையதள முகவரியில் உள்ளது எனவும் அறிவிக்கப்படுகிறது
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.