6 - 12 மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வுதான்.. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புது அப்டேட்..!!

6 - 12 மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வுதான்.. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புது அப்டேட்..!!

தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுக்கான பொதுவினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வினாத்தாளை வடிவமைத்து காலாண்டு தேர்வுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ஆண்டு இறுதியில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வு போலவே நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு முதலே பள்ளிகள் திறப்பில் கால தாமதம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நீங்கியதை அடுத்து நடப்பாண்டுதான் பள்ளிகள் கடந்த ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டது. 2023 - 24ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது.
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதனிடையே 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...