அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியா் காலிப்பணியிடம்..!!
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆக.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டடவியல் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்களை தற்காலிக ஆசிரியா்கள் மூலம் நிரப்புவதற்கு அண்ணா பல்கலை. முடிவெடுத்தது. அந்தவகையில் முதல்கட்டமாக கிண்டி பொறியியல் கல்லூரி(சிஇஜி ) மற்றும் குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரியில்(எம்ஐடி) உள்ள ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலை.
தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி சிஇஜி கல்லூரியில் கட்டுமான பொறியியல்(சிவில்)-2, கணிதம்-5, ஆங்கிலம்-5, இயந்திரவியல் (மெக்கானிக்கல்) பொறியியல் -3 என 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், எம்ஐடியில் ஆங்கிலம்-8, கணிதம்-4, இயற்பியல்-1 என 13 பணியிடங்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட உள்ளன. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://annauniv.edu என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கல்வித்தகுதி, ஊதியம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.