10th - பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்., நாளை முதல் விநியோகம்!

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்., நாளை முதல் விநியோகம்!

தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (ஆக.18) காலை 10 மணி முதல் வழங்கப்பட உள்ளது.

படித்த பள்ளியில்

எனவே, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

துணைத்தேர்வு

அதேபோல, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் நாளை(ஆக.18) மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், மற்றும் தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை 18ம் தேதி அன்று காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்றும் தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வர்கள் இயக்ககம் அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments